Home  
இதழ் 339

நவம்பர் 19 2007


www.guruji.com

Search

 

Nilacharal Web

Search in English

Help
 

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
Vidya Balan
thuklak
Home>>தொடர்

நிலாவட்டம் (22)
- ரிஷபன்

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

"நான் அத்தனை அழுத்தமாய்ப் பேசியதும் பெரிதாய்ச் சிரித்தார். 'முட்டாள். எனக்கும் உன் அம்மாவுக்கும் இடையில் வேறு எவரையுமே நான் அனுமதித்ததில்லை' என்றார். பிறகு அம்மா ஏன் வருத்தப்பட்டாள் என்றேன். 'அதுதானே எனக்கும் புரியவில்லை.

<<<சென்ற வாரம்

பாட்டிக்கு நகை போட்டு தாத்தா கூட்டிவந்தாராம்.
அவுரு ரெத்தம் தானே எனக்கும்.
சொத்தில்லாத தாத்தாவின் காதல் வாரிசு!


முதலில் சிவராமிற்கு எதையும் சொல்லவே தயக்கம். ஆனால் ஸ்வேதா விடவில்லை. 'ஏன் சோர்வாய் இருக்கிறீர்கள்' என்று துருவித் துருவிக் கேட்டாள். சிவராமிற்கும் யாரிடமாவது பகிர்ந்தால் தேவலை போல் தோன்றியது. சொல்லி விட்டான்.

"அவர், போய் சொல்லவில்லை ஸ்வேதா. நிஜம்தான் பேசுகிறார் என்று தோன்றுகிறது. ஆனால் வேலு என்னிடம் சொன்னது எனக்கு எதுவுமே புரியவில்லை."

"வேலுவின் கடிதம் என்று ஏதோ சொன்னீர்களே..." எடுத்துக் கொடுத்தாள்.

"அது இன்னொரு குழப்பம்..."

சிவராம் தலையை அழுத்தி விட்டுக் கொண்டான்.

"நான் அத்தனை அழுத்தமாய்ப் பேசியதும் பெரிதாய்ச் சிரித்தார். 'முட்டாள். எனக்கும் உன் அம்மாவுக்கும் இடையில் வேறு எவரையுமே நான் அனுமதித்ததில்லை' என்றார். பிறகு அம்மா ஏன் வருத்தப்பட்டாள் என்றேன். 'அதுதானே எனக்கும் புரியவில்லை. நீ சொல்கிறாயே தவிர ஒருமுறை கூட உன் அம்மா என்னிடம் அதைப் பற்றிப் பேசியதே இல்லையே' என்றார்."

பேசிக் கொண்டே போனான்.

சட்டென்று நிறுத்தி விட்டு அவளைப் பார்த்தான்.

"என்ன... வினோதமாய் பார்க்கிறாய்..."

"நீங்கள் பேசுவது குழந்தை போல இருக்கிறது. படபடப்பாய் ஒன்றும் புரியாத குழந்தை..."

"சரிதான். என் கவலை உனக்கு வேடிக்கையாய் இருக்கிறதா..."

சிவராம் பொய்யாய்க் போபித்தான்.

"இல்லை... சொல்லுங்கள்... அப்புறம்..."

"அப்புறமென்ன... அம்மா என்னிடம் வருத்தத்தைப் பகிர்ந்ததையும் கடைசியில் மன்னித்து விடச் சொல்லிக் கேட்டுக் கொண்டதையும் சொன்னேன். அப்பா நிஜமாகவே ஆடிப் போய் விட்டார். தனம்... நீயுமா என் மீது சந்தேகப்பட்டாய். அந்த சந்தேகத்தோடு செத்துப் போனாயா... என்று புலம்பித் தீர்த்து விட்டார். நானும் விடவில்லை. இந்த ஃப்ளாட்ஸில் ஏதோ அசம்பாவிதம் நடந்ததாமே என்று மேலும் விசாரித்தேன்.

