Home  
இதழ் 449

டிசம்பர் 28 2009


Weekly Newsletter Subscription

Name
Email

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
Surya
Astrology consultation
Home>>ராசிபலன்

இராசிபலன்கள் (28-12-2009 முதல் 3-1-2010 வரை)
- ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

ரிஷபராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் பொருள் இழப்பும், வீண் பிரச்சனைகளும் ஏற்படும்.

மேசம் :-

மேசராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் மன நிம்மதியை அடைவீர்கள். பூ, பழம் போன்ற வியாபாரிகள் ஆலயப் பணி செய்வோர்கள், வக்கீல்கள், நீதிபதிகள் பேராசிரியர்களுக்கு மற்றும் ஷேர் மார்க்கெட், நறுமணப் பொருட்களின் வியாபாரிகள், தங்கம் வெள்ளி போன்ற நகை கடைகள் நடத்துபவர்கள், பைனான்ஸ் தொழில் செய்வோர்களுக்கு நற்பலன் உண்டாகும். இது நாள் வரையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். குடும்ப நன்மைகளுக்காகச் சகோதரர்களால் அனுகூலம் ஏற்படும். வெகு காலமாக மறைமுகமாக இருந்து வந்துள்ள எதிரிகளின் தொல்லைகள் தீரும். வராத கடன் கொடுத்து இருந்த பணம் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. செய்தொழிலில் பங்காளிகளுடன் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவும். காதல் விஷயங்களில் வெற்றி தேடித் தரக் கூடிய காலமாகும். உடம்பில் வயிறு மூலம் சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். வங்கிகளின் மூலமாக எதிர்பார்த்திருந்த கடன் உதவித் தொகைகள் கிடைத்து வீட்டைத் திருத்திக் கட்டுவதற்கு முயற்சி செய்வீர்கள். வேற்று மதத்தவர்களால் எதிர்பார்த்த ஆதாயம் இல்லை.

இராசியான எண் :- 3
இராசியான நிறம் :- மஞ்சள்
இராசியான திசை :- வடகிழக்கு
பரிகாரம் :- தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து கடலை தானம் செய்து வரவும்.

ரிஷபம் :-

ரிஷபராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் பொருள் இழப்பும், வீண் பிரச்சனைகளும் ஏற்படும். நீண்ட தூரப் பயணங்களைத் தள்ளிப் போடவும். கோர்ட், வழக்கு சம்பந்தமான விஷயத்தில் அநுகூலமான நல்ல தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம். பூமி, நிலம் வாங்குதல் போன்ற நீண்டகால முயற்சிகளில் தற்போது வெற்றி அடைவீர்கள். பெண்களால் தூரத்தில் நற்செய்திகளைக் கேட்பீர்கள். திருட்டுப் போன பொருட்கள் திரும்ப வீடு வந்து சேரும். உடல் நலத்தில் மூலம், வயிறு சம்பந்தமாகிய தொல்லைகள் வந்து போகும். வங்கிகளில் இருந்து எதிர்பார்த்த கடன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மூத்த சகோதரர்களால் குடும்பத்தில் சிற்சில பிரச்சனைகளைச் சந்தித்து மன நிம்மதி குறையலாம். திரவ சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்வோர்கள், பூஜைப் பொருள் வியாபாரிகள், நீர்வளத்துறை சார்ந்தவர்கள், தாய் சேய் நல விடுதிகளை நடத்துவோர்கள், உப்பு வியாபாரிகள், படம் மற்றும் கண்ணாடி போன்ற பொட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.

இராசியான எண் :- 2
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- மேற்கு
பரிகாரம் :- அம்மன் வழிபாடு செய்து அரிசி தானம் செய்து வரவும்.

மிதுனம் :-

மிதுனராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்குப் புதன் நன்மை தரும் கிரகமாகும். கொடுக்கல் வாங்கலில் நாணயம் காப்பாற்ற இயலாத நிலை இருப்பதால் புதிய கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். யாத்திரையின் போது சம்பந்தம் இல்லாத விஷயங்களுக்காக வீண் பிரச்சனைகள் வந்து விலகும். காணாமற் போன பொருட்கள் திரும்பக் கிடைக்கக் கூடிய காலமாகும். புதிய தொழில்களை ஆரம்பம் செய்வதற்கான முயற்சிகளைச் சிறிது காலம் தள்ளிப் போடுதல் நல்லது. உடம்பில் வாயு மற்றும் வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். எழுத்துப் பணி செய்வோர்கள், வங்கிப் பணியாளார்கள், காய்கறி வியாபாரிகள், தபால் தந்தித் துறையைச் சார்ந்தவர்கள், அச்சுத் தொழிற் செய்வோர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். பொருளாதாரத்தில் இன்னும் சில நெருக்கடிகள் உண்டாகும். பிள்ளைகளின் உடல் நிலையில் பாதிப்பகள் ஏற்பட்டு பொருட் செலவுகள் உண்டு. பெண்கள் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவும். பங்குத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நஷ்டத்தை அடைய வாய்ப்பு இருப்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணப் புழக்கம் நன்றாக இருக்கும்.

