 |
இதழ் 387 |
 |
அக்டோபர் 20 2008
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| | | இதன் புராணக் கதை என்னவென்றால், ருத்ர தாண்டவத்தின்போது சதிதேவியின் உடலைச் சுழற்றினாராம் சிவபெருமான். அந்த உடல் பல துண்டுகளாக பூமியில் பல இடங்களில் விழுந்து சிதறியது நம் நாட்டின் நாற்புற திசைகளிலும் நான்கு சக்திகள் நம் எல்லைகளைக் காத்து வருகின்றனர். வடக்கே வைஷ்ணவ தேவி, கிழக்கே மஹாகாளி, தெற்கே கன்யாகுமரி, மேற்கே அம்பாஜி என்ற பெயர்களில் அருள்புரிகின்றனர். இந்த இடங்களில் எத்தனை இன்னல்கள் வந்தாலும் பகலவனைக் கண்ட பனி போல மறைந்து விடுகின்றன.
நாம் இப்போது மேற்கு பக்கம் இருக்கும் அம்பாஜியைப் பற்றித் தெரிந்து கொள்வோம். இந்த அம்பாஜி குஜராத் மாநிலத்தில் ராஜஸ்தான் எல்லையை ஒட்டி பனஸ்காந்தா மாவட்டத்தில் இருக்கிறாள். இவள் பெயர் ஸ்ரீஆராஸ¤ரி அம்பாஜி என்றாலும் இவளைச் செல்லமாக எல்லோரும் அம்பாஜி என்றே அழைக்கின்றனர். ஆரவல்லி மலைத் தொடர்ச்சியில் ஒரு நெடுங்குன்றம் உள்ளது. அந்தக் குன்றின் உச்சியில் இந்தப் புராதன’அம்பாஜி’ கோயில் உள்ளது.
உயரம் சுமார் ஆயிரம் அடிகள் இருக்கலாம். மலைப்பாறையில் அம்பாஜி நடந்த பாதங்கள் படிந்திருக்கின்றன. இந்தக் கோயில் மேலே ஏற படிக்கட்டுகள் உள்ளன. ஆனால் ஏறுவது மிகச் சிரமமாக இருக்கிறது.
நரசிம்மர் கோயில் சோளிங்கபுரம் படிகள் போல் மிகவும் செங்குத்தாக இருக்கின்றன. வயதானவர்கள் மற்றும் நடக்க முடியாதவர்களுக்கு ‘ரோப் ட்ராலி’ இருக்கிறது. அதில் ஏறி அமர, அது இரண்டு மலைகளுக்கு நடுவில் இயற்கையின் ஊடே செல்லும்போது உடம்பெல்லாம் சிலிர்க்கிறது. அப்போது நம்மையுமறியாமல் கடவுள் நாமஸ்மரணையில் ஈடுபடுத் தோன்றுகிறது. சுற்றி மலைகளும், செடிகளும், மரங்களும் சூழ அங்கேயே நாம் தேவியின் தரிசனம் பெற்று விடுகிறோம்!
கோவிலை அடைந்தவுடன் நாம் காண்பது ஒரு சிறு அறை. அந்த இடத்தில் ஐம்பத்தோரு ஸ்லோகங்கள் பதிக்கப்பட்ட ஒரு தங்க யந்திரம் இருக்கிறது. அங்கு அம்பாள் சிலையைத் தேடுகிறோம். அங்கு சிலையோ அல்லது படமோ இல்லை. ஆனால் அங்கே தீபஜோதியாக அணையா விளக்காகப் பிரகாசிக்கும் அகல் தீபத்தில் அம்பாளை அருவமாக தரிசிக்கிறோம். யுகயுகங்களாக அணையாமல் எரியும் ஜோதி. குன்றின் மேலிருந்து பார்த்தால் மலைச்சரிவும், பள்ளத்தாக்கும், அடர்ந்த மரங்களைக் கொண்ட காடும்.. வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
கீழேயும் இந்த அம்பாள் ஆலயம் உள்ளது. இது நகரின் நடுவில் ஸ்ரீஆராஸ¤ரி என்ற பெயரில் உள்ளது. இதற்கும் ஒரு கதை சொல்கிறார்கள். ஆதிகாலத்தில் மேலே ஏறும் பக்தர்களுக்கு பாதை சரியாக இல்லாததால் காட்டு விலங்குகளின் தொல்லை அதிகமாக இருந்ததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். ஒற்றையடிப் பாதை வழியாகத்தான் நடக்க வேண்டும். சிறிது கால் சறுக்கினாலும் அதள பாதாளத்தில் விழவேண்டியதுதான்.
