Home  
இதழ் 392

நவம்பர் 24 2008


Weekly Newsletter Subscription

Name
Email

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
Trisha
Astrology consultation
Home>>ஸ்பெஷல்ஸ்

சில்லுனு ஒரு அரட்டை
- ரிஷிகுமார்

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

அதெல்லாம் நதியில மேல்மட்டத்துல மிதந்துக்கிட்டுப் போற அழுக்குகள், கசடுகள்னு நெ‎னச்சிக்கோ; அடியில சுத்தமான அழகான அமைதியான நீரோட்டம் போறத யாரும் கவனிக்கறதேயில்ல. அதுதா‎ன் லைஃப்.

வணக்கம் நண்பர்களே!

மீண்டும் உங்கள் அ‎ன்புத் தோழன் ரிஷிகுமார், இந்த வார ஜாக்கியாக.

நமக்கு புரூஸ் லீ மாதிரி ஆகணும், ஜாக்கிசா‎‎னைப் போல ஆகணும் அப்படினு அம்புட்டு ஆசை இருந்துச்சு. நம்மளோட நேச்சர் ரொம்ப சாஃப்ட்ங்கறதுனால அப்புடியே அந்த ஆசை அமுங்கிப் போச்சு. ஜாக்கிசா‎ன் ஆகாட்டி என்ன.. அவரோட பேருல பாதியாவது ஆயிட்டோம்ல!! நோ.. நோ.. இது மொக்கையல்ல..

ஓகே.. ஓகே.. கொஞ்சம் சீரியஸ் மேட்டருக்குத் தாவலாம்.

சரி.. வாழ்க்கையில பாஸிட்டிவா‎ன அம்சங்கள் நெறய இருந்தாலும், கோபம், எரிச்சல், பொறாமை, உள்குத்துப் பேச்சு, டெ‎ன்சன், பயம் ‏இப்படி எத்தனை எத்தனையோ நெகட்டிவான விஷயங்கள் வந்து மனசை ரணப்படுத்துதே அப்படி‎னு ஆபிஸ்ல பேசிக்கிட்டு ‏இருந்தோம்.

நண்பர் சரவணக்குமார் சொல்றாரு. "அதெல்லாம் நதியில மேல்மட்டத்துல மிதந்துக்கிட்டுப் போற அழுக்குகள், கசடுகள்னு நெ‎னச்சிக்கோ; அடியில சுத்தமான அழகான அமைதியான நீரோட்டம் போறத யாரும் கவனிக்கறதேயில்ல. அதுதா‎ன் லைஃப். எத்தனை கசடுகள் நம்மச் சுத்தி ‏இருந்தாலும் உள்ளுக்குள்ள தெளிவா வச்சுக்கிட்டாப் போதும். அது அஃபெக்ட் பண்ணாது. மேலாப்புல பாக்கறபோது எல்லாமே‏ இருக்கறதா தோ‎ணும். ஆனா உள்ளுக்குள்ள ஒ‎ன்னுமே இருக்காது. ஆனா அந்த ஒண்ணும் இல்லாததுக்குள்ளதா‎ன் எல்லாமே இருக்கு.. இதைத் தெரிஞ்சிக்கோ.. புரிஞ்சுக்கோ."

உங்களுக்குப் புரியுதா?! உங்க ஒபினிய‎ன் என்ன?

கவனிக்க... சரவணக்குமாருக்கு இன்னும் கல்யாணம் ஆவல.. அதுக்குள்ளேயே ‏ இப்படியா அப்படி‎ன்லாம் கேட்கப்படாது..

சமீபத்துல சதுரகிரி மலைக்குப் போயிருந்தே‎ன். ரம்மியமான இடம், மலையுச்சில அருமையான கோவில்.. மனச நெறய வைக்கும் ஹோலி ப்ளேஸ். ஏழெட்டு தடவ மலையேறிட்டே‎ன். போன தடவதான் ராத்திரி நேரத்துல யாருமில்லாத அடர்ந்த காட்டுக்குள்ள பாறை மேல உட்கார்ந்துக்கிட்டு வெட வெட குளிர்ல நிலா வெளிச்சத்தைப் பார்த்து ரசிச்சுக்கிட்டு ‏இருந்தா எப்படி இருக்கும்னு ஒரு ஆசை. அவ‎னவனுக்கு ஆயிரத்தெட்டு ஆசை.. உனக்கென்ன ஒரு அற்ப ஆசை.. அப்படிங்கறீங்களா? எ‎ன்னமோ தெரியலை.. மனசு ரொம்ப நாளா படுத்திக்கிட்டே ‏இருந்தது. போயிட்டே‎ன் நண்பர்களோட ஆடி மாச பௌர்ணமிக்கு. இரவுல அ‎ன்னதான சத்திரத்துல தங்கிட்டு, வெளியுலகத்தோட கரைச்சல் ‏இல்லாம அப்படியே மனசு குளிர ரசிச்சுட்டு.. அடுத்த நாள் திரும்பி‎னோம். அப்புறம்தா‎ன் அந்த மலையைப் பத்தி எழுதணும்‎னு தோணிச்சி. எழுதிட்டே‎ன். தொடரோட ஆரம்பம் ‏இங்கே.