இராசியான எண் :- 5
இராசியான நிறம் :- பச்சை
இராசியான திசை :- வடக்கு
பரிகாரம் :- மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

கடகம் :-

கடகராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். வராத கடன் கொடுத்து இருந்த பணம் திரும்பக் கைக்கு வந்து சேரும் காலமாகும். நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில்கள், இராணுவத் தொழில், போலீஸ், தீயணைப்புத் துறையைச் சார்ந்தவர்கள், ஹோட்டல் தொழிற் செய்வோர்கள், கார சம்பந்தமான உணவுப் பொருட்களின் வியாபாரிகள், கேஸ் வெல்டிங் போன்ற தொழிற் செய்வோர்கள், நிலக்கரி தொழிற்சாலைகளில் பணி செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். காரணமற்ற சிறிய விஷயங்களுக்காக குடும்பத்தில் சிற்சில பிரச்சனைகள் வந்து விலகும். கலைத் துறையினர்களும், அரசியல் வாதிகளும் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. குடும்பத்தில் இதுநாள் வரையில் தடை பட்டு வந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். தூரத்து யாத்திரையின் மூலமாகச் சந்திக்க வேண்டிய நபர்களைச் சந்தித்து காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளுவீர்கள். உடம்பில் மேகம் மற்றும் உஷ்ண சம்பந்தமான பீடைகள் வந்து விலகும். பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறி சற்று முன்னேற்றம் காணப்படும். குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்காக முயற்சி செய்வீர்கள். யாத்திரையின் காரணமற்ற விஷயங்களுக்காக வீண் பிரச்சனைகள் வர இருப்பதால் எச்சரிக்கையுடன் பயணம் செய்யவும்.

இராசியான எண் :- 9
இராசியான நிறம் :- சிகப்பு
இராசியான திசை :- தெற்கு
பரிகாரம் :- துர்க்கை வழிபாடு செய்து துவரை தானம் செய்யவும்.

சிம்மம் :-

சிம்மராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும். செய்தொழிலில் புதிய பிரச்சனைகள் ஏற்பட்டு சமாளித்துக் கொள்ளுவீர்கள். பிறருக்காக ஜாமீன் போடுவதால் வீண் பிரச்சனைக்கு ஆளாக நேரிடும். கணவன் மனைவி உறவுகள சுமாராகக் காணப்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் பணவரவு உண்டு. தொலை தூரப் பயணங்களால் லாபம் அடைவீர்கள். புதிய வீடு நிலம் வாங்க எடுத்துக் கொண்ட நீண்ட கால முயற்சிகளில் நல்ல பலன் உண்டாகும். பக்கத்து வீடுகளில் பக்குவமாகப் பேசிப் பழகுவதால் பிரச்சனைகள் குறையும். விட்டுப் போன பழைய பிரச்சனைகள் மீண்டும் தொடரும். தந்தை மகன் உறவுகள் சுமாராகக் காணப்படும். ஆலய வழிபாடுகளால் மனநிம்மதி அடைவீர்கள். புதிய கடன் வாங்கிப் பழைய கடனை அடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வர வாய்ப்பு உள்ளது. பிரிந்து போன பழைய உறவுகள் மீண்டும் ஒன்று சேரும் காலமாகும். வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளைச் சற்று தள்ளிப் போடவும். மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களை கடன் கொடுப்பதை தவிர்த்தல் நல்லதாகும். உடல் நிலையில் வாய், பற்கள், முகம் சம்பந்தமாகிய உபாதைகள் வந்து போகும். .

இராசியான எண் :- 7
இராசியான நிறம் :- கருஞ்சிகப்பு
இராசியான திசை :- வடமேற்கு
பரிகாரம் :- விநாயகர் வழிபாடு செய்து வரவும்.

