503-Bharathikku-Thadai

$13

“பாரதிக்குத் தடை” எனும் இந்த வரலாற்று ஆய்வு நூல் 2004ஆம் ஆண்டு வெளியானது. பாரதியின் அரசியல் வாழ்க்கை வரலாற்றை வேறெந்த நூலிலும் சொல்லப்படாத வகையில் கொண்டு வந்து விரிவாக ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் இந்திய உள்துறை ஆவணங்கள், லண்டனிலிருந்து தருவிக்கப்பட்ட மைக்ரோ பிலிம் ஆவணங்கள், புதுதில்லி அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் ஆவணங்கள் (நேரு நினைவு மியூசியம் மற்றும் நூலகம்) , சென்னையிலிலுள்ள தமிழ்நாடு ஆவணக் காப்பகத்திலிருந்து பெறப்பட்ட பொதுத்துறை நிதித்துறை ஆணைகள், சுதந்திரப் போராட்ட ஆவணங்கள் (1906 – 1914) , கீழ்நிலைச் செயலர் ரகசிய ஆணைகள், சென்னை மாகாணப் பத்திரிகைக் குறிப்புகள் (1905 -1914) , சென்னை போலீஸ் ரகசியக் குறிப்புகள், சட்டத்துறை ஆணைகள், அரசு வாராந்திரக் குறிப்புகள் போன்ற பல ரகசிய ஆவணக் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. பாரதியின் பத்திரிகை உலகப் பங்களிப்புகள், குறிப்பாக அவரது அரசியல் இலக்கியங்களுக்குப் பிரிட்டிஷ் அரசு இந்திய பத்திரிகைச் சட்டத்தின் கீழ் எடுத்த தடைகள், அவரால் பாண்டியிலிருந்து கொண்டுவரப்பட்ட இந்தியா, விஜயா, மற்றும் சூரியோதயம் போன்ற பத்திரிகைகள் தடை செய்யப்பட்டதற்கான காரணங்கள், “இந்தியா” தடை செய்யப்பட்டுப் பின் மீண்டு வந்தபின் மறுபடியும் தடை செய்யப்பட்டது, பாரதியின் சீடர்கள் தடை செய்யப்பட்ட பத்திரிகைகளுடன் பிரிட்டிஷ் இந்தியாவிற்குக் கடத்தி வந்த உண்மைகள், ஆஷ் படுகொலைக்குப் பாரதியும் காரணம் என அவரைக் கைது செய்ய அரசு விடுத்த பிடிவாரண்ட் ஆணை, பல தடைகளுக்கு அரசு இட்ட ஆணைகள், பாரதியின் பாண்டிச்சேரி வாழ்க்கை ஆகியவை இந்நூலில் தெளிவாக, ஆவணங்களின் சாட்சிகளுடன் எழுதப்பட்டுள்ளன. பிற்சேர்க்கையில் பாரதி தொடர்புடைய ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. பிற்காலச் சந்ததியினர் பாரதியை அறிந்து கொள்ள இந்நூலினைப் படித்தாலே அவரது அரசியல் வாழ்க்கையினை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

Quantity

SKU: 4120412f05ae.

Product Description

“BHARATHIKKUTH THADAI” – this historic research work was published in the year 2004. In no other work the political life of Bharathi has been so nicely brought out based on intensive research. Information culled out with great efforts from the records such as Indo- British Home Department’s records, microfilm records from London, Records from New Delhi All India Congress Committee(Nehru Memorial Museum and Library), Public works and finance department orders got from Tamilnadu Records Treasury in Chennai, Records of Freedom Struggle (1906-1914), Under-Secretary’s Confidential orders, State of Chennai’s Press notes (1905-1914), Chennai police confidential notes, Law departments instructions, Governments weekly press notes etc. etc., Bharathi’s contribution to the news world-media- in particular the British governments ban on his literary, political publications. The book includes the reasons for banning the news papers named India, vijaya, Suryothayam which he brought from Pondichery; how “India” was banned, brought out again to be banned; truth about Bharathi’s disciples who brought into British India the banned news magazines; the warrant of arrest issued on Bharathi for his alleged involvement in the assassination of Ash; many instruction and orders issued in the matter of ban; Bharathi’s life in Pondichery They are published with documentary proofs. As an annexure the records of Bharathi are also d. The present day generation and the future ones by reading this book can understand the entire life history of Bharathi. (“பாரதிக்குத் தடை” எனும் இந்த வரலாற்று ஆய்வு நூல் 2004ஆம் ஆண்டு வெளியானது. பாரதியின் அரசியல் வாழ்க்கை வரலாற்றை வேறெந்த நூலிலும் சொல்லப்படாத வகையில் கொண்டு வந்து விரிவாக ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் இந்திய உள்துறை ஆவணங்கள், லண்டனிலிருந்து தருவிக்கப்பட்ட மைக்ரோ பிலிம் ஆவணங்கள், புதுதில்லி அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் ஆவணங்கள் (நேரு நினைவு மியூசியம் மற்றும் நூலகம்), சென்னையிலிலுள்ள தமிழ்நாடு ஆவணக் காப்பகத்திலிருந்து பெறப்பட்ட பொதுத்துறை நிதித்துறை ஆணைகள், சுதந்திரப் போராட்ட ஆவணங்கள் (1906 – 1914), கீழ்நிலைச் செயலர் (ரகசிய) ஆணைகள், சென்னை மாகாணப் பத்திரிகைக் குறிப்புகள் (1905 -1914), சென்னை போலீஸ் ரகசியக் குறிப்புகள், சட்டத்துறை ஆணைகள், அரசு வாராந்திரக் குறிப்புகள் போன்ற பல ரகசிய ஆவணக் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. பாரதியின் பத்திரிகை உலகப் பங்களிப்புகள், குறிப்பாக அவரது அரசியல் இலக்கியங்களுக்குப் பிரிட்டிஷ் அரசு இந்திய பத்திரிகைச் சட்டத்தின் கீழ் எடுத்த தடைகள், அவரால் பாண்டியிலிருந்து கொண்டுவரப்பட்ட இந்தியா, விஜயா, மற்றும் சூரியோதயம் போன்ற பத்திரிகைகள் தடை செய்யப்பட்டதற்கான காரணங்கள், “இந்தியா” தடை செய்யப்பட்டுப் பின் மீண்டு வந்தபின் மறுபடியும் தடை செய்யப்பட்டது, பாரதியின் சீடர்கள் தடை செய்யப்பட்ட பத்திரிகைகளுடன் பிரிட்டிஷ் இந்தியாவிற்குக் கடத்தி வந்த உண்மைகள், ஆஷ் படுகொலைக்குப் பாரதியும் காரணம் என அவரைக் கைது செய்ய அரசு விடுத்த பிடிவாரண்ட் ஆணை, பல தடைகளுக்கு அரசு இட்ட ஆணைகள், பாரதியின் பாண்டிச்சேரி வாழ்க்கை ஆகியவை இந்நூலில் தெளிவாக, ஆவணங்களின் சாட்சிகளுடன் எழுதப்பட்டுள்ளன. பிற்சேர்க்கையில் பாரதி தொடர்புடைய ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. பிற்காலச் சந்ததியினர் பாரதியை அறிந்து கொள்ள இந்நூலினைப் படித்தாலே அவரது அரசியல் வாழ்க்கையினை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.)

Additional Information

ebookauthor

டாக்டர் வே.வெங்கட்ராமன்