நடப்பவருக்கு நல்ல செய்தி தரும் விஞ்ஞான ஆய்வு!

ஸயின்ஸ் டெய்லி தனது ஜூலை 15 2009 இதழில் நடப்பவருக்கும் பைக் ஓட்டுவோருக்கும் ஒரு நல்ல செய்தியை விஞ்ஞானபூர்வமாக அறிவித்துள்ளது!

இவர்கள் வேலை பார்க்க அதிக தகுதி வாய்ந்தவர்கள் என்பதோடு இவர்கள் உடல் பருமனாகும் கவலை அற்றவர்கள் என்றும் அது தெரிவிக்கிறது. அத்தோடு ஆரோக்கியமான ட்ரைக்ளிசெரைட், ரத்த அழுத்தம் மற்றும் இன்சுலின் அளவுகள் இவர்களுக்கு இருக்கின்றன என்றும் அந்த இதழ் தெரிவிக்கிறது!

வயது வந்தோரில் பெரும்பாலானோருக்கு ஒவ்வோரு நாளும் 60 நிமிட சுறுசுறுப்பான நடை போதும் – உடல் பருமனாகாமல் தடுக்க! வேலைக்குச் செல்வோர் சைக்கிளில் சென்றாலும் இதே விளைவைப் பெற முடியும்.

நார்த் கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பென்னி கார்டன் லார்ஸன் பி.ஹெச்.டி தனது சகாக்களுடன் 2364 பேர்களிடம் ஆய்வை மேற்கொண்டார். 2005 மற்றும் 2006ல் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பங்கேற்றோர் தாங்கள் நடந்த நேரம், சைக்கிள் ஓட்டிய நேரம் ஆகியவற்றை (சென்ற தூரம், அதில் ஈடுபட்டிருந்த நிமிடங்கள் உள்ளிட்ட எல்லா தகவல்களையும்) தந்தனர்.

பங்கேற்றோரின் உயரம், எடை, இதர ஆரோக்கியத்திற்கான முக்கிய அறிகுறிகள் ஆகியவையும் தொகுக்கப்பட்டன. ட்ரெட் மில் டெஸ்ட் மூலம் முடிவு செய்யப்பட்ட உடல் தகுதி அளவுகள் அவர்களிடம் உள்ளனவா என்றும் பார்க்கப்பட்டது. ஆய்வின் போது நான்கு நாட்கள் ஒரு ஆக்ஸிலரோமீட்டரை பொருத்திக் கொண்டு உடல் தகுதி அளவுகளை அவர்கள் ஆய்வு மூலம் வெளிப்படுத்தினர்.

இதிலிருந்தே அவர்கள் உடல் பருமனாகும் அபாயம் அற்றவர்கள் என்பதோடு ஆரோக்கியமான ட்ரைக்ளிசெரைட் , ரத்த அழுத்தம் மற்றும் இன்சுலின் அளவுகள் அவர்களுக்கு இருக்கின்றன என்பதும் தெரிய வந்தது!

என்ன நடக்க கிளம்பி விட்டீர்களா?

About The Author

4 Comments

  1. Rajan

    Thank you for sharing this information. Though I have felt several times that I should also have the habit of warlking regularly, but not implementing (lazy) … Hope I will start from today…

    Thank you again for your motivation…
    Regards!

  2. P.Balakrishnan

    நடைப் பயிற்சியின் போது காதுகளில் மின்னணுக் கருவிகளை மாட்டிக்கொண்டு
    நடக்கலாகாது என்பது ஓர் அறிவுரை.

  3. so.njaanasambanthan

    எல்லா உறுப்புகளையும் இயங்கச் செய்வதால் நடை ஒரு சிறந்த பயிற்சிதான் . அறிவியல் பூர்வமாய் எடுத்துச்சொன்னமைக்கு நன்றி .

Comments are closed.