மூளைத் தண்டு (brain stem) என்பது மூளையின் முக்கிய பகுதியாகும். சுவாசித்தல், இரத்த அழுத்தம், நாடித் துடிப்பு, எச்சரிக்கை உணர்வு, உறக்கம் போன்றவற்றின் ஒழுங்கு முறைகளைப் பராமரிக்கும் மிக முக்கிய பகுதியாக இது விளங்குகிறது.
 செரோடோனின் (Serotonin) எங்கு உற்பத்தி செய்யப்படுகிறது?
செரோடோனின் என்பது ஒரு வேதிப்பொருள்; மூளையிலும் உடலின் பிற பகுதிகளிலும் செயல்பட்டு உணர்வுகள், செயல்பாடுகள் மற்றும் செயல்முறைகள் ஆகியவற்றின் மீது இது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.
மூளையின் அடிப்பகுதியிலுள்ள உயிரணுக்களின் குழு ஒன்று, எல் – டிரைப்டோஃபான் (L-Tryptophan) என்னும் அமினோ அமிலத்திலிருந்து செரோடோனினை உற்பத்தி செய்கிறது. செரிமான அமைப்பு (digestive system), தோல் மற்றும் இரத்த உயிரணுக்கள் ஆகியவற்றிலும் கூட செரோடோனின் உற்பத்தி செய்யப்படுகிறது. உடலின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட செரோடோனின் ஏற்பிகளை (receptors) அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
செரோடோனினால் ஒழுங்குப்படுத்தப்படும் முக்கிய செயல்பாடுகளில் பசி, உறக்கம், சின உணர்வு (aggression) மற்றும் மனப்பாங்குகள் (moods) ஆகியவை அடங்கும். மூளை மற்றும் நரம்பு அமைப்பின் பிற பகுதிகளில், ஒரு நரம்பிலிருந்து மற்றொரு நரம்புக்கு சமிக்ஞைகளை எடுத்துச் செல்லும் வேதிப் பொருளாகவும் செரோடோனின் செயல்படுகிறது. மூளையின் தொடக்க வளர்ச்சியை வடிவமைக்கவும் செரோடோனின் உதவுகிறது. மனிதர்களிடம் இருப்பது பொன்றே செரோடோனின் தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றிலும் கூட அமைந்துள்ளது.
செரோடோனினின் பல விளைவுகள் மருந்துகளிலும் கூட பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக மனச்சோர்வு, மைக்ரேன் (migrane) தலை வலி மற்றும் உளச்சிதைவு (Schizophernia) ஆகியவற்றிற்கான மருந்துகளில் செரோடோனினின் பயன்பாடு மிகுதியாக உள்ளது.
பெரு மூளை (Cerebrum) எங்கு அமைந்துள்ளது?
மூளையின் ஒரு பகுதியாக அமைந்து, அதன் எடையில் சுமார் 85% அளவைக் கொண்டிருப்பது பெரு மூளையாகும். நீள் பிளவு (longitudinal fissure) என அழைக்கப்படும் ஒரு நீண்ட வரிப்பள்ளம் (groove) பெரு மூளையை இரண்டு பிரிவுகளாக பிரிக்கிறது; அவை முறையே இடது பெரு மூளை அரைக்கோளம் (left cerebrum hemisphere) மற்றும் வலது பெரு மூளை அரைக்கோளம் என அழைக்கப்படுகின்றன. இந்த அரைக்கோளங்கள் நரம்புகளாலான கட்டுகளால் (bundles of nerves) இணைக்கப்படுகின்றன. ஒவ்வொரு அரைக்கோளமும் நான்கு மடல்களாகப் (lobes) பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு மடலும் அதற்கு மேல் அமைந்துள்ள மண்டை ஓட்டு எலும்பின் பெயராலேயே அழைக்கப்படுகிறது. முன்புறம் அமைந்துள்ள முன் மடல்(frontal lobe), கீழ்ப்புறம் அமைந்துள்ள பொட்டு மடல் (temporal lobe), நடுப் பகுதியில் அமைந்துள்ள உச்சி மண்டை மடல் (perietol lobe), பின்புறம் அமைந்துள்ள பின் மண்டை மடல் (occipital lobe) என்பனவே அந்நான்கு மடல்களாகும்.
மூளைத் தண்டு (brain stem) என்பது மூளையின் முக்கிய பகுதியாகும். சுவாசித்தல், இரத்த அழுத்தம், நாடித் துடிப்பு, எச்சரிக்கை உணர்வு, உறக்கம் போன்றவற்றின் ஒழுங்கு முறைகளைப் பராமரிக்கும் மிக முக்கிய பகுதியாக இது விளங்குகிறது.
|