மர்மக்கதை போல சொல்லிக் கொண்டிருந்தான்.

"என்ன அசம்பாவிதம்..."

"யாரோ ஒருத்தி செத்துக் கிடந்தது. தனக்கு ஒன்றுமே தெரியாது என்று சொல்லி விட்டார். அவள் யாரோ அனாதை. மற்றவர்களைப் போல எனக்கும் அவ்வளவு தான் தெரியும். இந்த பில்டிங்கிற்கும் அவளுக்கும் என்ன தொடர்பு என்றெல்லாம் விசாரித்தார்கள். வேலை செய்கிற ஆள் இல்லை என்று மேஸ்திரி சொல்லி விட்டதால் கேஸ் அத்தோடு முடிந்தது என்றார்."

"சரிதான். வேலுவின் அக்கா ஏன் பொய் சொல்ல வேண்டும்?" என்றாள் ஸ்வேதா.

"அவளை நான் எங்கே பார்த்தேன். வேலுதானே இந்த விவரங்களைச் சொன்னது..."

"அப்படியானால் தனம்... உங்கள் தங்கை இல்லை?"

"இல்லை" என்று தலையசைத்தான்.

யாரோ விசும்பும் குரல் கேட்டது.

திரும்பிப் பார்த்தால் தனம்.

அவர்கள் பேசியது முழுவதும் கேட்டிருக்க வேண்டும்.

"தனம்... நீ எப்போது வந்தாய்..."

சிவராம், ஸ்வேதா இருவருமே திகைப்புடன் பார்த்தார்கள்.

"நான்... யாருமே இல்லையா... எனக்கு..." என்றாள் அழுகையாய்.

"ச்சீ... பைத்தியம். நான் நிச்சயமாய் உன் அண்ணன் தான். உறவானால் என்ன இல்லாவிட்டால்தான் என்ன..." என்றான் அருகில் வந்து.

ஸ்வேதாவும் இன்னொரு கையைப் பற்றிக் கொண்டாள் ஆதரவாய்.

"எங்களுக்கு சின்னக் குழப்பம் தனம். உன் மாமன் சொன்னது சரியாக இல்லை. நாங்கள் இதுவரை நினைத்த விவரம் தப்பு... அதனால்தான்."

தனத்தைப் பொறுத்தவரை அவளைச் சிறுமியாய்ப் பாவிப்பதை விட விவரம் தெரிந்தவளாகவே பழகி வந்தான்.

எந்த விஷயத்திலும் அவள் கருத்தைக் கேட்பதும், அவளுக்குப் பிடித்திருக்கிறதா என்று விசாரித்துச் செய்வதுமாகவே பழக்கியிருந்தான்.

இந்த அணுகுமுறை பிற்காலத்தில் அவள் சுயமாய் சிந்திக்க, செயல்பட... உதவும் என்பதே சிவராமின் நம்பிக்கை.

இப்போதும் பதற்றமின்றிப் பேசினான். ஆம்... இதுவே இன்றைய நிலை. இதற்காக உன்னைக் கைவிடப் போவதில்லை என்று நேரடியாய்ப் பேசி விடுவது பின்னால் வரும் சிக்கல்களைத் தவிர்க்க உதவும் என்று நம்பினான்.

மழுப்பல்கள் எந்த நிமிடமும் விபரீத விளைவுகளைத் தந்து விடக்கூடும் என்ற அச்சமும் ஒரு காரணம்.

"வேலு எழுதின லெட்டரைப் படிச்சா... பாதி புரியலே. ப்ச். யார் வாங்கினதுன்னு தெரியலே..." என்றான் சிவராம்.

"எதுக்கு... அந்த லெட்டர்..."

"அப்போதுதானே உன்னுடைய உண்மையான அப்பா யாரென்று தெரியும். உன்னை அவரோடு சேர்த்து வைக்க வேண்டாமா... உனக்கும் அந்த ஆசை இருக்காதா..."

