 |
இதழ் 339 |
 |
நவம்பர் 19 2007
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| சூரியனுக்கு சுப்ரபாதம் : 3. துவங்கும் முன்னர் கவனத்தில் கொள்ள சில முன்னெச்சரிக்கைகள்
- ஜெயந்தி சங்கர் |
| | ஒரு காகிதத்தில் பேனாவைக் கொண்டு உங்களின் கால அட்டவணையை முறைப்படுத்திக் கொண்டு உங்களின் குறிக்கோளை அடைய நினைத்தால் ஏமாந்துதான் போவீர்கள். அந்த யோசனையே வேணாம். ஊக்கக் குறைவுகளுக்கும் மாயைகளுக்கும் நீங்கள் நிச்சயம் தயாராகவே இருக்க வேண்டும்.
அன்றாட வாழ்வில் ஒருவித அதிருப்தி மற்றும் அசௌகரியத்துடனேயே வாழ்ந்து வருகிறீர்கள், அதற்கு முக்கியக் காரணம் தினமும் செய்ய நினைக்கும் பணிகளில் பலவற்றை முடிக்காமல் விடுகிறீர்கள், அதிக நேரமிருக்கும் போது அவற்றைச் செய்ய நினைக்கிறீர்கள், என்றெல்லாம் உங்களை நம்ப வைத்தாயிற்று. இந்நிலையில் இப்போது, 'அதிக நேரம்' என்றைக்கும் கிடைக்காது எனும் முகத்தில் அறையும் உண்மை உங்களின் முன்னால் இருக்கிறது!... உங்களுக்குரிய நேரம் உங்களிடம்தான் இருக்கிறதே. இப்போது வேலையை அரைகுறையாக விட்டுவிட்டதால் ஏற்படும் அந்த அசௌகரிய ஏமாற்ற உணர்வை உதறித் தள்ளிவிடுவது எப்படி என்ற ரகசியத்தை உங்களுக்குச் சொல்லட்டுமா?
மிக அற்புதமான ரகசியம் அது. அதை நான் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை. அப்படியான எந்த எதிர்பார்ப்பும் என்னில் இல்லை. வேறு யாரும் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கையும் கூட எனக்கில்லை ஆ, இன்னும் அது கண்டுபிடிக்கப் படவேயில்லை! இதுவரை நான் சென்னதைக் கேட்டதில் உங்களுக்குள் செத்துக்கிடந்த நம்பிக்கையில் ஒருவித உயிர்ப்பை உணர்ந்திருப்பீர்கள். ஒருவேளை நீங்கள், இத்தனை நாளாக நான் என் சலிப்பையும் அலுப்பையும் விரட்டவென்று தேடித்தேடித் தோற்றுப்போன நேரத்தில் இந்த மனுசன் எனக்கு ஒரு சுலப வழியைச் சொல்லப் போகிறான்", என்று கூட நினைத்திருக்கலாம். அடடா, ஆனால் அந்த மாதிரியான எந்த எளிய அல்லது சுலப வழியும் இல்லையே. மெக்காவுக்கான பாதை அங்கே போய்ச் சேருவோமா இல்லையா என்றே உறுதியாகத் தெரியாதபடி கரடுமுரடாகவும் கடினமாகவும் தானே இருக்கிறது.
ஒருவர் முழுமையாக வாழ ஆசைப்பட்டு தன் வாழ்வைச் சீர்படுத்த முயற்சிக்கும்போது மிக முக்கியமாக கவனத்தில்கொள்ள வேண்டியது இதில் இருக்கக்கூடிய சவாலைத்தான். தியாகங்களும் முடிவற்ற முயற்சிகளும் கொண்ட இந்த வேலை மிகவும் சவாலானது என்ற புரிதல்மட்டும் முதலில் இருந்து விட்டால் நமக்குள் வரக்கூடிய ஓர் அமைதி மிக இன்றியமையாதது. இதை மேலும் அதிகம் அழுத்திச் சொல்லவும் என்னால் முடியாது.