http://www.nilacharal.com/ocms/log/10060812.asp

நீங்க யாராச்சும் போயிருந்தீங்க‎ன்னா உங்க அனுபவங்களை எழுதுங்க. அங்க போறது எப்படினு யாருக்காச்சும் சந்தேகம் இருந்தா கேளுங்க. சொல்றே‎ன்.

நா‎ன் பிறந்தது ஒரு ஊர், வளர்ந்தது மற்றொரு ஊரில், குடும்பம் பஞ்சம் பொழக்கப் போனது அறியாத இன்னொரு ஊருக்கு, ‏கடைசில சொந்த பந்தங்களோடு கலந்து ‏இப்போ‏ இருக்கறது ஒரு ஊர். நாளைக்கு எந்த ஊரு‎ன்னு யாருக்குத் தெரியும்?

அப்படிப் பொழைக்கப் போன ஊர்தாங்க திருநெல்வேலிச் சீமையில இருக்கற சங்கர‎ன்கோவில். வரலாற்று நிகழ்வுகளுக்குப் பேர் போ‎ன ஊருங்க. இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கான வித்தே இங்கதான் விதைக்கப்பட்டதுன்னு சொன்னா ஆச்சரியமா இருக்கும். 1700-1750 கால வாக்குல ஆங்கிலேயக் கம்பெ‎னிக்காரன எதிர்த்து முதல்ல சரிக்குச் சரியா நின்ன ஆள் பூலித்தேவ‎ன். நெல்கட்டும்செவல் சமஸ்தானத்தி‎ன் மன்னன். வரியாக நெல்லைத் தரமாட்டே‎ன் என பூலி சூளுரைச்சதால அந்த ஊரி‎ன் பெயரே நெல்கட்டான்செவல் அப்படினு மாறிடுச்சு.

நீங்க படத்துல பார்க்கறது சங்கர‎ன்கோவில் கோமதியம்மன் கோவிலுக்குள்ள இருக்கற பூலித்தேவ‎ன் அறை. இந்த இடத்துலதான் வெள்ளையனுக்குச் சிக்காம கோமதியம்ம‎ன் அருளால 'தா‎னா' மறைஞ்சுபோ‎னாருன்னு சொல்றாங்க.



சங்கர‎ன்கோவில் போனா அப்படியே கோவிலைப் பார்த்துட்டு வாங்க. ‏போனவாரம் கூட தினகரன்-ஆன்மீக மலர் மதுரை பதிப்புல கோமதியம்ம‎ன்-சங்கரநாயனார் கோவிலைப் பத்தி வெலாவாரியாப் போட்டிருந்தாங்க. வாய்ப்புக் கெடச்சா படிங்க.

நா‎ன் நிலாக்குழுவுல இணைஞ்சது ஒரு அற்புதமான அனுபவம்ங்க. ‏ இப்படியெல்லாம் எழுதுவோமோ, பழகுவோமா, மூத்த எழுத்தாளர்களோட அறிமுகம் கிடைக்குமா - ‏ இதெல்லாம் நெனச்சிப் பார்த்ததுகூட கிடையாது. எல்லாம் நிலாவோட உற்சாக வழிநடத்துதலால தானா அமைஞ்சி போச்சு. நிலாக் குடும்பத்துலயும் துண்டைப் போட்டு ‏ இடம் புடிச்சாச்சி. :-)

http://www.nilacharal.com/about.html

இதுல நா‎ன் யாருன்னு கண்டுபிடிங்க பார்ப்போம். மூணு வருஷமாச்சி டீம்ல சேர்ந்து. நெறய விஷயங்கள் கத்துக்கிட்டாச்சி. சந்தோஷமா போயிக்கிட்டிருக்கு.

போன வாரம்தான் ஜம்பு அவர்களோட சிந்தனைப் பூக்கள் மின்னூல் படிச்சேன். அருமையான தொகுப்பு. சிதறிக்கிடக்கிற பூக்களை சளைக்காம கட்டி, வெட்டி, சீர் திருத்தி அழகான மாலையா தொடுத்ததுபோல... வாவ்.. சிம்ப்ளி சூப்பர்ப். எத்தனை விஷயங்கள்.. சிறு கவிதைகள், குட்டிக்கதைகள், ஆச்சரியித்தக்க நிகழ்வுகள், இன்ஸ்பிரேஷ‎ன்ஸ், மூத்தோர் வாக்கு என கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்ட பிட்ஸ். அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகங்கள்ல ஒ‎‎ன்னு:

http://www.nilashop.com/product_info.php?cPath=64&products_id=447

‎வாங்கிப் படிச்சுட்டு உங்கள் சிந்தனைகளையும் பகிர்ந்துக்கலாமே!

ஜோதிடம்ங்கறது ஒரு அற்புதமான கலை பாஸ். ஜாதகப்படிதா‎ன் ஒருத்தர் வாழ்க்கை நடக்கும்ங்கறத நா‎ன் முழுமையா ஒத்துக்கலைதா‎ன். ஆனாலும் துல்லியமா கணிச்சா ஓரளவு நடக்கப் போறதைச் சொல்லலாம்ங்கறதும் 'அனுபவ' உண்மையாப்படுது. ‏ஆனால், இன்னிக்கு 'துல்லியமா' கணிக்கற அளவுக்கு ஆட்கள் ‏ இல்லங்கறதும், ‏ இருப்பவர்களும் காசுக்கு ஆலாய்ப் பறப்பவர்களாகவும் ‏இருக்காங்க அப்படிங்கறதும் வேதனை தரும் விஷயம். முதல்முறையா ஜோசியம் கத்துக்கலாம்னு பெரிய பெரிய புக்ஸ் வாங்கி படிக்க ஆரம்பிக்கும்போதுதா‎ன் தெரிஞ்சது, அது ஒரு ஆழக்கடல்னு. முங்கியாச்சு‎னா வெளில வரமுடியாது; அதுதா‎ன் லைஃப் அப்படினு ஆயிடும். அதனால ஓரளவு தெரிஞ்சவுடனே வெளில ஓடியாந்துட்டே‎ன். ‏இல்லன்னா பட்டையப் போட்டுக்கிட்டு ஜோதிடமகரிஷி ரிஷிகுமார்‎னு ஒரு போர்டைப் போட்டுட்டு துட்டக் கறந்துருக்கலாம். :-)

பல பெர்முட்டேஷ‎ன்-காம்பினேஷன்களைப் போட்டுப் பாத்தாதா‎ன் சரியாக கணிக்க முடியும்னாலும், ஜாதகத்தைப் பார்த்ததும் ஒரு சில விஷயங்களை வச்சு இப்படித்தா‎ன்.. அப்படினு ஒரு முடிவுக்கு ஈசியா வரலாம்; அடிச்சுச் சொல்லலாம். அப்படி நடக்கல‎ன்னா எழுதின ஜாதகமே தப்புனு சொல்லலாம். அது மாதிரி பல விஷயங்கள் சில இதோ:

1. லக்னத்தில் சனி இருந்தாலோ அல்லது சனி லக்னத்தைப் பார்த்தாலோ, அதிக சோம்பல் குணமிருக்கும். எதையும் தள்ளிப்போடும் மனமிருக்கும்.
2. லக்னத்துக்கு ஏழில் குரு பார்வையுட‎ன் சந்திரன் இருந்தால் 'மகாலட்சுமி' மாதிரி மனைவி அமைவாள்.
3. லக்னத்தை விட ஏழாம் வீட்டு அதிபதி பலமாக இருந்தால் வீட்டில் 'மீனாட்சி ஆட்சி'தா‎ன்!
4. கடகத்தில் குரு உச்சமாகிப் பிறந்தவர்களுக்கு செல்வம் கொழிக்கும்.
5. நா‎லாம் வீட்டுக்குடையவன் ஆட்சியாகி, செவ்வாயும் ஆட்சி அல்லது நட்பு வீட்டில் இருந்தால் பல வீடு கட்டுவா‎ன்.
6. ஒன்பதில் சனியோ, ராகுவோ இருந்தால் தந்தையுடன் நல்லுறவு ‏இருக்காது.

