Home  
இதழ் 393

டிசம்பர் 01 2008


www.guruji.com

Search

 

Nilacharal Web

Search in English

Help
 

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
vijay
comedy dvds
Home>>ராசிபலன்

இராசிபலன்கள் (1-12-2008 முதல் 7-12-2008 வரை)
- ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

மிதுன ராசி அன்பர்களே, உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். பொது நலத் தொண்டுகளில் தன்னைப் பிரியமுடன் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். திடீர் அதிர்ஷ்டம் மூலம் எதிர்பாராத தன வரவுகள் உண்டாலாம்.

மேஷம்:-

மேஷ ராசி அன்பர்களே, உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். புதிய வீடு , நிலம் வாங்கப் போட்ட முற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் எதிர் பாராத வரவால் வீண் பொருட் செலவுகளும் பண நெருக்கடியும் உண்டாகும். தேவையற்ற மன சஞ்சலங்களைத் தவிர்க்கவும். உத்தியோகத் துறையினர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவுகளோடு பதவி உயர்வும் ஏற்படக் கூடும். புதிய கடன்களை வாங்கிப் பழைய கடன்களை அடைக்க முயற்சிப்பீர்கள். தொழிற்சாலைகளை இட மாற்றம் செய்யப் போட்ட திட்டங்களில் சிறிது கால தாமதம் ஏற்படலாம். தாயின் உடலில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கி உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். ஷேர் மார்க்கெட் தொழில்கள் மற்றும் தங்கம், வெள்ளி போன்ற நகை வியாபாரிகள் எதிர்பாராத லாபம் அடைவார்கள். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து சேரும்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.

ரிஷபம்:-

ரிஷப ராசி அன்பர்களே, உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். இரும்பு இயந்திரம், இராசாயன சம்பந்தமாகிய தொழிற் செய்வோர்கள், பழைய பிளாஸ்டிக் மற்றும் பழைய பேப்பர் போன்ற பொருட்கள் வியாபாரம் செய்வோர்கள் லாபம் அடைவார்கள். பங்காளிகளால் புதிய வர்த்தகத் தொடர்புகளும், மன நிம்மதியும் வந்து சேரும். தீர்த்த யாத்திரைகள் சென்று வரப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து சொத்துக்கள் கை வந்து சேரும். வண்டி, வாகனங்களில் செல்லுவோர்கள் மிகுந்த கவனமுடன் சென்று வருதல் நல்லதாகும். மற்றவர்களுக்காக உழைப்பதில் மன மகிழ்ச்சி உண்டாகும். அரசு வழக்கு விஷயங்களில் நண்பர்களின் உதவியால் எதிர்பார்த்திருந்த சாதகமான முடிவுகள் கிடைக்கும். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கி சுமூகமான சூழல் உருவாகும்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்;- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனீஸ்வர வழிபாடு செய்த வரவும்.

மிதுனம்:-

மிதுன ராசி அன்பர்களே, உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். பொது நலத் தொண்டுகளில் தன்னைப் பிரியமுடன் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். திடீர் அதிர்ஷ்டம் மூலம் எதிர்பாராத தன வரவுகள் உண்டாலாம். காணாமற் போன பொருட்களைத் தேடி வீண் பொருட் செலவுகள் செய்து ஏமாற்றம் அடைய வேண்டாம். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாகப் பழகுதல் நல்லது. பிள்ளைகளுக்கு சுப காரிய நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. வீடுகளைத் திருத்திக் கட்டப் போட்ட திட்டங்களில் தடைகள் உண்டாகும். விவசாயம் செய்வோர்களுக்கு அபரிமிதமான லாபங்கள் வந்து சேரும். கம்ப்யூட்டர் சாதனங்கள், பிரரிண்டிங் தொழிற் செய்வோர்கள், ஏற்றுமதி இறக்குமதித் தொழில் செய்வோர்களுக்கு நல்ல லாபம் தரக் கூடிய காலமாகும். குல தெய்வ வழிபாட்டிற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள். கண்களில் கவனமுடன் இருத்தல் நல்லதாகும்.

