481-Idaiveligal-Thodarkintrana

$8

மனித உறவுகளுக்கு இடையே மாயப்பிளவுகளை உருவாக்குவதில் தலைமுறை இடைவெளி தொடர்ந்து பங்களித்து வருகிறது. குடும்பத்துக்கு உள்ளும் வெளியும் இதனால் ஏற்படுகிற இன்னல்களையும், அவை இடையறாது உருவாக்குகிற தடைக்கற்களையும் கதையின் நாயகி நந்தினியின் அனுபவங்கள் வாயிலாக நமக்கு உணர்த்துகிறார் நம் அபிமான எழுத்தாளர் வாசந்தி அவர்கள். நெகிழ்வுத்தன்மை என்னும் நெம்புகோல் கொண்டு, தலைமுறைகளுக்கு இடைப்பட்ட தடைகளை அப்புறப்படுத்த விழையும் நந்தினியின் முயற்சிகளைத் திருவினையாக்குகிற சம்பவங்கள் சுவாரசியமாகவும், அதே நேரம், எதார்த்தமாகவும் பின்னப்பட்டிருக்கின்றன! சமகாலக் குடும்ப உறவுகளில் நாம் சந்திக்க நேர்கிற நிகழ்வுகளின் ஒரு மெல்லிய அறிமுகத்தை இந்தப் புனைவு அளிப்பதனால், நந்தினியின் குணச்சித்திரத்தோடு கதையின் தொடக்கம் முதல் இறுதி வரையிலும் நம்மால் ஒன்ற இயல்கிறது. அவ்வகையில், மனித உறவுகளின் நாசூக்கான சிக்கல்களை விடுவித்து வெற்றிபெறும் பெண் ஒருத்தியை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துவதில் ஆசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். உங்கள் வீட்டுப் பெண்மணிகளுக்குப் பரிசளிக்க நல்ல தேர்வு!

Quantity

SKU: ba4e55f92576.

Product Description

Generation gap plays a major role in the family relationship issues. In this novel, the heroine Nanthini’s characterization is superb. The nicely spinned story with interesting events portrays the challenges in the family relationship and how they are handled overcoming the generation gap. (மனித உறவுகளுக்கு இடையே மாயப்பிளவுகளை உருவாக்குவதில் தலைமுறை இடைவெளி தொடர்ந்து பங்களித்து வருகிறது. குடும்பத்துக்கு உள்ளும் வெளியும் இதனால் ஏற்படுகிற இன்னல்களையும், அவை இடையறாது உருவாக்குகிற தடைக்கற்களையும் கதையின் நாயகி நந்தினியின் அனுபவங்கள் வாயிலாக நமக்கு உணர்த்துகிறார் நம் அபிமான எழுத்தாளர் வாசந்தி அவர்கள். நெகிழ்வுத்தன்மை என்னும் நெம்புகோல் கொண்டு, தலைமுறைகளுக்கு இடைப்பட்ட தடைகளை அப்புறப்படுத்த விழையும் நந்தினியின் முயற்சிகளைத் திருவினையாக்குகிற சம்பவங்கள் சுவாரசியமாகவும், அதே நேரம், எதார்த்தமாகவும் பின்னப்பட்டிருக்கின்றன! சமகாலக் குடும்ப உறவுகளில் நாம் சந்திக்க நேர்கிற நிகழ்வுகளின் ஒரு மெல்லிய அறிமுகத்தை இந்தப் புனைவு அளிப்பதனால், நந்தினியின் குணச்சித்திரத்தோடு கதையின் தொடக்கம் முதல் இறுதி வரையிலும் நம்மால் ஒன்ற இயல்கிறது. அவ்வகையில், மனித உறவுகளின் நாசூக்கான சிக்கல்களை விடுவித்து வெற்றிபெறும் பெண் ஒருத்தியை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துவதில் ஆசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். உங்கள் வீட்டுப் பெண்மணிகளுக்குப் பரிசளிக்க நல்ல தேர்வு!)

Additional Information

ebookauthor

வாஸந்தி