ஒரு காகிதத்தில் பேனாவைக் கொண்டு உங்களின் கால அட்டவணையை முறைப்படுத்திக் கொண்டு உங்களின் குறிக்கோளை அடைய நினைத்தால் ஏமாந்துதான் போவீர்கள். அந்த யோசனையே வேணாம். ஊக்கக் குறைவுகளுக்கும் மாயைகளுக்கும் நீங்கள் நிச்சயம் தயாராகவே இருக்க வேண்டும். பெரிய முயற்சியில் கிடைக்கும் சிறிய பலனில் அதிருப்தியடையாதவர்களும் இதனால் பலனடைய முடியாது. ஆகவே அத்தகையோர் பேசாமல் நீட்டிப் படுத்துக் கொள்ளுங்கள். வழக்கம்போல உங்களின் 'இருத்தல்' மட்டும் தொடரட்டும். சும்மா இருத்தலே சுகம்.
மிகவும் மனச்சோர்வும் சுவாரஸ்யமின்மையும் கொண்ட அந்தநிலைதான் எத்தனை வருத்தத்திற்கு உரியது? இருந்தாலும், அதுவும் பரவாயில்லை என்றே நான் சொல்வேன். ஏனெனில், இந்தவித இருத்தலில் இருந்து இருந்து, பின்னர் அதைக் கடந்துதான் சொந்தச் செயல் திட்டத்தையையும் மிஞ்சிச் சாதிக்கும் ஆர்வமே வரும். ஆகவே, மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்திடும் இந்த 'இருத்தல்' எனக்கும் பிடிக்கும்.
"சரி, நான் போருக்குத் தயார் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் சொன்னதையெல்லாம் யோசித்து விட்டேன். நான் எப்போது ஆரம்பிக்கலாம்?", என்று நீங்கள் கேட்டீர்களானால், "உடனே! இப்பவே!..." என்பதுதான் என் பதில். இதை ஆரம்பிக்க எந்த மந்திரமோ மாயமோ கிடையாது. குளத்து நீர் மிகவும் குளிர்கிறது என்று நீரில் குதிக்காமல் நீச்சல்குளத்தின் கரையிலேயே நின்று கொண்டிருப்பவனுக்கு எப்படி நீச்சல் பயில முடியும்? முதலில் நீருக்குள் இறங்க வேண்டும். பிறகு தான் சில முயற்சிகள் மேற்கொண்டு நீந்தக் கற்கலாம்.
நான் முன்பே சொன்னதுபோல காலத்தின் தொடர்வரவு என்பது எப்போதுமே அழகுதான். அதை நாம் முன்பே செலவிட முடியாது. அடுத்த ஆண்டை, அடுத்த நாளை, ஏன் அடுத்த மணிநேரத்தை நாம் முன்பே செலவிட முடியுமா? ஆனால், அது எதிர்காலத்தில் துல்லியமாக, குறைவற்று, வீணாகாமல், செலவாகாமல் உறுதியாக நமக்காகக் காத்திருக்கும். ஒவ்வொரு மணிநேரமும் நீங்கள் திருந்த நினைத்தால் திருந்தலாம். வேறு எதுவுமே உங்களுக்காகத் தயாராக அடுத்த வாரத்திலோ நாளைக்கோ காத்திருக்காது. நீச்சல்குளத்தின் நீர் அடுத்த வாரம் வெதுவெதுப்பாக இருக்காது. எப்படி இருக்குமோ தெரியாது... சொல்லப் போனால், இன்னும் அதிகக் குளிராகக்கூட ஆகலாம்.
ஆனால், நீங்கள் ஆரம்பிக்கும் முன்னர், உங்கள் காதில் சில சொற்களை நான் ரகசியமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.
