பாபா பதில்கள்-நம்பினார் கெடுவதில்லை

நம்பினார் கெடுவதில்லை

நீ எந்த ஒரு கோவிலுக்கு போனாலும், ஒரு ரிஷி அல்லது சித்த புருஷனிடம் போனாலும், "நான் இந்த மகானை பார்க்கப் போகிறேன், எனக்கு நல்லது நடக்கப் போகிறது", என்கிற focus முதலில் உன்னிடம் வர வேண்டும். அந்த எண்ணம் உன்னிடம் இருந்து வந்தால் நீ நினைத்தது எல்லாம் நடக்கும்.

Concentration இல்லாத, Commitment இல்லாத, Dedication இல்லாத எந்த thoughtக்கும் result வருவதில்லை. Long jump குதிக்க வேண்டும் என்றால் ஓடி வந்து குதித்து விட வேண்டும். அப்பொழுது தான் இருபது அடி குதிப்பாய். அதே ஓடி வரும் போது யோசனை பண்ணி விட்டாய் என்றால் இரண்டு அடி தான் குதிப்பாய்.

யோசனையே பண்ணக்கூடாது. முதலில் துணிந்து விட வேண்டும். தேறான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறலும் தீரா இடும்பை தரும்.

உதாரணத்திற்கு யாருக்கோ உடம்பு சரி இல்லை என்று வைத்துக் கொள். அவர், "நான் பாபாவிடம் போகிறேன், அவர் எனக்கு நல்லது பண்ணுகிற வரை இந்த இடத்தை விட்டு போக மாட்டேன்", என்று வர வேண்டும். அப்பொழுது அவருக்கு நன்றாக ஆகி விடும். ஏதோ ஒரு டாக்டரிடம் போகிற மாதிரி போய் தான் பார்க்கலாம் என்று வந்தால் நடக்காது. இதற்குப் பெயர் தான் ஆன்மீகம்.

வெள்ளத்து அனையது மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு. எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர் திண்ணியர் ஆகப் பெறின். உனக்கு மட்டும் concentrated thoughts- ஒரு ஏகாக்ரமான சிந்தனை இருந்தால் நீ என்ன நினைத்தாலும் அது கட்டாயம் நடக்கும்.

நீ ஒரு மகானை நம்பி இருக்கிறாய் என்றால், அவன் உன்னுடைய தகுதிக்கு அல்ல, அவனுடைய தகுதிக்கு உனக்கு படியளந்து விடுவான். அதைத் தான் இன்றைக்கு சிவசங்கர் பாபா செய்து கொண்டிருக்கிறார்.

இன்றைய கலியுகத்து மக்கள் இதற்கு முன்பு இருந்தவர்களை விட ஆன்மீக தேட்டமும் ஆன்மீக நாட்டமும் குறைந்தவர்களாக இருக்கிறார்கள். இந்த நிலையில் நாம் பேசும் மிக உயர்ந்த தத்துவங்கள் மக்களை சென்று அடைவது கடினமாக இருக்கிறது.

என்னிடம் யாராவது வந்து தன்னுடைய problems பற்றி சொல்கிற பொழுது, நான் அவர்களுடைய மனதை புண்படுத்தக் கூடாது என்று முகத்தை seriousஆக ஆக வைத்துக் கொண்டு கேட்பேன். ஆனால் உள்ளுக்குள்ளே சிரித்துக் கொண்டிருப்பேன். ஏன் என்றால் I can get into your shoes and I know where you are going wrong.

About The Author