456-jananam-400 kb

$9

வாசந்தி அவர்களின் இம்மூன்று கதைகளின் தொகுப்பினுள் ஓர் ஒற்றுமை ஓங்கி உயர்ந்து நிற்கிறது. அது, கதை சொல்வதற்கென்று அவர் கண்டெடுத்த களம். தமிழ்க்காற்றின் தடயமற்ற பிரதேசங்களின் வாழ்வியலைப் பின்புலத்தில் வைத்தபடி, தமிழில் கதை சொல்லியிருக்கும் திறன் திகைப்பூட்டும் தித்திப்பு! இன்னும் தேசத்தின் சமவெளியில் காணப்படும் சந்தோஷங்களை அறிந்திராத வடகிழக்கு இந்தியாவின் வாழ்க்கைச் சித்திரங்கள் இந்நூலில் வண்ணமயமாக வானளாவி நிற்கின்றன. ’ஜனனம்’ – என்ற முதல்கதை வாழ்ந்தும் வாழாத ஒரு வரலாறு எனலாமோ? ஆழ்ந்த உணர்வுகளையும், அலைக்கழிக்கும் இழப்புகளையும், விடைகாண முடியா வினாக்களையும் தெளிவான நடையில் திறம்பட உரைத்திருக்கிறார். ‘மூங்கில் பூக்கள்’ – எனும் கதை, இருந்த இடத்திலேயே நம்மை இடம்பெயர்த்தி எங்கோ இட்டுச்செல்வதை உள்மனது உரக்க உரைக்கிறது. அந்தக் கதைபடர்ந்திருக்கும் பக்கங்களை வாசிக்கும்போது மிஜோரத்தில் சுவாசித்திருப்பதுபோன்ற ஒரு மலைப்பை ஏற்படுத்தியிருக்கிறார் வாசந்தி. ’ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன’ என்ற கதை வாழ்வியலுக்கும் மனோவியலுக்கும் இடையே ஒளிந்திருக்கும் வினோதப் பிணைப்பை விவரித்துக் கூறுகிறது. இதன் நிகழ்வுகள் எங்கும் சம்பவிக்கலாம் என்றாலும், அவற்றின் களமாக மேகாலயாவைத் தேர்ந்தெடுத்திருப்பது, சொல்லியிருக்கிற கதையின் சுவாரஸ்யத்தைப் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. வாசந்தி அவர்களின் இந்த முக்கதைத்தொகுதி, வாசிப்பனுபவத்தின் புதிய பரிமாணங்களைப் புலப்படுத்துகிறது.

Quantity

SKU: cbdecb855d47.

Product Description

This is a collection of three stories. The author has chosen the life style of people of the North-East. Who are yet to sync with the people living elsewhere in the country. “Jananam” deals with the failed people. Narration brings out deep emotions, unbearable losses and unanswered questions. “Moongil Pookkal” lifts us to Mizoram- a state of fine and fresh air. Third story titled “Plum Marangal Pooththu Vittana” vividly tells us about the unknown connection between physical and mental state. Background of Mizoram adds charm. Reading experience gets a new dimension (வாசந்தி அவர்களின் இம்மூன்று கதைகளின் தொகுப்பினுள் ஓர் ஒற்றுமை ஓங்கி உயர்ந்து நிற்கிறது. அது, கதை சொல்வதற்கென்று அவர் கண்டெடுத்த களம். தமிழ்க்காற்றின் தடயமற்ற பிரதேசங்களின் வாழ்வியலைப் பின்புலத்தில் வைத்தபடி, தமிழில் கதை சொல்லியிருக்கும் திறன் திகைப்பூட்டும் தித்திப்பு! இன்னும் தேசத்தின் சமவெளியில் காணப்படும் சந்தோஷங்களை அறிந்திராத வடகிழக்கு இந்தியாவின் வாழ்க்கைச் சித்திரங்கள் இந்நூலில் வண்ணமயமாக வானளாவி நிற்கின்றன. ’ஜனனம்’ – என்ற முதல்கதை வாழ்ந்தும் வாழாத ஒரு வரலாறு எனலாமோ? ஆழ்ந்த உணர்வுகளையும், அலைக்கழிக்கும் இழப்புகளையும், விடைகாண முடியா வினாக்களையும் தெளிவான நடையில் திறம்பட உரைத்திருக்கிறார். ‘மூங்கில் பூக்கள்’ – எனும் கதை, இருந்த இடத்திலேயே நம்மை இடம்பெயர்த்தி எங்கோ இட்டுச்செல்வதை உள்மனது உரக்க உரைக்கிறது. அந்தக் கதைபடர்ந்திருக்கும் பக்கங்களை வாசிக்கும்போது மிஜோரத்தில் சுவாசித்திருப்பதுபோன்ற ஒரு மலைப்பை ஏற்படுத்தியிருக்கிறார் வாசந்தி. ’ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன’ என்ற கதை வாழ்வியலுக்கும் மனோவியலுக்கும் இடையே ஒளிந்திருக்கும் வினோதப் பிணைப்பை விவரித்துக் கூறுகிறது. இதன் நிகழ்வுகள் எங்கும் சம்பவிக்கலாம் என்றாலும், அவற்றின் களமாக மேகாலயாவைத் தேர்ந்தெடுத்திருப்பது, சொல்லியிருக்கிற கதையின் சுவாரஸ்யத்தைப் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. வாசந்தி அவர்களின் இந்த முக்கதைத்தொகுதி, வாசிப்பனுபவத்தின் புதிய பரிமாணங்களைப் புலப்படுத்துகிறது.)

Additional Information

ebookauthor

வாஸந்தி