502-barmavil-bharathi-thadai

$11

மகாகவி பாரதி 1921ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் நாள் இயற்கை எய்தியபின் 1923ஆம் ஆண்டு செல்லம்மா பாரதியின் முயற்சியில் பாரதியின் தேசபக்திப் பாடல்கள் இரு தொகுதிகளாக வெளிக்கொணரப்பட்டன. பண்டிட் ஹரிஹர சர்மா என்ற பாரதியின் உறவினருக்குப் பதிப்புரிமை ரூ.2000க்கு வாங்கி மாதம் ரூ.25/- வீதம் வாங்கிடச் செல்லம்மா பாரதி எழுதிய பத்திரம் இந்நூலில் அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் C.P.V.செல்லம் என்ற நகரத்தார், பாரதியின் தேசபக்திப் பாடல் தொகுதிகளை ஆயிரக்கணக்கில் பர்மாவில் உள்ள ரங்கூனுக்கு எடுத்துச் சென்று அங்குள்ள தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கியுள்ளார். 1928ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசின் “சைமன் கமிஷன்” பர்மாவிற்குச் சென்றபோது கமிஷனை எதிர்த்து ரங்கூனில் பல ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அவ்வூர்வலங்களில் பங்கு கொண்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள், கைகளில் பாரதியின் தேசபக்திப் பாடல் புத்தகங்களை வைத்துக் கொண்டு பாடி வருவதைக் கண்ட பர்மா அரசு, பாரதியின் நூல்களை இந்தியக் குற்றவியல் பிரிவின் கீழ் தடைசெய்தது. பர்மா அரசு விதித்த தடை ஆணையைச் சென்னை மாகாண அரசு, சென்னை அரசுக்குறிப்பில் 1928 செப்டம்பரில் பதிவு செய்து, இங்கும் தடை செய்து, அந்நூல்களைப் பறிமுதல் செய்யவும் ஆணை பிறப்பித்தது. 2500க்கும் மேற்பட்ட பாரதியின் தேசபக்திப் பாடல்கள், நூல்கள் பல இடங்களிலிருந்து சென்னை போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை எதிர்த்து எழுந்த அரசியல் புரட்சியினை ஆழமாகச் சித்தரித்து இந்நூலில் எழுதப்பட்டுள்ளது. சென்னை சட்டமன்ற மேலவையில் தீரர் சத்தியமூர்த்தி போன்றோர் ஆற்றிய வீர உரைகளும் இடம் பெற்றுள்ளன. தமிழ்ச் சான்றோர்களது எதிர்ப்புகளையும், பத்திரிகைகளின் விமர்சனங்களையும் உள்ளடக்கிய இந்த ஆய்வு நூல் விரிவாகத் தகுந்த ஆவணங்களுடன் எழுதப்பட்டுள்ளது.

Quantity

SKU: 61b685ce3d9b.

Product Description

After the death of Mahakavi Bharathiyar on 12th September 1921, thanks to the efforts of his wife Chellamma Bharathi two volumes of Bharathi’s patriotic songs were published. The bond that was executed by Chellammal Bharathi in favor of his relative Harihara Sharma as publishing right for Rs 2000/- payable at the rate of Rs25/ -a month is published in the book! Later, one CPV Chellam of Chettinad purchased thousands of copies of the book and distributed to the Tamils living there in Rangoon in Burma. When “Simon Commission” of the British government visited Burma 9in 1928, it was received with demonstrations and processions, thousands of people keeping the Bharthiyar’s songs in hand, the Government of Burma banned the book under Indian Penal Code. Basing on this the State of Chennai recorded the ban and brought in the ban in September 1928 and proscribed the book and seizure was also ordered. Morethan 2500 copies of Bharathi’s book of patriotic songs were seized from many places by the Chennai Police. The political protests that followed has been published in great detail in the book. The fiery speeches of Sathiyamurthy in the Madras Legislative Council also find a place in the book. The protests of the Tamil intelligentsia and the press have been described in detail with authority in this work. (மகாகவி பாரதி 1921ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் நாள் இயற்கை எய்தியபின் 1923ஆம் ஆண்டு செல்லம்மா பாரதியின் முயற்சியில் பாரதியின் தேசபக்திப் பாடல்கள் இரு தொகுதிகளாக வெளிக்கொணரப்பட்டன. பண்டிட் ஹரிஹர சர்மா என்ற பாரதியின் உறவினருக்குப் பதிப்புரிமை ரூ.2000க்கு வாங்கி மாதம் ரூ.25/- வீதம் வாங்கிடச் செல்லம்மா பாரதி எழுதிய பத்திரம் இந்நூலில் அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் C.P.V.செல்லம் என்ற நகரத்தார், பாரதியின் தேசபக்திப் பாடல் தொகுதிகளை ஆயிரக்கணக்கில் பர்மாவில் உள்ள ரங்கூனுக்கு எடுத்துச் சென்று அங்குள்ள தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கியுள்ளார். 1928ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசின் “சைமன் கமிஷன்” பர்மாவிற்குச் சென்றபோது கமிஷனை எதிர்த்து ரங்கூனில் பல ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அவ்வூர்வலங்களில் பங்கு கொண்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள், கைகளில் பாரதியின் தேசபக்திப் பாடல் புத்தகங்களை வைத்துக் கொண்டு பாடி வருவதைக் கண்ட பர்மா அரசு, பாரதியின் நூல்களை இந்தியக் குற்றவியல் பிரிவின் கீழ் தடைசெய்தது. பர்மா அரசு விதித்த தடை ஆணையைச் சென்னை மாகாண அரசு, சென்னை அரசுக்குறிப்பில் 1928 செப்டம்பரில் பதிவு செய்து, இங்கும் தடை செய்து, அந்நூல்களைப் பறிமுதல் செய்யவும் ஆணை பிறப்பித்தது. 2500க்கும் மேற்பட்ட பாரதியின் தேசபக்திப் பாடல்கள், நூல்கள் பல இடங்களிலிருந்து சென்னை போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை எதிர்த்து எழுந்த அரசியல் புரட்சியினை ஆழமாகச் சித்தரித்து இந்நூலில் எழுதப்பட்டுள்ளது. சென்னை சட்டமன்ற மேலவையில் தீரர் சத்தியமூர்த்தி போன்றோர் ஆற்றிய வீர உரைகளும் இடம் பெற்றுள்ளன. தமிழ்ச் சான்றோர்களது எதிர்ப்புகளையும், பத்திரிகைகளின் விமர்சனங்களையும் உள்ளடக்கிய இந்த ஆய்வு நூல் விரிவாகத் தகுந்த ஆவணங்களுடன் எழுதப்பட்டுள்ளது.)

Additional Information

ebookauthor

டாக்டர் வே.வெங்கட்ராமன்