சுருக்கெழுத்து

பல்வேறு குறியீடுகளைப் பயன்படுத்தி சின்னஞ்சிறு பத்திகளில் தகவல்களையும், பேச்சுகளையும், விவரங்களையும் பதிவு செய்துகொள்ளும் முறையே சுருக்கெழுத்தாகும். விரைவாக எழுதும் இம்முறையில் பயிற்சி பெற்றவர்களைச் சுருக்கெழுத்தர் (stenographer) எனக்கூறுவர். லத்தீன் மொழிச் சொலான stenography என்பதற்கு சிறுசிறு அமைப்புகளில் எழுதுதல் எனப் பொருள்.

சிசேரோ (Cicero), செனெகா (Seneca) போன்ற கிரேக்க தத்துவ அறிஞர்களின் "Tenets and Lectures" என்ற சொற்பொழிவை மெர்கஸ் தெரோ (Mercus Thero) என்பவர் முதன் முதலாக சிறு சிறு அமைப்புகளில் எழுதினார் எனக் கூறப்படுகிறது. ஆனால் தற்போதைய சுருக்கெழுத்து முறை 19ஆம் நூற்றாண்டில்தான் சிறப்புடன் வளர்ச்சியுற்றது.

சர் ஐசக் பிட்மன் என்னும் ஆங்கில எழுத்தாளர் 1837ஆம் ஆண்டில் தற்போது பழக்கத்தில் உள்ள புதிய வகைச் சுருக்கெழுத்து முறையை உருவாக்கினார். இவரது கோட்பாட்டின்படி 26 ஆங்கில எழுத்துகளும் சிறு சிறு கோடுகள், வட்டங்கள் மற்றும் புள்ளிகள் என மாற்றி எழுதப்படுகின்றன. ஆனால் இவை அனைத்தும் கோடுகள் போடப்பட்ட தாள்களில் மட்டுமே எழுதப்பட்டன.

ஜான் ராபர்ட் கிரெக் என்பவர் 1888ஆம் ஆண்டு இந்த முறையை மேம்படுத்தினார். முதலில் இச்சுருக்கெழுத்து முறை ஆங்கில மொழிக்கு மட்டுமே பயன்பட்டு வந்தது; காலப் போக்கில் இம்முறை பிற மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

About The Author

4 Comments

  1. Dr. S. Subramanian

    Stenography has Greek roots and not Latin as mentioned in the artcile. Steno means narrow and graphy means writing. Shothand being what it is it derived the meaning from Greek word.

    Cicero and Seneca were Roman statesment and not Greek as mentioned in the article.

  2. Nilacharal

    முனைவர் திரு.சுப்ரமணியன் அவர்களுக்கு,

    பிழைகள் திருத்தப்பட்டுவிட்டன. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி

    ஆசிரியர் குழு

  3. mary brunda

    சுருகெழுத்து படிபதினால் வேலைவாய்ப்பு கிடைக்க வழி உள்ளதா,

Comments are closed.