இராசியான எண்:- 7
இராசியான நிறம்:- கருஞ் சிகப்பு
இராசியான திசை:- வடமேற்கு
புரிகாரம்:- விநாயகர் வழிபாடு செய்து வரவும்.

கடகம்:-

கடக ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவிக்குள் சிற்சில காரணமற்ற பிரச்சனைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் சற்றுக் குறைந்து காணப்படும். உத்தியோகத் துறையினர்களுக்கு இடமாற்றத்துடன் சேர்ந்து பதவி உயர்வுகள் ஏற்படலாம். ஆடம்பர அலங்காரப் பொருட்கள், கட்டில் மெத்தை போன்ற உபயோகப் பொருட்களை விற்பனை செய்வோர்களும், நெருப்பு, ராணுவம், காவல்துறை சார்ந்தவர்களும் நற்பலன் அடைவார்கள். பூர்வீகச் சொத்துக்களால் மீண்டும் பிரச்சனைகள் தலை தூக்கும். தாய் வழிச் சொந்த பந்தங்களால் சில ஆதாயம் அடைய வாய்ப்பு உள்ளது. உடல் நிலையில் இருந்து வந்த நாட்பட்ட நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழிற் தொடங்குவதைச் சற்று தள்ளிப் போடவும். விபரீதமான எண்ணங்களால் மன நிம்மதிகள் குறையலாம்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.

சிம்மம்:-

சிம்ம ராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். ஆலய வழிபாடுகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள். விட்டுப்போன பழைய வழக்குகளில் இருந்து விடுதலை பெறக் கூடிய காலமாகும். காதல் சம்பந்தமான விஷயங்களில் எதிர்பாராத நல்ல செய்திகள் வந்து சேரும். உற்றார் மற்றும் உறவினர்களின் வரவால் மன மகிழ்ச்சியும் ஆதாயமும் உண்டாகும். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன்களை வாங்க முயற்சிப்பீர்கள். அரசியல்வாதிகளால் ஆதாயம் இருந்தாலும் அவர்களால் பொருட் செலவுகள் ஏற்படும். வெளி நாடுகளில் இருந்து வர வேண்டிய பணம் கைவந்து சேரும். குல தெய்வ வழிபாடு செய்து வர வாய்ப்பு உள்ளது. அண்டை அயலார்களிடம் மிகுந்த கவனமாகப் பேசிப் பழகினால் வீண் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். காய்கறிகள், மீன், முட்டை போன்ற வியாபாரிகள் லாபம் அடைவார்கள்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- முருகன் வழிபாடு செய்து வரவும்.

கன்னி:-

கன்னி ராசி அன்பர்களே, கேது நன்மை தரும் கிரகமாகும். புதிய தொழில்களை ஆரம்பம் செய்வீர்கள். அரசியல்வாதிகள், இன்ஜினியரிங் துறை சார்ந்தவர்கள், அரசுத் துறை வழக்கறிஞர்கள் ஆகியோர்கள் ஆதாயம் அடைவார்கள். விவசாயம் நன்றாகப் பலிதமாகும். புதிய கடன்களை வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். பொது நலத் தொண்டுகளில் ஈடுபட்டு நற்பெயர், புகழ் பெறுவீர்கள். மூத்த சகோதரர்களால் பொருட் செலவுகள் வர வாய்ப்பு உள்ளது. உத்தியோகம் பார்க்கும் இடத்தில் மேலதிகாரிகளுடன் எச்சரிக்கையாகப் பேசிப் பணியாற்றுதல் நல்லது. வெகு காலமாக வராத கடன் கொடுத்திருந்த பணங்கள் திரும்பிக் கிடைக்கும். வட்டித் தொழில் மற்றும் கமிஷன் தொழிற் செய்வோர்கள் மிகுந்த கவனமுடன் செயல்படவும். தாய் வழிச் சொத்துக்களில் இருந்து வந்த நாட்பட்ட பிரச்சனைகள் தீர்ந்து நல்ல சூழ்நிலை காணப்படும். மன நிம்மதிக்காக ஆலய வழிபாடு செய்ய எண்ணி நீண்ட தூரப் பயணம் உண்டாகும்.

இராசியான எண்:- 7
இராசியான நிறம்:- கருஞ் சிகப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- கணபதி வழிபாடு செய்து வரவும்.

