பாபா பதில்கள்-ஞான குரு

ஆன்மீகம் என்பது இரும்பை காந்தம் ஈர்க்கிற ரசவாதம். ஒரு இரும்பு காந்தத்தினால் கவரப்படுகிறபோது gradually அந்த இரும்பு கூட காந்தமாகி விடும். இரும்பு காந்தமாகாமல் இருக்கிறதுக்கு எது காரணமாக இருக்க முடியும் என்றால், அந்த இரும்பின் மேல் கொஞ்சம் சாணி, புல், அழுக்கு எல்லாம் இருக்கும். அப்போ ஒரு powerful magnet கூட, அழுக்குப் பிடித்திருக்கிற இரும்பை கவர முடியாது. இரும்பு தன்னை சுத்தமானதாக மாற்றிக் கொண்டால் ரசவாதம் நிகழும். It will get magnetised.

இந்த institutionக்கு எத்தனையோ பேர் வருகிறார்கள். அவங்க என்ன செய்யணும் என்றால் இரும்பாகவே இருந்துவிட வேண்டும். எல்லோரிடமுமே காந்தமாவதற்கான spark இருக்கிறது. நம் பள்ளியில் பயில்கிற குழந்தைகளுக்கு இந்த வாய்ப்பு அதிகம். ஏன் என்றால், every day when I go around the school or hostel அவங்களை நான் சார்ஜ் பண்ணிக் கொண்டே வருகிறேன். அது அவர்களுக்குக் கூடத் தெரியாது. அவங்க எல்லோரும் ரொம்ப வேகமாக divine ஆகிவிடுவார்கள். நான் சொல்வது ரொம்ப பெரிய விஷயம் and this can be done by a magnet only. ஒரு இரும்பு இன்னொரு இரும்பை காந்தமாக்க முடியாது. ஒரு இரும்பை காந்தம்தான் காந்தமாக்கும். I am a powerful magnet. I can magnetise any iron piece. அவங்கதான் பிடித்துக் கொண்டு மேலே வர வேண்டும்.

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின். ஒரு மலை போல் உயர்ந்து இருப்பவர்கள், சிறு தவறு செய்தாலும் தாழ்ந்துவிடுவர் என்கிறார் வள்ளுவர். ‘நான் பாபாவிடம் இருக்கிறேன். நான் பாபாவைவிட தெய்வீகமான ஆத்மாவாக மாறணும்’ என்று ஒரு உத்வேகம் இருந்தால் நிச்சயமாக ஆகிவிடுவார்கள். அவர்களை வைத்துக் கொண்டு இன்னும் கூட கடவுளுடைய பிரபாவம் பெருகி வரமுடியும்.

என்னிடம் வரும் ஒவ்வொருவரையும் ஒவ்வொருமாதிரி mould பண்ணுவேன். அதற்குக் காரணம் பாரபட்சம் அல்ல. அவங்க அவங்களுடைய பக்குவத்தைப் பொறுத்தது. ஒரு நிலத்தில் நெல் போடுகிறோம், மற்றொன்றில் கொள்ளு போடுகிறோம். அந்த மாதிரி அவங்க அவங்களுடைய பக்குவத்திற்கேற்ற விதைகளைத்தான் விதைக்கிறேன். நான் ஒரு ஆன்மீக விவசாயி என்கிற முறையில் பயிரிட முடியும். இதைச் செய்கிறபோது நீங்கள் நினைக்கிற methodologyயை followபண்ண மாட்டோம். அதாவது, நீங்க ஏதோ ஒரு ஸ்கூல் டீச்சர், ஒரு same system, syllabus same black boardன்னு நினைப்பீர்கள். ஆன்மீகம் என்பது practical training. On the field training. No class. No theory. If you really want a class you should not be confined to a class. இதைப் புரிந்து கொள்வதற்கு உங்களுக்கு ஒரு தகுதி வேண்டியிருக்கும். இப்போது நான் ஒரு குழந்தைக்கு ஜுஸ் கொடுத்தேன். இன்னொரு குழந்தைக்கு சாக்லேட் கொடுத்தேன். எல்லாருக்கும் ஜுஸ் கொடுக்க முடியாது. எல்லோருக்கும் சாக்லேட் கொடுக்க முடியாது. It depends. இதெல்லாம் field assessment.