கன்னி :-

கன்னிராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். . நீண்ட காலமாக வராத கடன் கொடுத்த பணம் திரும்பிக் கை வந்து சேரும். காதல் விஷயத்தில் நல்ல தகவல்கள் வந்து சேரும். அரசு வழக்குகளில் அநுகூலமான தீர்ப்புகள் கிடைக்கும். விவசாயம் செய்வோர்கள், காய்கறிகள், பழ வியாபாரிகள், பூஜை பொருள், உப்பு வியாபாரிகள், தண்ணீர் கூல்டிரிங்ஸ் போன்ற உணவு வியாபாரிகள் மற்றும் நறுமணப் பொருள் வியாபாரிகள், ரத்தின வியாபாரம் செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன்களை அடைவார்கள். குலதெய்வ வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகள் தடையின்றி நிறைவேறும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் மன மகிழ்ச்சி உண்டாகும். உடல் நிலையில் கண், காதுகளில் கவனமுடன் இருக்கவும். யாத்திரைகளால் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேற இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில்கள் ஆரம்பம் செய்ய போட்ட திட்டங்கள் நிறை வேறும். பிறர் நடத்திக் கொண்டிருக்கும் தொழில் ஸ்தாபனங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் நண்பர்களின் ஆதரவுகள் மூலம் நிறைவேறும். பங்குத்தொழிலில் ஓரளவு முன்னேற்றம் காணுவீர்கள். பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனங்களை வாங்கும் முயற்சிகள் நிறைவேறும் காலமாகும்.

இராசியான எண் :- 5
இராசியான நிறம் :- பச்சை
இராசியான திசை :- வடக்கு
பரிகாரம் :- மஹாவிஷ்ணு, ஆஞ்சனேயர் வழிபாடு செய்து பாசிப்பயிறு தானம் செய்யவும்.

துலாம் :-

துலாம்ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் திடீர் வரவுகளால் பொருட் செலவுகள் வந்து சேரும். வெளி நாட்டில் இருப்பவர்கள் தாய் நாடு சென்று வருவீர்கள். விவசாயம் செய்வோர்கள், கமிசன் தொழில்கள், ஷேர் மார்க்கெட் நடத்துபவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும். நண்பர்களிடம் காரணமற்ற மனக்கசப்புகள் ஏற்பட்டு பிரச்சனைகள் உருவாகலாம். உத்தியோகம் செய்பவர்களுக்கு இடையூறுகள் வந்து போகும். விருந்தினர்களின் வரவால் பொருட் செலவுகள் உண்டாகும். உடம்பில் கண், காதுகளில் கவனமுடன் இருக்கவும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து வந்த தொல்லைகள் மேலும் தொடரும் என்பதால் கவனமுடன் செயல் படுவது நல்லது. புதிய வீடு, நிலம் வாங்குவது போன்ற விஷயங்களைச் சற்று காலதாமதமாக செய்வது உகந்ததாகும். இரசாயனம், அணு ஆராய்ச்சி போன்ற துறை சார்ந்தவர்கள், பழைய பொருட்கள், மீன், முட்டை, மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள், வட்டித் தொழிற் செய்வோர்கள், ஏஜன்சி, குத்தகை போன்ற தொழிற் செய்வோர்கள, பழைய இரும்பு மற்றும் பேப்பர் பிளாஸ்டிக் சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் பெற வாய்ப்பு உள்ளது.

இராசியான எண் :- 4
இராசியதன நிறம் :- கருப்பு
இராசியான திசை :- வடமேற்கு
பரிகாரம் :- பிதுர் வழிபாடு செய்து வரவும்.