இதன் புராணக் கதை என்னவென்றால், ருத்ர தாண்டவத்தின்போது சதிதேவியின் உடலைச் சுழற்றினாராம் சிவபெருமான். அந்த உடல் பல துண்டுகளாக பூமியில் பல இடங்களில் விழுந்து சிதறியது. இந்த இடத்தில் அவள் மார்பு அல்லது ஸ்தனப்பகுதி விழுந்தததாம். அது விழுந்த இடம் கப்பர் குன்று என்கிறார்கள். அப்போது அந்தக் குன்று இரண்டு பிளவானது. பிற்காலத்தில் ஒரு பகுதிக் குன்றில் அம்பாஜி ஆலயம் வந்ததாம்.
பக்தர்கள் மலையேறக் கஷ்டப்படுவதைப் பார்த்து ஒரு மன்னர் அவர்களுக்கு உதவ வந்தார். சக்தியை மனதில் நினைத்து ஒரு பெரிய தங்கத் திரிசூலம் தயாரித்தார். அதன் நீளம் பத்து அடி இருக்கும். அதைக் கப்பர் குன்றத்தில் பத்து நாட்கள் வைத்துப் பூஜை செய்தார்கள். பின் பெரிய பல்லக்கில் உலாவாக அழைத்து வந்து கீழேயே பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆனால் பல படையெடுப்புகளினால் அது சூறையாடப்பட்டது. ஆனாலும், மக்கள் அந்தக் காலியான இடத்தை வணங்க ஆரம்பித்தனர். இதனால் சிலர் இங்கு மண்ணால் ஆன அம்பாஜியை செய்து அதற்கு தினமும் விதவிதமான உடைகள் உடுத்தி அலங்காரங்கள் செய்கிறார்கள். பலவிதமான அலங்காரத்தில் அம்பாள் மின்னுகிறாள். பின்பகுதியில் மானசரோவர் என்ற தண்ணீர் பகுதியும் இருக்கிறது. காலங்கள் மாற மாற மலைக்குப் போகவும் படிகள் அமைக்கப் பெற்று, மின்சார டிராலியும் இயங்க ஆரம்பித்துவிட்டது.
காலை 5 மணியிலிருந்து ஆரம்பித்து மாலை 6 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். நவராத்திரி சமயம் கூட்டம் அலை மோதும். "ஜய மாதாகி அம்பே கி ஜய்" என்ற கோஷங்கள் நம்மையும் அறியாமல் கண்ணீரை வரவழைத்துவிடும். வினாயக சதுர்த்திக்குப் பின் வரும் பௌர்ணமி நாளை மிக விசேஷமாகக் கொண்டாடுகின்றனர். இந்தத் திருவிழாவிற்குப் "பூனம்" என்று பெயர். மக்கள் இடம் போதாமல் தெருவிலேயே உறங்குவார்களாம்.
இந்தக் கோயிலிலிருந்து சுமார் ஏழு கிமீ தூரத்தில் ஒரு சிவன் கோயிலும் உண்டு. இதைக் கோடேஸ்வர் என்று அழைக்கிறார்கள். இந்தக் கோயிலுக்கு அருகில் ஸரஸ்வதி புண்யநதி கோமுக் வழியாக வந்து கீழே உள்ள நீர்நிலைத் தொட்டியில் நிரம்பி பின் பிரவாகம் போல் ஓடுகிறது. இந்தக் காட்சியைப் பார்க்கவும் கூட்டம் சேருகிறது.
இங்கு ‘ஏகாவன் சக்தி பீட்’ என்று ஓர் ஆலயம் உள்ளது. ‘ஏகாவன்’ என்றால் ஹிந்தியில் 51 என்று அர்த்தம். இந்த சக்தி பீடத்தில் அன்னை காமாட்சி கொலு வீற்றிருக்கிறாள். ஸரஸ்வதியும் அங்கு ஓடுகிறாள். பெரிய பிரகாரத்தில் தனித்தனியாக சிறு அறைகள் கட்டப்பட்டு ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அட்சர தேவியின் சிறப்பான ரூபம் நம்மைப் பரவசப்படுத்துகிறது. இது மிகவும் அபூர்வமான படைப்பு. இந்தத் திட்டத்தை உருவாக்கியவர் ஸ்ரீகாஞ்சி மஹா முனிவர் ஸ்ரீசந்திரசேகர ஸரஸ்வதி அவர்கள். ஸ்ரீ காஞ்சி காமகோடி சேவா டிரஸ்டு ஆலயம் கட்டும் பணியை மேற்கொண்டது. 1992ல் சிறப்பாக கட்டப்பட்டு கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
இந்த இடம் அவசியம் பார்த்து அனுபவிக்க வேண்டிய இடம். சென்னை ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் வழியாகப் பயணித்து ராஜஸ்தானில் அபூ ரோட்டில் இறங்கி அங்கிருந்து சுமார் 23 கிமீ தூரம் சென்றால் அம்பாஜி கோயிலை அடையலாம். டாக்சி, கார் வசதிகளும் உண்டு. அம்பாஜியின் அருள் நம் எல்லோருக்கும் கிடைக்கட்டும். |
| | விசாலம் அவர்களின் இதர படைப்புகள்.
| ஆன்மீகம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|
|