ஒரு ஞானி என்பவன் 100% perfectionist. அவனிடம் குறையே இருக்காது. அவன் குறை ஒன்றுமே இல்லாத கோவிந்தன். கோவிந்தன் என்றால் சாமி என்கிற அர்த்தத்தில் மாத்திரம் எடுத்துக் கொள்ளக்கூடாது. விந்தன் என்றால் தலைவன். கோ என்றால் பசுமாடு. ஆநிரையை எப்படி மேய்க்கணும் என்று இடையனுக்குத் தெரியாதா என்ன? A Good Shepherd knows His Flock. நல்ல ஆட்டிடம் அவன் அதிக அக்கறை காட்டமாட்டான். குறையுள்ள ஆட்டை தோளில் சுமந்து கொண்டிருப்பான். ஆன்மீகத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய நிலை இதுதான். Don’t think you are at fault and that you are not wanted in the Kingdom of God.. உன்னிடம் குறை இருந்தால் உனக்கு அதிகமான கரிசனம் கிடைக்கும். The formula is not the same for all. அதில் ஒரு காரண காரியம் இருக்கும். அதை ஒரு சாதாரண சாதகனால் புரிந்து கொள்ள முடியாது. உனக்கே தெரிந்தால் உன் குருவிற்கு எவ்வளவு தெரியும். இதுதான் நான் சொல்கிற ஜென் பிலாசபி கதை.

ஜென் பிலாசபியில் வாயால் லெக்சர் கொடுப்பது ரொம்ப கம்மி. எல்லாம் observationதான். இங்கு உட்கார்ந்து கொண்டே அங்கு யார் என்ன செய்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்று the master’s eyes and ears should be everywhere.. ஒரே நேரத்தில் நூறு பேரை assesss பண்ணுகிற கெட்டிக்காரத்தனம் அவனிடம் இருக்க வேண்டும்.

ஒரு சிஷ்யன் அவனுடைய terms ல் ஞானம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறான். ஒரு உண்மையான ஞானி அப்படியெல்லாம் கொடுக்க மாட்டான். He will catch you unaware. உனக்குத் தெரியாமலேயே உன்னை அவன் ஆராய்ச்சி செய்துகொண்டே இருப்பான்.