மிக முக்கியமாக உங்களின் சொந்த உற்சாகத்திற்கு எதிரான எச்சரிக்கை இது. நல்லது செய்ய நினைக்கும்போது ஏற்படக்கூடிய ஊக்கம், மிகவும் சூது நிறைந்ததும் வழிதவறக் கூடியதுமானது. அது திடீரென்று செயல் ஒழுங்குகளுக்காக அலறும். அதன் வெறியை முதலில் உங்களால் தீர்க்க முடியாது. மேலும் மேலும் அதிகமான செயல்களைக் கேட்கும் அது. மலைகளையும் ஆறுகளையும் தகர்க்க நினைக்கும். வியர்வை ஆறாகப் பெருகும் வரை திருப்தி அடையாது அது. அதற்குப் பிறகு அடிக்கடி புருவத்தின் மேல் துளிர்க்கும் வியர்வையை உணர்ந்து, "போதும்டா சாமி", என்று சலிப்பாகக்கூட ஓரிரு வார்த்தைகள் பேசும் முன்னரே சடாரென்று களைத்து இறந்துபோகும்.
ஆரம்பத்தில் உற்சாக மிகுதியால் ஒரேயடியாக உங்கள் சக்திக்கு மீறி செயல்படாதீர்கள். குறைவாகச் செயல்பட்டு நிறைவு காணுங்கள். விபத்துக்களை சகஜமாக ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கக் கூடிய மனித இயல்புக்கு, சுபாவத்துக்கு இடம் கொடுங்கள்.
சுயமதிப்பிற்கும் தன்னம்பிக்கைக்கும் அதிக சேதாரமில்லாத அளவில் ஒன்றிரண்டு தோல்விகள் ஏற்படுவதில் ஒரு பிரச்சனையுமில்லை. ஆனால், ஒரு தோல்வியை விட இன்னொரு தோல்வியோ, ஒரு வெற்றியை விட இன்னொரு வெற்றியோ பெரியதில்லை. உருப்படாமல் போனவர்களில் பெரும்பான்மையினர் அளவிற்கு அதிகமாக முயற்சித்தவர்கள்தான்! துவக்கத்தில் ஏற்படும் தோல்விகள்தான் ஊக்கத்தை அழிக்கக் கூடியது. ஆகவே, இருபத்துநான்கு மணிநேரத்திற்குள் நிறைவாகவும் முழுமையாகவும் சௌகரியமாகவும் வாழ நினைக்கும்போது உடனடியாக நேரக்கூடிய தோல்விகளைத் தவிர்த்தல் மிகவும் நல்லது.
சின்ன வெற்றியைவிட பெரிய தோல்வியே மேல் எனும் பெருவியாபாரிகளின் தத்துவத்தில் எனக்குக் கொஞ்சமும் உடன்பாடில்லை. சின்னச் சின்னத் தோல்விகளில் எனக்கு மிகுந்த உடன்பாடு உண்டு. பெரிய தோல்வி எங்குமே நம்மை இட்டுச் செல்லாது. ஆனால், கண்டிப்பாகச் சின்ன வெற்றியானது பெரிய வெற்றிக்கு தான் நம்மை இட்டுச் செல்லும்...
ஆகவே, ஒரு நாளில் இருக்கும் கால அளவைக் கணக்கெடுப்போம். உங்களின் நாள் முழுவதும் இடைவெளியே இல்லாது நிரம்பியிருக்கிறது என்கிறீர்களா? எப்படி? நீங்கள் உங்கள் வாழ்க்கையை எவ்வளவு செலவிடுகிறீர்கள்? சராசரியாக ஏழு மணிநேரம் செலவிடுவீர்களா? உங்களின் தூக்கத்துக்கு ஏழு மணிநேரம் செலவாகிறதா? சரி, நான் தாராளமாகவே இன்னும் இரண்டு மணிநேரத்தைக் கூட்டிக் கொள்கிறேன். இந்தக் கணத்தில், உங்களிடம் மீதியிருக்கும் எட்டு மணிநேரத்துக்கு நீங்கள் கணக்கு காட்டுங்கள் என்று நான் உங்களைக் கேட்கிறேன்!
|
|
| | ஜெயந்தி சங்கர் அவர்களின் இதர படைப்புகள்.
| சுயமுன்னேற்றம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|