விருச்சிகம் :-

விருச்சிகராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். தொலைதூரப் பயணங்களில் மிகவும் கவனமுடன் சென்று வரவும். உடம்பில் நரம்பு, மற்றும் உணவுக்குழல் சம்பந்தமான பீடைகள் உண்டாகும். இரும்பு இயந்திரம், இரசாயன சம்பந்தமான தொழில்கள், எண்ணை வியாபாரம் செய்வோர்கள், பெட்ரோல் டீசல் வியாபாரிகள், பலசரக்குத் தொழில் வியாபாரம் செய்வோர்கள், பழைய இரும்புப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். தனப் புழக்கம் நன்றாக இருக்கும். நீண்ட காலமாக வங்கிகளில் இருந்து எதிர்பார்த்த பணம் கிடைக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் மேலதிகாரிகளிடம் முன் கோபத்தை தவிர்த்து மிகவும் எச்சரிக்கையுடன் பணி ஆற்றுதல் நல்லது. அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகளும் மற்றும் நற்பெயர் புகழும் உண்டாகும் காலமாகும். பிள்ளைகளுக்கு இதுவரையில் தடைபட்டு வந்த திருமண போன்ற சுப காரியங்கள் நிறைவேறும். தாய் தந்தைகளுக்கு உடல் நிலையில் சிற்சில பாதிப்புகள் வந்து விலகும். நண்பர்களால் சிற்சில பிரச்சனைகள் வந்து விலகும். காதல் சம்பந்தமான விஷயங்களில் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள்.

இராசியான எண் :- 8
இராசியான நிறம் :- நீலம்
இராசியான திசை :- தென் மேற்கு
பரிகாரம் :- ஐயப்பன் வழிபாடு செய்து எள் தானம் செய்யவும்.

தனுசு :-

தனுசுராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். தீராத பிரச்சனைகளுக்கு பெரிய மனிதர்கள் உதவியால் தீர்வு கிடைக்கும். உடம்பில் சளி, அலர்ஜி, போன்ற நோய்கள் வந்து போகும். திடீர் அதிர்ஷ்டம் மூலம் தன வரவு உண்டாகும். தாய் தந்தையர்கள் உறவுகளில் வந்துள்ள பிரச்சனைகள் தீரும். வெளிநாடு செல்லுவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும். வராத கடன் கொடுத்துள்ள பணம் திரும்பக் கை வந்து சேரும். சிலருக்கு வீடு மற்றும் தொழிற் சாலைகள் இடமாற்றம் ஏற்படலாம். முன் கோபம் தவிர்த்தல் உகந்ததாகும். உத்தியோகத் துறையினர்களுக்கு பதவி உயர்வுகளுடன் கூடிய பணி இட மாற்றம் ஏற்படக் கூடும். எதிர்பாராத விருந்தினர்கள் வரவால் சில ஆதாயங்களை அடையலாம். குல தெய்வ வழிபாடு செய்து வருவது நல்லது. புதிய தொழில்களை ஆரம்பம் செய்ய முயற்சிகள் செய்வீர்கள். யாத்திரையின் போது சம்பந்தம் இல்லாத நபர்களால் சில நன்மைகள் வந்து சேரும். நாட்பட்ட வழக்கு விஷயங்களில் நல்ல செய்திகள் வந்து சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தென்திசையில் இருந்து பெண்களால் ஆதாயம் உண்டாகும். சமுதாய முன்னேற்றத்திற்கான பொதுத் தொண்டுகளில் ஈடுபட்டு மன நிறைவடைவீர்கள்.

இராசியான எண் :- 8
இராசியான நிறம் :- நீலம்
இராசியான திசை :- தென்மேற்கு
பரிகாரம் :- ஐயப்பன் வழிபாடு செய்து வரவும்.

மகரம் :-

மகரராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். புதிய ஆடை அணிகலன்களை வாங்குவதற்கு முயற்சிப்பீர்கள். கார், லாரி போன்ற வாகனத் தொழில்கள் செய்வோர்கள், ஆடம்பர அலங்காரப் பொருட்கள், பொருள்களின் வியாபாரிகள், நாடகக் கலைஞர்கள், சினிமா துறை சார்ந்தவர்கள், நறுமணப் பொள் வியாபாரிகள், சிற்றுண்டி வியாபாரிகள், நவரத்தினம் மற்றும் வெள்ளி வியாபாரிகள் ஆகிய இவர்களுக்கு நற்பலன் உண்டாகும். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டுத் தொழிற் செய்வதற்கான முயற்சிகளைச் சற்று தள்ளிப் போடவும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறைந்து மனஅமைதி ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு மணம் ஆகும் காலமாகும். பூர்வீகச் சொத்துக்களில் வெகு காலமாக இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். ஒரு சிலருக்கு சொத்துக்களை விற்பதில் பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களைக் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். பொருளாதாரம் சீராக இருக்கும். புதிய வீடு, நிலம் கார் போன்றவை வாங்குவீர்கள். நண்பர்கள் மற்றும் பங்காளிகளால் ஆதாயம் உண்டாகும்.

இராசியான எண் :- 6
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- தென்கிழக்கு
பரிகாரம் :- மஹாலஷ்மி வழிபாடு செய்து மொச்சை தானம் செய்யவும்.