துலாம்:-

துலாம் ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும். கணிதம், எழுத்துத் துறை சார்ந்தவர்கள், அச்சுத் தொழிற் செய்வோர்கள், வக்கீல்கள், எழுத்தாளர்கள் ஆகியோர்கள் லாபம் அடைய வாய்ப்பு உளளது. வெளிநாடு சென்று வரப் போட்ட திட்டங்களில் நல்ல சேய்திகள் வந்து சேரக்கூடிய காலமாகும். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கி உறவுகள் மேம்படும். நண்பர்களின் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள். யாத்திரையின் போது சில புதிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் நன்மை அடைவீர்கள். நாட்பட்ட வராத கடன் கொடுத்துள்ள பணங்கள் திரும்பக் கை வந்து சேரும். திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகளில் இருந்து வந்த தடைகள் நீங்கித் திருமணம் நடை பெறும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

விருச்சிகம்:-

விருச்சிக ராசி அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். வெளி நாடுகளில் இருந்து எதிர்பார்த்திருந்த பண உதவிகள் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதாக எண்ணி வீண் பிரச்சனைகளை விலைக்கு வாங்காதீர்கள். தற்போது நடத்தும் செய் தொழிலை விட்டுப் புதிய தொழில் தொடங்க முயற்சிப்பீர்கள். உடல் நிலையில் சுரம், உஷ்ணம் போன்ற உபாதைகள் வந்து போகும். குடும்பச் சொத்துக்களில் இருந்து வந்த வில்லங்கங்கள் தீர வாய்ப்பு உள்ளது. புதிய ஆடை, அணிகலன்கள் வாங்குவதைத் தள்ளிப் போடவும். தந்தையால் குடும்பத்தில் சிற்சில காரணமற்ற குழப்பங்கள் வந்து தீரும். கொடுக்க வேண்டிய பழைய கடன்கள் மீண்டும் தொல்லை தரக் கூடும். விருந்தினர்களின் வரவால் பொருட் செலவுகளும், மன மகிழ்ச்சியும் உண்டாகும். தண்ணீர், கூல்டிரிங்ஸ் போன்ற திரவ சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்வோர்கள், ரேஸ், லாட்டரி போன்ற தொழில் நடத்துவோர்கள் லாபம் அடைவார்கள்.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- அம்மன் வழிபாடு செய்து வரவும்.

தநுசு:-

தநுசு ராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரகமாகும். மற்றவர்களுக்காக உதவி செய்வதில் மன மகிழ்ச்சி அடைவீர்கள். குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக உல்லாசப் பயணங்களை மேற்கொள்வீர்கள். வெகு நாட்களாக வங்கிகளின் மூலம் எதிர்பார்த்திருந்த கடன் தொகைகள் கைவந்து சேரும். குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வருதல் நல்லது. வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று திரும்பி வர வாய்ப்பு உள்ளது. புதிய நண்பர்கள் சேர்க்கையால் பிரச்சனைகள் வர இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். உடல் நிலையில் மூளை மற்றும், நரம்பு போன்ற உபாதைகள் வந்து தீரும். வீடு மற்றும் தொழிற்சாலைகளை மாற்றி அமைக்கப் போட்ட திட்டங்கள் நிறை வேறக்கூடிய காலமாகும். அரசுத் துறை சார்ந்த ஆசிரியர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானத்துறை சார்ந்தவர்கள், அழகுக் கலைக் கூடங்கள் நடத்துவோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடையலாம். பழைய நண்பர்களால் சில ஆதாயங்கள் உண்டாகும்.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- சூரிய நமஸ்காரம் வழிபாடு செய்து வரவும்.

