|
Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
|
|
|

கோடைவிடுமுறை என்றாலே ஜாலிதானே! இந்த முறை கோடை விடுமுறைக்கு
நாங்க மூணாறு போயிருந்தோம். எங்கள் பிள்ளை விக்னேஷும்
வந்திருந்தான். இன்ஜினியரிங் முடிச்சிட்டு இப்பத்தான்
ஹெ.சி.எல் கம்பெனியிலே வேலையில் சேர்ந்திருக்கிறான். பெரிய
அண்ணாதான். ஆனா எங்களுக்கு இன்னும் குழந்தைதானே அவன்!
பின்னென்ன, அவன் வழியெல்லாம் இசையை அலற விட்டுக்
கொண்டிருந்தானே கொஞ்சமும் வால்யூம் குறைக்காமல்.
மூணாறு, ஊட்டி, கொடைக்கானல் மாதிரி ஜில்லுனு இயற்கை காட்சிகள்
நிறைய இருக்கிற இடம். நிறைய டீ எஸ்டேட் எல்லாம் இருக்கு. டாடா
டீ எஸ்டேட் மேனேஜர் பங்களாவிலே தங்கினோம். மேனேஜர் எங்கள்
குடும்ப நண்பர். பேரு ஜஸ்பீர்சிங். அவங்ககிட்டே ஒரு பெரிய
நாய் இருக்கு. பேரு டைகர். பார்க்கவும் புலி மாதிரிதான்
இருக்கும்.
ஜஸ்பீர் அங்கிள் சாப்பிட கூப்பிட்டாரு. பெரிய நாயைப் பார்த்து
எனக்கு ஒரே பயம். டைனிங் ரூமுக்கு போகவே கஷ்டப்பட்டேன். உடனே
அங்கிள் டைகர் கிட்டே பேசினாரு. 'நீ அங்கேயே இரு. ஆண்ட்டி
பயந்துக்கிறாங்க' ன்னதும் சட்டுனு மூலைல உட்கார்ந்திருச்சி.
சாப்பிடுற வரைக்கும் எந்திரிக்கவே இல்லை.
சாப்பிட்டுட்டு சோபாவிலே உட்கார்ந்தோமா.... மறுபடி அங்கிள் 'டைகர்,
கொஞ்சம் வராண்டாலே இரு' ன்னதும் உடனே வராண்டாலேயிருந்து
நகராம கழுத்தை மட்டும் நீட்டி நீட்டி வரலாமான்னு பார்த்தபடி
இருந்துச்சி. எங்களுக்கு ஒரே ஆச்சர்யம். அப்போ. 'கஸ்ஸாபியாங்கா'
கதை நினைவுக்கு வந்துச்சி. எவ்வளவு விசுவாசம்!

நான் என் பிள்ளையைப் பார்த்தேன். விக்னேஷ் அண்ணா
சிரிச்சிட்டான். 'சரிம்மா, மத்தவங்களுக்கு டிஸ்டர்பன்ஸ்
இல்லாமல் சின்ன்ன்ன வால்யூமில் பாட்டு கேட்கிறேன். ஒழுங்கா
இனிமே சாப்பிடறேன். நீங்க சொன்னபடியெல்லாம் செய்யறேன்.
போதுமான்'னு என்னைத் தட்டிக் கொடுத்தான் குறும்பாய். குட்டீஸ்,
நீங்க எப்படி?
மறுபடி பார்க்கலாம்.
******* |
|
|
|
|
New Page 1
|
|
மேலும்
பல.....
|
|
|
|
|
Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
|
Best viewed @ 1024x768
resolution |
|
tamil magazines,
Hindu devotional songs,
tamil links,
tamil movies,
tamil songs,
tamil dvd,
tamil news,
tamil,
tamil comedy,
tamil movie,
tamil music DVDs,
bharatanatyam,
Yoga DVDs,
carnatic music,
tamil cinema,
sivaji movie,
cricket world cup,
tamil ebooks,
web design,
web design resources
|
|
Privacy Policy|Terms of use|Disclaimer|
Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide | |
|