கும்பம் :-

கும்பராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். வரவேண்டிய சொத்துக்கள் திரும்பக் கை வந்து சேரும் காலமாகும். நண்பர்களால் வீண் பொருட் செலவுகளும் மன நிம்மதிக் குறைவும் ஏற்படலாம். திருமணம் போன்ற சுபகாரிய விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும். குடும்பச் சொத்துக்கள் பிரிவினை போன்ற விஷயத்தில் நல்ல முடிவுகள் கிடைக்கும். ரேஸ், லாட்டரி போன்றவற்றின் மூலம் திடீர் தன வரவு உண்டு. நெருப்பு, கேஸ், சிற்றுண்டி சாலைகள், அரிசி மற்றும் பலசரக்கு சம்பந்தமாகிய தொழிற் செய்பவர்கள், அரசியல் வாதிகள், நீதிமன்றத்தில் பணிபுரிவோர்கள், வழக்கறிஞர்கள் மருந்து வியாபாரிகள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடையலாம். தீர்த்த யாத்திரை சென்று வரப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். வண்டி வாகனங்களில் செல்லுவோர்கள் யாத்திரையின் போது பெரிய மனிதர்கள் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் நன்மைகள் அடைவீர்கள். பிள்ளைகளால் எதிர்பாராத தன வரவுகள் உண்டாகுவதோடு அவர்களால் பொருட் செலவும் உண்டாகும். வேற்று மதத்தவரால் ஆதாயம் ஏதும் இல்லை. உத்தியோகத் துறையினர்களுக்குப் பணி இட மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இராசியான எண் :- 1
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- கிழக்கு
பரிகாரம் :- சூரிய நமஸ்காரம் வழிபாடு செய்து வரவும்.

மீனம் :-

மீனராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது. யாத்திரையில் குழந்தைகளை எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ளவும். புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைக்க வாய்ப்பு உள்ளது. வீடுகளில் கவனமுடன் இருந்தால் திருட்டுப் போவதை தடுக்கலாம். குழந்தைகளின் மன மகிழ்ச்சிக்காக வெளியூர் பிரயாணங்களை மேற்கொள்ள நேரிடும். ஆடம்பர அலங்காரப் பொருட்கள், கட்டில் மெத்தை போன்ற பொருட்கள், இராசானம், கமிசன் தரகுத் தொழிற் செய்வோர்கள், மரம், காய்கறி வியாபாரிகள், தபால் தந்தித் துறையினர்கள், பத்திரிக்கைத் துறை சார்ந்தவர்கள் ஆகியோர்கள் லாபம் அடைவார்கள். செய் தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகளில் மேலும் சற்று பொறுமையைக் கடைப்பிடிக்கவும். இது வரை விடை காண முடியாத நோய்களுக்கு விடை காணும் காலமாகும். தந்தை மகன் உறவில் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளதால் கவனமுடன் இருக்கவும். உடம்பில் முதுகு மற்றும் கால்களில் நோய்கள் வந்து விலகும். புதிய ஆடை அணிகலன் ஆபரணங்களை வாங்குவீர்கள்.

இராசியான எண் :- 5
இராசியான நிறம் :- பச்சை
இராசியான திசை :- வடக்க
பரிகாரம் :- மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

**************

Gnanayohi Dr. P. Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M
18 (25B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur - 627 759
Tirunelveli District, Tamil Nadu, India.
Phone : 04633-243029,
Mobile: 98425-10578, 98425-29691,
Fax: 04633 -240390
Website:- www.gnanayohi.com

ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M அவர்களின் இதர படைப்புகள். ராசிபலன் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
                         
Your Comments
Comment
உங்கள் கருத்து
பெயர் :
மின் அஞ்சல் :
சுட்டி :

Comment In:

Tamil English
(Type here in Thanglish and see tamil text in bottom. Tamil conversion powered by : www.suratha.com)
NOTE : Please do not use single quote in your comments. You can use double quote in place.
(English / தமிழில் - யூனிகோட்)
What you see in this box gets posted as feedback.

Hot properties in India

ஜோதிடம் கேளுங்கள் பகுதியில் விரைந்து பதில் பெற, விரிவான விளக்கம் பெற கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு...

 

 


 

 


About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide

We use cookies on this website. By using this site, you agree that we may store and access cookies on your device. Find out more and set your preferences here . X