1. அரிசி மாவை பச்சை வாடை போகும் வரை வறுக்கவும். 2. ஆறிய மாவுடன் தட்டைப் பயிறு, ஏலப்பொடி, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலக்கவும். 3. வெல்லத்தை 1/2 டம்ளர் நீர் விட்டு 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். 4. மாவுக் கலவையுடன் ஆறிய வெல்லநீரை சிறிது சிறிதாகக் கலக்கி சப்பாத்தி மாவு பதத்தில் தயார் செய்யவும். 5. மாவை சிறு உருண்டை ஆக்கி வடை போல் தட்டி இட்லி தட்டில் வேக விடவும் (வெயிட் போட வேண்டாம்).
இந்த அடையுடன் வெண்ணை சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். மாலை டிபனுக்கு குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.