மகரம்:-

மகர ராசி அன்பர்களே, ராகு நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவுகள் பலப்படும். செய்யாத குற்றங்களுக்காக அவப் பெயர் ஏற்பட இருப்பதால் எச்சரிக்கை தேவை. சகோதர, சகோதரர்களின் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் முயற்சிகளுக்காகப் புதிய கடன்களை வாங்குவதற்கு முயற்சிப்பீர்கள். நண்பர்கள் மற்றும் பங்காளிகளால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். யாத்திரையில் அரசியல்வாதிகள் சிலரின் புதிய தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் நன்மை அடைய வாய்ப்பு உள்ளது. நாட்பட்ட தீராத நோய்களுக்கு புதிய மருத்துவர்களை நாடுவதால் நோய்கள் குறையலாம். தேவையற்ற புதிய கடன்களை வாங்கினால் திரும்பி செலுத்த இயலாமல் போகக் கூடிய காலமாகையால் புதிய கடன்களை வாங்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகளுக்காக ஆடை, அணிகலன்களை வாங்குவதால் பொருட் செலவுகள் உண்டாலாம். முன்கோபத்தைத் தவிர்த்தல் உகந்ததாகும்.

இராசியான எண்:- 4
இராசியான நிறம்:- கருப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- பிதுர், காளியம்மன் போன்ற வழிபாடுகளைச் செய்து வரவும்.

கும்பம்:-

கும்ப ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். பங்கு வர்த்தகம், கமிஷன் தொழில்கள், கட்டிட சம்பந்தமாகிய பொருட்களை விற்பனை செய்வோர்கள் ஆகியோர்கள் லாபம் பெறுவார்கள். உடல் நிலையில் இருந்து வந்த நாட்பட்ட நோய்கள் குறையலாம். குடும்பத்துடன் உல்லாசப் பயணம் சென்று வர வாய்ப்பு உள்ளது. யாத்திரையின் போது மிகுந்த எச்சரிக்கையுடன் பயணம் செய்வது நல்லது. பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த வில்லங்கம் தீர்ந்து சொத்துக்கள் கிடைக்கும். அரசியல்வாதிகளால் எதிர்பார்த்து இருந்த ஆதாயம் இல்லை. புதிய சொத்துக்கள் வாங்கப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளால் தன வரவும் மனச் சந்தோஷமும் உண்டாகும். மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டுத் துறையில் பரிசு மற்றும் பாராட்டுக்களைப் பெறுவார்கள். கணவன் மனைவி உறவுகளில் சிற்சில மனக் கசப்புகள் ஏற்பட்டு நீங்கும். கண்களில் கவனம் தேவை.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

மீனம்:-

மீன ராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். வராத பணம் கை வந்து சேரும். ஒரு சிலருக்கு இருப்பிட மாற்றம் ஏற்படலாம். புதிய நண்பர்களின் சேர்க்கையால் எதிர்பாராத ஆதாயங்களை அடைவீர்கள். பொதுநலத் தொண்டு நிறுவனங்கள் நடத்துவோர்களும், ஆலயத்துறை சார்ந்தவர்களும் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லதாகும். காதல் விஷயங்களில் கவனமுடன் நடந்து கொள்வத நல்லது. வீண் ஆடம்பரச் செலவுகளால் பொருள் விரையம் ஏற்படலாம். உடம்பில் நரம்பு, முதுகு, மற்றும் வயிறு ஆகிய உபாதைகள் வந்து போகும். தொழிற்சாலைகளை இட மாற்றம் செய்ய நேரிடும். ரேஸ், லாட்டரி போன்றவற்றின் மூலம் திடீர் தன வரவு உண்டாகும். சமுதாய விஷயங்களில் சற்று கவனமுடன் பணியாற்றுதல் சிறந்ததாகும். பிள்ளைகளின் மன மகிழ்ச்சி கண்டு சந்தோஷம் அடைவீர்கள். செய் தொழிலில் எதிர்பாராத புதிய ஒப்பந்தங்களால் நல்ல லாபம் அடைவீர்கள்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- துர்க்கை வழிபாடு செய்து வரவும்.


ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M அவர்களின் இதர படைப்புகள். ராசிபலன் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
                         
Your Comments
Comment
உங்கள் கருத்து
பெயர் :
மின் அஞ்சல் :
சுட்டி :

Comment In:

Tamil English
(Type here in Thanglish and see tamil text in bottom. Tamil conversion powered by : www.suratha.com)
(English / தமிழில் - யூனிகோட்)
What you see in this box gets posted as feedback.

Cunard Cruise Lines
Hot properties in India
 
 
 
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, Cunard Cruise Lines, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide