இன்சுலின் தனது விளைவினால் சர்க்கரையை இரத்த ஓட்டத்திலிருந்து உடலின் உயிரணுக்களில் ஓர் எரிபொருளாகப் பயன்படுத்த வழிவகுக்கிறது.
இன்சுலின் என்பது என்ன?
இன்சுலின் என்பது கணையத்தினால் (pancreas) உற்பத்தி செய்யப்படும் ஒரு ஹார்மோன். இன்சுலினின் முக்கிய நோக்கம் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை இயல்பாக வைத்திருப்பதாகும்.
ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு மேல் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு மிகுதியானால், கணைய உயிரணுக்கள் (Islets of Langerhans) இரத்த ஓட்டத்தில் இன்சுலினை வெளிப்படுத்தும். இதனால் கார்டிசோன் (cortisone) மற்றும் அட்ரினலின் (adrenalin) போன்ற ஹார்மோன்களின் விளைவுகளை எதிர்த்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிகுதியாகும். இன்சுலின் தனது விளைவினால் சர்க்கரையை இரத்த ஓட்டத்திலிருந்து உடலின் உயிரணுக்களில் ஓர் எரிபொருளாகப் பயன்படுத்த வழிவகுக்கிறது.
இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற 21 உடலுறுப்புகளைத் தற்போது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் மாற்றிப் பொருத்த இயலும். இவற்றுள் சிறுநீரக அறுவை சிகிச்சை சாதாரணமாக மேற்கொள்ளப்படுகிறது. சிறுநீரகங்களின் முக்கிய பணி இரத்தத்தில் இருந்து கழிவுப் பொருட்களை வெளியேற்றுவதாகும்.
கணையம் (pancreas) என்பது என்ன?
உடலிலுள்ள மிகப் பெரிய சுரப்பிகளுள் கணையம் ஒன்று; உண்மையில் இது ஒன்றில் அடங்கிய இரு சுரப்பிகளாகும். ஏறக்குறைய இதன் உயிரணுக்கள் அனைத்தும் சுரத்தல் (secretion) செயலுடன் தொடர்புடையனவே. அடிவயிற்றின் மேற்பகுதியில் குறுக்கே, முதுகெலும்புக்கு (spine) முன்னர் மற்றும் பெருந்தமனிக்கும் (aorta) பெருஞ்சிரைக்கும் (vena cava) மேற்புறமாக கணையம் அமைந்துள்ளது. கணையத்தின் தலைப்பகுதியில் முன்சிறுகுடல் (duodenum) சுற்றிக் கவிந்துள்ளது. கணையத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளாக விளங்குபவை ஊனீர் சுரப்பு இழைகளாகும் (acini); இவை சிறு நாளத்தைச் (duct) சுற்றியுள்ள சுரக்கும் உயிரணுக்களின் திரட்சிகளாகும். ஒவ்வொரு நாளமும் பிற ஊனீர் சுரப்பு இழைகளின் நாளங்களுடன் இணைந்து கணையத்தின் நடுப்பகுதியில் செல்லும் முக்கிய நாளத்துடன் இணைகின்றன. கணைய உயிரணுக்கள் என்பவை உடலின் சர்க்கரை அளவை நிலையான கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்குக் காரணமான இன்சுலினை சுரப்பவையாகும். இந்த உயிரணுக்களே குளுகோன் எனப்படும் ஹார்மோனை உற்பத்தி செய்து இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்காமல் உயர்த்துவதற்கும் காரணமாக அமைபவை. கணையம் மற்றுமொரு முக்கியமான செயல்பாட்டுக்கும் காரணமாக விளங்குகிறது; செரிமானத்திற்குத் தேவைப்படும் நொதிகளை (enzymes) சுரந்து உடலின் செரிமானச் செயலுக்கும் முக்கிய பங்காற்றுகிறது.
வணக்கம், இந்த மருத்துவ கட்டுரை மக்கலுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது. மேலும் மனிதன் உடலை பட்றி தெரிந்து கொல்வது மட்டும் இல்லமல் அதை எப்படி பாதுகாப்பது என்று ஆலொசனை கூரினால் நன்கு பயன் உள்ளதாக இருக்கும். நன்றி. B.மேகவண்ணன்