பாபா பதில்கள் – காத்து, கருப்பு, பேய், பிசாசு உண்மையா?

காத்து, கருப்பு, பேய், பிசாசு என்றெல்லாம் சொல்கிறார்களே.. அதெல்லாம் உண்மையா?

                                                

நம் வீட்டிற்கு ஒரு வாட்ச்மேன் இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். நல்ல வாட்ச்மேனாக இருந்தால் எவ்வளவு பெரிய ரௌடியாக இருந்தாலும் எல்லோரையும் அடித்துத் துரத்திவிடுவான். கெட்டவனாக இருந்தால், அவன், "எங்கள் முதலாளி நாளை மதுரை போகப் போகிறார். என்னை சேரில் கட்டிப் போட்டுவிட்டு பீரோவில் உள்ளதை எடுத்துக் கொண்டு போ!" என்பான்.
 
அந்த மாதிரி, நாம் செய்த நல்லது கெட்டது இவற்றுக்கு ஏற்றமாதிரி சில கிரகங்கள் இருக்கிறது. அந்தந்த கிரகங்களுடைய ஆளுகை வருகிறது. நல்ல கிரகம் இருக்கிற போது யார் செய்வினை செய்தாலும் அது பலிக்காது. சோதனை கொடுப்பதற்கென்றே சில கிரகங்கள் (சனி, ராகு, கேது ) இருக்கின்றன. அந்த மாதிரி கிரகம் நம்மை ஆளுகிற போது யாராவது ஏதாவது செய்தால் பலித்துவிடும். இவ்வளவு தான் விஷயம். Example: watchman case.

கிரகம் சுபகிரகமாக இருந்தால் யார் என்ன செய்தாலும் பலிக்காது. இவனுக்கு ஞானத்தை கொடுப்பதற்காகப் புடம் போடவேண்டும் என்று சில ஞான காரக கிரகங்கள் இருக்கிறபோது தான் இவை எல்லாம் பலிக்கும்.

இரண்டாவது – எல்லோரையும் எல்லாம் செய்துவிட முடியாது. ஏதோ ஆயிரம் ரூபாய் செலவில் மந்திரவாதியை வைத்து அழித்துவிட முடியும் என்று சொன்னால், இந்த உலகத்தில் யாருமே தேர்தலில் போட்டியிட வேண்டாம். ஒரு மந்திரவாதியைப் பிடித்து, அவர்கள் தோற்றுப் போகிற மாதிரி அல்லது இறந்து விடுகிற மாதிரி செய்ய முடியும் என்றால் அதெல்லாம் உண்மை அல்ல.

"தீதும் நன்றும் பிறர் தர வாரா". நம்முடைய நல்வினை, தீவினை காரணமாக இரண்டையும் நாம்தான் தேடிக் கொள்கிறோம். யாரும் நமக்கு கொடுக்கவும் முடியாது; கெடுக்கவும் முடியாது.

About The Author