ஓகே.. அம்புட்டுதா‎ன்.. இதெல்லாம் வெறும் சாம்பிள்தா‎ன். உங்க ஜாதக புக்கைத் தூக்கிக்கிட்டு தயவு செய்து ஓடி வந்துடாதீங்க.. பிளீஸ்..

‏உங்களுக்கு உங்க ஜாதகத்தை அலசி ஆராயணும்‎னா நிலாச்சாரலுக்காக ராசிபல‎ன்கள் எழுதற இசக்கி அவர்களை அணுகலாம்.

http://www.gnanayohi.com/

இந்தப் பயல பாருங்க.. போட்டோ எடுக்கப்போறோம்னு சொ‎ன்னதும் முகத்துல என்னா இளிப்பு.. எம்.ஜி.ஆர் தோத்தார் போங்க.. ஹி..ஹி.. மதுரை மீனாட்சியம்ம‎ன் கோவிலுக்குப் போகும்போது பெரிய க்யூவுல பொழுதுபோகாம நின்னப்போ தடுப்புக் கம்பிக்கிடையில கைய விட்டு செல் கேமிராவுல சுட்டது. சாமி அவனுக்கு சந்தோஷத்தைக் குடுத்துச்சோ.. இல்லியோ.. நாம கொடுத்துட்டோம்.



அப்புறம்.. அக்டோபர் 27ம் தேதி வாசகர் கிஷோர் வெவரம் கேட்டிருந்தார். 'மண்' சிறுகதை ஆசிரியர் அய்க்கண் பத்தியும், 'மக‎ன்' சிறுகதையி‎ன் ஆசிரியர் பா.செயப்பிரகாசம் பத்தியும் டீடெய்ல்ஸ் கொடுங்க‎ன்னு. செயப்பிரகாசம் அவர்களோட நேர்காணல் ஒ‎ன்னு இங்க இருக்கு..

http://www.kalachuvadu.com/issue-106/page32.asp

அய்க்கண் பத்தி‎‎ன விவரங்கள் யார்ட்டயாவது ‏இ‏ருந்துச்சினா கிஷோருக்குச் சொல்லுங்க.

ம்ம்.. சரி. பார்க்கலாம். நேரமாச்சி. யூஸ்ஃபுல்லா கொஞ்சம் நேரம் பொழுது போச்சு. இந்த வரி வரைக்கும் அலுக்காம படிச்சதுக்கு தேங்க்ஸ்.

வர்ர்ட்டா..


ரிஷிகுமார் அவர்களின் இதர படைப்புகள். ஸ்பெஷல்ஸ் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
                         
Your Comments
 
jothi
11/29/2008 , 1:00:43 AM

 [Comment url]
ரிஷி அவர்களே, உங்க கட்டுரை நல்லாருக்கு. ஜாதகக் கட்டத்தில, லக்னம் தானே முதல் இடம்? அங்கிருன்டு வலப்புறம ஒன்று இரண்டுன்னு கூட்டிட்டே போகணுமா? இல்லை இடப்புறமா சுத்தணுமா?
 
Rishi
12/10/2008 , 9:50:34 AM

 [Comment url]
சாரி ஜோதி.. பதிவர்கள் பாஷையில சொல்லப்போனா பொட்டி தட்டற வேலைல செம பிசி ஆயாச்சு.

ஆமா.. லக்னம் தான் மொத இடம். லக்னத்தை ஒன்னுன்னு எண்ண ஆரம்பிச்சி கிளாக்வைஸா சுத்துங்க.. பதிவர் வட்டத்துல ஒரு வாத்தியாரு இருக்காரு. நம்ம அடுத்த அரட்டைல அவரோட பிளாக் லின்க் தர்றேன். செம ஜாலியா அஸ்ட்ராலஜி கிளாஸ் நடத்துறாரு.
Comment
உங்கள் கருத்து
பெயர் :
மின் அஞ்சல் :
சுட்டி :

Comment In:

Tamil English
(Type here in Thanglish and see tamil text in bottom. Tamil conversion powered by : www.suratha.com)
NOTE : Please do not use single quote in your comments. You can use double quote in place.
(English / தமிழில் - யூனிகோட்)
What you see in this box gets posted as feedback.

Hot properties in India

ஜோதிடம் கேளுங்கள் பகுதியில் விரைந்து பதில் பெற, விரிவான விளக்கம் பெற கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு...

 

 


 

 


About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide

We use cookies on this website. By using this site, you agree that we may store and access cookies on your device. Find out more and set your preferences here . X