 |
இதழ் 338 |
 |
நவம்பர் 12 2007
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| பீச்சோரக்கவிதைகள்
- சங்கரன் |
| | வானத்து விமானத்தைப் பிடிக்கமுயலும் சிறுவனது பட்டம்! குறைவானதுதான், பட்டக்கயிற்றின் நீளம் சிறுவனது முயற்சியல்ல!
நேற்றைய அமைதி இன்றைய புயல்! கவலை வேண்டாம் காத்திருங்கள்! நிச்சயமாய் இன்றைய புயல் நாளைய அமைதி!
***
அலைகளின் தலையில் வெள்ளைக் குமிழிக் கிரீடங்கள் கண்மூடித் திறப்பதற்குள் காற்றில் கரையும் நம் கவலைகள் போல!
***
கறுத்த மேகங்கள்! கறுத்த வானம்! கறுத்த கடல்! கறுத்த மாலை நேரம்! அளவில்லா வெள்ளை அலைகள் நமக்கு மட்டும்!
***
வானத்து விமானத்தைப் பிடிக்கமுயலும் சிறுவனது பட்டம்! குறைவானதுதான், பட்டக்கயிற்றின் நீளம் சிறுவனது முயற்சியல்ல!
***
கடல் தந்த நீரைக் கரைசேர்க்கும் மேகம்! தான் கொண்ட நீரைக் கடல் சேர்க்கும் மலைகள் எதையும் கவர்ந்து வாழ்வதில்லை நமதன்னை இயற்கை! |
|
| | சங்கரன் அவர்களின் இதர படைப்புகள்.
| கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
Your Comments |
| |
sivaguru
10/14/2010 , 7:43:18 AM
[Comment
url]
|
ஆம்! எதையும் கவர்ந்து வாழ்வதில்லை நமதன்னை இயற்கை ஆனால், சீற்றம் கொண்ட போது மட்டும், சிறகுகலைக் கூட விட்டு வைப்பதில்லை!
அன்னை என்றழைத்தான் எனது தமிழன்! சீர்குழைக்கும் உனது பண்பை, இங்கனம் என்னென்று அழைப்பது? |
|
Comment
|
|
|