பாபா பதில்கள் – கல்! சொல்!

வாருங்கள்! வலிமையான இந்தியாவிற்கு வழி கோலுங்கள்! 

கல்! சொல்!

விரதங்கள் இருப்பதில் என்ன பலன் என்றால், நம் உடம்பில் வயிற்றில் நெருப்பு இருக்கிறது. விரதம் இருக்கிற காலத்தில் நாம் இட்லி, தோசை எல்லாம் சாப்பிடாமல் இருப்பதினால் கண கண என்று அடி வயிற்றில் இருக்கிற நெருப்பு, அந்த நேரத்தில் நாம் எவ்வளவு மந்திரங்கள் சொல்கிறோமோ எவ்வளவு ஜபம் செய்கிறோமோ அது அப்படியே வேகமாக மேலெழும்பி வரும். விசிறி விட்டால் குப் என்று மேலே எழுவது போல, நார்மல் நாட்களை விட விரத நாட்களில் இது அதிகமாக இருக்கும். ஜனங்களிடம் பேசுவது, பழகுவது, அவர்களைத் தொடுவது, அதன் மூலமாக வரும் நெகடிவ் எனர்ஜி எல்லாம் அந்த விரத நாட்களில் எரிந்து விடும். தீயினில் தூசாகும். அந்த நெருப்பு உடம்பில் மேலே வருகிற போது அது சாத்தியம். இது எல்லோருக்கும் இருக்கிறது.

ஐயப்பசாமி, நரசிம்ம சாமி அதனால்தான் யோக நிலையில் உட்கார்ந்திருக்கிறார்கள். கோழி மாதிரி உட்காருவதை குக்குடம் என்பார்கள். இரண்டு காலை மடித்துக் கொண்டு உட்காருவது. ஒரு breathing system இருக்கிறது. It is all prana.

இந்த உடம்பில் காற்றுதான் ஓடிக் கொண்டிருக்கிறது. விரதம் இருப்பதனால் அடி வயிற்றில் இருக்கிற நெருப்பு நேராக நெற்றிப் பொட்டிற்கு வந்து கொண்டேயிருக்கும். உடம்பு சூடாகும். அதை குளிர்ச்சி பண்ணணும். அதனால்தான் ஐயப்பனுக்கு பசு நெய்யினால் அபிஷேகம் செய்வது; நரசிம்மருக்கு பானகம் கொடுப்பது. அது குளிர்ச்சி தரும். உடம்பில் இருக்கிற சூட்டை பாலன்ஸ் செயவதற்காக கொடுக்கப்படுகிற ஆகாரங்கள். It is all part of yoga. நான் விரதம் இருக்கும் நாட்களில் என் தவம் இன்னும் அதிகரிக்கும். நான் physical ஆக இங்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் there is an interlink between me and this temple statue. இந்தக் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்தவுடனேயே நான் சொல்லிவிட்டேன். ஒரு காலத்தில் கல்லில் இருந்து அந்த ருத்ர சக்தி நரசிம்மமாக வெளிப்பட்டது. இந்த யுகத்தில் என்னுடைய சொல்லில் இருக்கிற ருத்ர சக்தி கல்லிலும் இருக்கிறது என்று சொன்னேன். அந்தக் காலத்தில் பிரகலாதனுக்காக கல்லிலிருந்து நரசிம்மன் என்கிற ஸ்தூலத்திற்குள் வந்தது. நான் இப்போது என்ன சொல்கிறேன் என்றால் என்னுடைய உடலில் இருக்கிற ருத்ர சக்தி இந்தக் கல்லுக்குள் இருக்கிறது என்று சொல்லி ‘கல்லில் பார்க்க முடிந்தவர்கள் கல்லில் பாருங்கள் சொல்லில் பார்க்க முடிந்தவர்கள் சொல்லில் பாருங்கள். எப்படியாவது கடைத்தேறினால் சரி’ என்றேன்.

நிறைய பேருக்கு human body, அதற்குள் ஒரு energy, இந்த concept எல்லாம் புரிவதில்லை. அடுத்த நிமிடமே நான் அரட்டை அடிக்கிறேன் அதனால் அவர்களுக்கு ஒரு மனிதனாகத்தான் பார்க்க முடியுமே தவிர ஒரு ராமனாகவோ, கிருஷ்ணனாகவோ இறந்த பின்னால்தான் பார்க்கிறார்கள். வாழ்கிற காலத்தில் ராமனையும், கிருஷ்ணனையும் எத்தனை பேர் தெரிந்து கொண்டார்கள்? இல்லையா! இன்றைக்கு ‘அலை பாயுதே’ என்று பாடிக் கொண்டிருப்பார்கள். ஒரு சில கோபிகைகள் கிருஷ்ணனைத் தெரிந்து கொண்டவர்கள் இருக்கலாம். கம்சனுக்கும், துரியோதனனுக்கும் தெரியவில்லை. நான்தான் பகவான் என்று சொன்னான் இல்லையா? அந்த கோபிகைகள் போல child like innocence இருந்தால்தான் புரிந்து கொள்ள முடியும். அதற்கு நிறைய அன்பு தேவைப்படும். ஆத்மாவிற்கு ஆத்மா அன்பு இருக்கும்போது நிறைய அனுபவங்களைப் பெற முடியும்.

அது வரை நான் என்ன சொல்கிறேன் என்றால், ஒரு physical bodyக்குள் இப்படிப்பட்ட சக்தி இருக்க முடியும் என்று புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், பேசாமல் கோயில், விக்ரகம், அபிஷேகம், அலங்காரம், கற்பூரம், ஆரத்தி என்று உங்களுக்கு புரியும் வகையில்தானே இருக்கிறது. அதுவே போதும். All that I want is நீ உருப்பட வேண்டும், அவ்வளவுதான்.

About The Author