“வெளில தங்க இடம் பாக்கணும்டி” என்று யோசனையாய்ச் சொன்ன யமுனாவிடம், அடிப்பாவி, யாரை நம்பி வீட்டைவிட்டு ஓடி வந்தே?” என்றாள் விஜி மிகையான வியப்போடு.
நீண்ட சிந்தனைக்குப் பின், பிரச்சினையின் ஆழமும் மூலமும் தெரியாமல் தான் செயல்படுத்தும் எந்தத் திட்டமும் வெற்றி பெறமுடியாது என்பது தெளிவானதால் மறு நாள் அதற்கான முயற்சியில் இறங்குவதென முடிவு செய்து கொண்டு படுக்கையில் விழுந்தாள் யமுனா.
லேசாகக் கண்ணயரத் துவங்கியபோது கதவுக்கு வெளியே கங்கா அழைப்பது கேட்டது.
“அப்பா ஏதாவது ஏற்பாடு பண்ண மாட்டாராம்மா?” என்று கேட்ட தன் புதல்வியின் குழந்தைத்தனம் கங்காவுக்கு சிரிப்பை உண்டு பண்ணிற்று.
“இத்தனை வயசாச்சு. நீ சமைக்கக் கத்துக்க வேண்டாமா? பாட்டிக்கு உன் வயசில நான் பொறந்திட்டேன். நீ இன்னும் குழந்தை போல உங்கப்பாவை சாப்பாட்டுக்கு நம்பிக்கிட்டிருக்கே”
தந்தையின் பேச்சு வந்ததும், “அப்பா இன்னும் வரலையாம்மா?” என்று கரிசனமாய்க் கேட்டாள்.
“அவரை நம்பி உன்னை எப்படி விட்டுட்டுப் போறது நான், சொல்லு”
தன் அன்னையின் கவலையிலும் அர்த்தமிருப்பதாகவே பட்டது யமுனாவுக்கு. “ஒரு வாரம் லீவு போட்டுட்டு எங்கூட வர்றியா? டெல்லி சுத்திப்பாத்த மாதிரியும் இருக்கும்” என்று அன்னை கேட்டதும் வெடித்துச் சிரித்த யமுனா,
“இப்போதானே சொன்னீங்க எனக்கு வயசாச்சுன்னு. இன்னும் எத்தனை நாள் என்னை கங்காரு மாதிரி தூக்கிட்டே அலைவீங்க?” என்று கேலி செய்தாள்.
“நாளைக்கு எங்க காலேஜ் ஹாஸ்டல்ல விசாரிச்சிட்டு வர்றேன். கெஸ்டா ஸ்டே பண்ண வசதி இருக்கும்னுதான் நினைக்கிறேன்” என்று உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் யமுனா.
“குட் நைட், செல்லம்” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு அகன்றாள் கங்கா
***
மறுநாள் மதிய உணவு இடைவேளையில், “வெளில தங்க இடம் பாக்கணும்டி” என்று யோசனையாய்ச் சொன்ன யமுனாவிடம், “அடிப்பாவி, யாரை நம்பி வீட்டைவிட்டு ஓடி வந்தே?” என்றாள் விஜி மிகையான வியப்போடு.
“அடச்சீ... “ என்று அவளை அடக்கியவள் சூழ்நிலையைச் சொல்ல, “இதுக்கு எதுக்கு ஹாஸ்டல்? எங்க வீட்டுக்கு வா” என்று அழைப்பு விடுத்தாள் விஜி.
யமுனாவுக்கு அவள் வீட்டை நினைத்ததும் விக்ரமின் இறுக்கமான பிடியும் அதன் பின்னான கனத்த மௌனமும் நினைவுக்கு வர சிந்தனை வயப்பட்டாள்.
“என்ன யோசிக்கறே? அன்னைக்கு என் ரூம் இருந்த கோலத்தை நினைச்சு பயந்திட்டியா? தனியா கெஸ்ட் ரூம் இருக்குப்பா. அம்மாவும் உன்னை ரொம்ப நாளா பார்க்கணும்னு கேட்டுக்கிட்டே இருக்காங்க” என்று பேசிக் கொண்டிருந்தாலும் பின்புலத்தில் விஜியும் விக்ரம் குறித்து சிந்தித்துக் கொண்டுதானிருந்தாள். அன்றைய சந்திப்புக்குப் பின் விக்ரம் யமுனா குறித்து விசாரித்திராததும் யமுனாவும் விக்ரம் பற்றிப் பேச்செடுத்தால் கூட சற்றும் ஆர்வம் காட்டாததும் ஆறுதலாக இருக்கவே, இனி அவனால் யமுனாவுக்கு எந்தத் தொந்தரவும் வராதென்று தன்னை சமாதானப் படுத்திக் கொண்டாள் விஜி.
“எதுக்குடி வீணா தொந்தரவு பண்ணிட்டு. உங்கப்பாவும் அம்மாவும் ஏற்கெனவே ரொம்ப பிஸி. இதுல நான் வேறயா?”
“இன்னிக்கு ப்ரேக். இரு, சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வர்றேன்” என்று சமையலறைக்குள் புகுந்தாள் காவேரி.
“குட்டீஸ்லாம் எங்கே, சித்தி?” என்று கேட்டபடியே அவள் பின்னால் நடந்தாள் யமுனா.
“ட்யூஷன் போயிருக்கு ரெண்டும். உன்னை மாதிரி படிச்சா பரவாயில்லையே. அது ரெண்டும் என்னை மாதிரி மக்கா இருக்குதே” என்றாள் காவேரி சிரித்தபடியே.
“உனக்குப் பிடிச்ச அதிரசம் இருக்குடி. நேத்தைக்கு ஆனந்த பவன்ல வாங்கும்போது உன்னைத்தான் நெனைச்சிக்கிட்டேன்” என்றபடியே தட்டில் இரு அதிரசங்களையும் கொஞ்சம் மிக்ஸரையும் வைத்து அவள் கையில் கொடுத்துவிட்டு ஃபிரிஜிலிருந்து கட்டித் தயிர் எடுத்து, “வழக்கம் போல ஸ்வீட் லஸ்ஸிதானே?” என்றபடியே மிக்ஸியிலிட்டாள்.
“என் செல்ல சித்தி” என்று தன் தோளைக் கட்டிக் கொண்ட தன் அக்கா பெண்ணின் தலையில் செல்லமாய் முட்டிவிட்டு, “என்ன, வீட்ல ஒரே தகராறா?” என்றாள் சித்தி.
Hai nila, i like ur storys very much "ethanai nallay engeunthai( E N E)" is a fantastic story, i like that story very much. and this story also nice i want one information pls tell me, which date the "kannil theriyuthur thotram" will published in Rani Muthu Pls i want that story book pls..... and your last story(E N E) was published in any book? pls tell me....... i like ur way of writting.........
We use cookies on this website. By using this site, you agree that we may store and access cookies on your device. Find out more and set your preferences here . X