View Cart “ஜோதிடம் உண்மையா?” has been added to your cart.
56-thatha-sellam-01

$4

தாத்தாவுக்கும் பேத்திக்கும், பாட்டிக்கும் பேத்திக்குமான அன்னியோன்ய உறவு என்றும் நினைவு கூர்ந்து மகிழச் செய்வது. தம்மிடம் வளரும் தன் பேத்தியின் வளர் பருவத்தை தாத்தா செல்லத்தில் சுவைபட விவரிக்கிறார் ஆசிரியர். மழலையின் மகிழ்வை, உச்சரிப்பின் தித்திப்பை அழகிய நடையில் வடித்திருக்கிறார். அந்த இனிமையை வாசிப்போரும் அனுபவிக்கும் வண்ணம் உருவாக்கியிருப்பது சிறப்பு. 19 அத்தியாயங்களில் குழந்தையின் மென்ஸ்பரிசத்தின் மகிழ்வு, முதியோருக்கும் குழந்தைக்குமான பாசப்பிணைப்பு, குழந்தையின் குறும்புகள், குழந்தையை அழைக்க வரும் பெற்றோரிடம் மாலையில் குழந்தை போகத் துடிக்கும் மனநிலை என அனைத்துப் பரிமாணங்களும் துல்லியமாகப் பதிவாகியுள்ளன. குழந்தையின் உடல்நிலை, கீழே விழுவதால் வரும் காயத்தின் வலி, பெரியவர்களைப் பார்த்து அவள் கற்கும் விதம் என பிள்ளையின் அன்றாட நிகழ்வுகளை நுணுக்கமான விபரங்களோடு எளிதான சொல்நடையினூடாய் கொடுத்த விதம் சுவாரஸ்யம் கூட்டி வாசிக்கத் தூண்டும் ஆர்வத்தை வளர்க்கிறது. மேலும், அவளை உணவு உண்ணச் செய்ய தாம் எடுக்கும் பிரயத்தனங்கள், பார்க்கிற்கு செல்ல விரும்பிய குழந்தையைக் கூட்டிச் செல்லமுடியாமல் வருந்துவது, அவளின் சாக்லேட் ஆசையைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவது என குழந்தையின் நலனை விரும்பும் தாத்தா, பாட்டி குழந்தைக்காக விட்டுக் கொடுக்கும் சில விஷயங்களை சின்னச் சின்ன சம்பவங்களில் ஆசிரியர் சொல்லியிருக்கிற விதம் நம் பால்ய காலத்தை நமக்கு நினைவூட்டுகிறது. நூலைப் படித்து முடிக்கையில் ரம்மியமான மன உணர்வு எஞ்சி நிற்கிறது. ஆனாலும் இன்னும் தொடரக்கூடாதா என ஏங்கும் வகையில் மழலை உச்சரிப்பின் இன்பம் நம்மைப் பாதிக்கிறது.

Quantity

SKU: 1c1419bb36e8.

Product Description

The intimate relationship between the grandparents and the grandchildren are blissful memories of one’s life. The author describes the growing up of his granddaughter in his narration, in a lovely way. The astonishing fact is the readers can feel and cherish the pleasure of his words. In 19 chapters the author portrayed the very dimensions of child upbringing like the gentle touch of the child, the affection between the old and the young, the little pranks of the kids and the rush expressed by the children while returning back to their parents in the evening and so on. The captivating phrases that explains the facts of the health of the child, minor injuries due to falling down and the way it learns from observing the older ones are a pleasurable experience for the readers with out a doubt. The difficulties faced while feeding up the child, the regret that shows up when they’re unable to roam in the Park, the problems they encounter whenever they want to suppress the rush of  their granddaughter for the chocolates are recognized by the reader from the words of the author. They remind us of our own childhood memories. The reader gets a fantastic experience while finishing the book and makes the reader to long that the book would never end. (தாத்தாவுக்கும் பேத்திக்கும், பாட்டிக்கும் பேத்திக்குமான அன்னியோன்ய உறவு என்றும் நினைவு கூர்ந்து மகிழச் செய்வது. தம்மிடம் வளரும் தன் பேத்தியின் வளர் பருவத்தை தாத்தா செல்லத்தில் சுவைபட விவரிக்கிறார் ஆசிரியர். மழலையின் மகிழ்வை, உச்சரிப்பின் தித்திப்பை அழகிய நடையில் வடித்திருக்கிறார். அந்த இனிமையை வாசிப்போரும் அனுபவிக்கும் வண்ணம் உருவாக்கியிருப்பது சிறப்பு. 19 அத்தியாயங்களில் குழந்தையின் மென்ஸ்பரிசத்தின் மகிழ்வு, முதியோருக்கும் குழந்தைக்குமான பாசப்பிணைப்பு, குழந்தையின் குறும்புகள், குழந்தையை அழைக்க வரும் பெற்றோரிடம் மாலையில் குழந்தை போகத் துடிக்கும் மனநிலை என அனைத்துப் பரிமாணங்களும் துல்லியமாகப் பதிவாகியுள்ளன. குழந்தையின் உடல்நிலை, கீழே விழுவதால் வரும் காயத்தின் வலி, பெரியவர்களைப் பார்த்து அவள் கற்கும் விதம் என பிள்ளையின் அன்றாட நிகழ்வுகளை நுணுக்கமான விபரங்களோடு எளிதான சொல்நடையினூடாய் கொடுத்த விதம் சுவாரஸ்யம் கூட்டி வாசிக்கத் தூண்டும் ஆர்வத்தை வளர்க்கிறது. மேலும், அவளை உணவு உண்ணச் செய்ய தாம் எடுக்கும் பிரயத்தனங்கள், பார்க்கிற்கு செல்ல விரும்பிய குழந்தையைக் கூட்டிச் செல்லமுடியாமல் வருந்துவது, அவளின் சாக்லேட் ஆசையைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவது என குழந்தையின் நலனை விரும்பும் தாத்தா, பாட்டி குழந்தைக்காக விட்டுக் கொடுக்கும் சில விஷயங்களை சின்னச் சின்ன சம்பவங்களில் ஆசிரியர் சொல்லியிருக்கிற விதம் நம் பால்ய காலத்தை நமக்கு நினைவூட்டுகிறது. நூலைப் படித்து முடிக்கையில் ரம்மியமான மன உணர்வு எஞ்சி நிற்கிறது. ஆனாலும் இன்னும் தொடரக்கூடாதா என ஏங்கும் வகையில் மழலை உச்சரிப்பின் இன்பம் நம்மைப் பாதிக்கிறது.)

Additional Information

ebookauthor

P.நடராஜன்