நிறைய பேர் ஒரு உண்மையான ஞானியிடம் சிஷ்யனாகப் போக முடியாமல் போனதற்கு இதுதான் காரணம். நானும் 1984லிருந்து ஆன்மீகத்தில் இருக்கிறேன். 1988லிருந்து effective ஆக இருக்கிறேன். இன்று வரைக்கும் எனக்கு ஒரு நல்ல சிஷ்யன் கிடைக்கவேயில்லை. ஏன் என்றால் நான் ரொம்ப meticulousஆக பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் expect பண்ணுகிற qualities வரவில்லை. They are trying but they have not reached the level of excellence, because anything below 100% does not qualify ஒரு ஞானியிடம் சிஷ்யனாகணும் என்றால் இதுதான் கஷ்டம். ஞானி என்பவன் touchstone மாதிரி. அவன் உன்னை judge பண்ணிவிட்டான் என்றால் ஒரு செகண்டில் உனக்கு அருள் கொடுத்துவிடுவான்; pre-qualification test என்று உண்டு. அதில் நீ பாஸ் செய்தால்தான் அவன் அந்த touchstoneஐ உன்மேல் பிரயோகிப்பான். அதற்குப் பிறகு நீ ஒன்றுமே செய்யத் தேவையில்லை.
ஜபாலி என்கிற ராஜா ஒரு குருவிடம் போனான். ‘எனக்கு உபதேசம் கொடுங்க’ன்னு சொன்னான். ‘உனக்கு என்ன உபதேசம் கொடுப்பது. அங்கு ஒரு எருது இருக்கிறது. ஒரு பசுமாடு இருக்கிறது. இந்த இரண்டையும் காட்டிற்குள் கொண்டு போய் மேய்த்துக் கொண்டிரு. அது ஆயிரம் பசுக்களாகும் போது அன்றைக்கு என்னைப் பார்ப்பதற்கு வா’ன்னு சொன்னார். இவன், ‘நான் பெரிய ராஜாவாயிற்றே. ராஜ்யத்தை விட்டு எப்படி போவது? என்னைப்போய் பசுமாடு மேய்க்கச் சொல்கிறாரே, வேறு குருவை பார்த்துக் கொள்ளலாம்’ என்றெல்லாம் நினைக்கவேயில்லை. அந்த எருதையும், பசுமாட்டையும் கூட்டிக் கொண்டு காட்டிற்குப் போனான். பன்னிரெண்டு வருஷம் ஒன்றும் பேசவில்லை. காலையிலிருந்து சாயந்திரம் வரைக்கும் மாடு மேய்ப்பதுதான் அவன் வேலை. ஆயிரம் பசுமாடுகள் ஆனவுடன் நேராக குருவிடம் வரும் வழியில் இந்திரன் முதலாகிய அத்தனை தேவர்களும் வந்து அவனை கும்பிட்டார்கள். ‘உன் குரு உனக்கு எல்லா ஞானத்தையும் கொடுக்கச் சொல்லிவிட்டார். எங்களுடைய சங்கல்ப மாத்திரத்தில் உனக்கு எல்லா ஞானமும் வந்துவிட்டது’ன்னு சொன்னாங்களாம். குரு ஒன்றும் செய்யவேயில்லை. He ordered, அவர்கள் கொடுத்துவிட்டார்கள் அவ்வளவுதான்.

உன் குரு உன்னை எப்படி டெஸ்ட் பண்ணுவான் என்று உனக்குத் தெரியாது. ஸ்கூலில் பேப்பர் எழுதும் பரீட்சை போல் அல்ல இது. ஞானத்திற்கு என்ன பரீட்சை வைக்க முடியும்? கேள்வி கேட்கிற விஷயமா அது? வாசித்துக் காணொணாதது. அதை புரிந்து கொள்ள முடியாது. Experienceதான் guide பண்ண முடியும். ஒரு ஞானகுரு என்பவன் யானை விளாம்பழம் சாப்பிட்ட மாதிரி. எல்லாம் சக்கையாகச் சாப்பிடப்பட்டு விட்டு வெறும் shell தான் வெளியே விழும். சாதாரண குரு உலகத்தில் புத்தகம் படித்துவிட்டு உளறிக் கொண்டிருப்பவன். ஆடு, புல் மேய்கிற மாதிரி இங்கு கொஞ்சம், அங்கு கொஞ்சம் மேய்ந்து விட்டு விட்டுவிடுவான்.

ஒரு ஞான குரு என்பவன் ஒரு சின்ன குறை கூட இல்லாத மாதிரி உன்னை மாற்றிக் காட்டுவான். ஆனால், அதற்கு உனக்கு வைராக்கியம் வேண்டும். அந்த வைராக்கியத்திற்கு பெயர் ஞான வைராக்கியம். இதைத் தவிர இந்த உலகத்தில் வேறு எதுவுமே வேண்டாம் என்ற பக்குவத்தில் இருக்கணும். அப்படி இருந்தால் நிச்சயமாக ஒரு உண்மையான ஞானியினால் உனக்கு ஞானத்தை கொடுக்க முடியும்.

About The Author