"இல்லை... வேண்டாம்..."

தனம் ஆவேசமாய்த் தலையசைத்தாள்.

"சரி... உண்மை என்னவென்று தெரிந்து கொள்ளவாவது..."

"மாமா என்னிடம்தான் லெட்டரைக் கொடுத்தார். உங்களிடம் தரச் சொல்லி..."

"என்ன..."

சிவராம் அதிர்ந்து போய் அவளைப் பார்த்தான். ஸ்வேதாவும் வெறித்தாள்.

"மன்னிச்சிருங்க. லெட்டரைப் பிரிச்சுப் படிச்சேன். கவரை லைப்ரரில விட்டுட்டு இங்கே வந்தேன். லெட்டரைக் கிழிச்சுடறதா இல்லே... பத்திரமா வச்சுக்கிறதான்னு புரியல. அப்ப யாரோ வரமாதிரித் தெரியவும்... அந்த அங்கிள் இருக்காரே... கல்கண்டு கொடுத்தாரே... அவரு வீட்டு ஜன்னல் வழியா உள்ளே போட்டுட்டேன். அவர் மாடிக்குப் போகும் போது போய் எடுத்திரலாம்னு நினைச்சேன். கதவைப் பூட்டிக்கிட்டு போனதாலே எடுக்க முடியலே..."

சிவராம் ஆச்சர்யமும் திகைப்புமாய் அவளைப் பார்த்தான்.

"உன் அப்பா யாரென்று உனக்குத் தெரியுமா... வேலு மாமா என்னதான் எழுதியுருந்தார் சொல்லேன்"

தனம் பேசாமல் நின்றாள்.

கண்ணீர் முட்டிக் கொண்டு பெருகியது.

"தனம்... இந்தக் கேள்விக்காவது பதில் சொல். என் அப்பா இதில் சம்பந்தப்பட்டிருக்கிறாரா..."

"இல்லை..."

தனம் மறுப்பாய்த் தலையசைத்தாள்.

"அப்படியென்றால்..."

சிவராமின் மனத்தில் விபரீதமாய் ஒரு கற்பனை உருவானது.

புரபசர்!

சரி. அவராகத்தான் இருக்க வேண்டும். இத்தனை குழப்பங்களுக்கும் அவர்தான் காரணம்.

ஆனால்... வேலு... அவன் என்னதான் எழுதியிருந்தான். தனம் ஏன் பேச மறுக்கிறாள்...

"மாமன் சத்தியம் பண்ணச் சொல்லிச்சு. தனம்... உனக்கு நல்லதுதான் செஞ்சிருக்கேன். நீ எதுவுமே பேசாதேன்னு சொன்னாரு... நீங்க இவ்ளோ அன்பா இருக்கச்சே. என்னால..."

வெடுக்வெடுக்கென்று வார்த்தைகள் இப்போதும் விழுந்தன. குதூகலிக்கத்தான் மனதில்லை.

"ஸார்... சிவராம் ஸார்..."

யாரோ ஓடி வந்தார்கள்.

"எ... என்ன..."

"விபத்து... நம்ம புரபசர்... அடிபட்டு... ஹாஸ்பிடல்ல இருக்கார். உங்களைப் பார்க்கணுமாம்."


(தொடரும்)



ரிஷபன் அவர்களின் இதர படைப்புகள். தொடர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
Your Comments
Comment
உங்கள் கருத்து
பெயர் :
மின் அஞ்சல் :
சுட்டி :

Comment In:

Tamil English
(Type here in Thanglish and see tamil text in bottom. Tamil conversion powered by : www.suratha.com)
(English / தமிழில் - யூனிகோட்)
What you see in this box gets posted as feedback.

Cunard Cruise Lines
Hot properties in India
Tamil Channel
 
 
 
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, Cunard Cruise Lines, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide