பாபா பதில்கள் – வலிமையான இந்தியாவிற்கு வழி கோலுங்கள்!

வாருங்கள்! வலிமையான இந்தியாவிற்கு வழி கோலுங்கள்!

மனிதனும் மாலவனும்

மனிதனுடைய அறிவு என்பது இரண்டு வேறுபட்ட அனுபவங்களுக்கு இடையில் ஏதோ ஒரு நல்லதை மாத்திரம் தேர்ந்தெடுக்கிற பக்குவத்தில் இருக்கு அல்லது அந்த பாவனையில் இருக்கிறது..

அவன் சொர்க்கத்தை வைச்சுக்கிட்டு நரகத்தை விட்டுடணும் என்று நினைக்கிறான்.

‘எப்போதும் சமாதானமா, சாந்தியோடு இருக்கணும். எனக்கு டென்ஷனே வாழ்க்கையில் வரக்கூடாது’ அப்படின்னு நினைக்கிறான்.

நல்லதை மாத்திரம் வைச்சுக்கிட்டு கெட்டதெல்லாம் குப்பைக் கூடையில் தூக்கிப் போட்டுடணும்னு நினைக்கிறான்.

தன் வாழ்க்கையில் எப்பவும் வெளிச்சம் மாத்திரம் இருக்கணும். சின்ன இருட்டுக்கூட இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறான்.

எப்போதும் சந்தோஷத்தில் இருக்கணும். துக்கம் என்பது வாழ்க்கையில் வரக்கூடாது என்கிற பாவனையில் இருக்கிறான்.

இந்த மாதிரி யார் இதுதான் வேணும், இன்னொன்று வேண்டாமென்று சொல்றானோ, அவன் முழுமனிதன் அல்ல.

உனக்கு ஐஸ்க்ரீம் பிடிக்குது, ஐஸ்க்ரீம் சாப்பிட்டே. சாப்பிடும்போது நல்லாயிருந்தது. 10 நிமிஷம் கழிச்சு தொண்டையில ஜாஸ்தி தாகம் வந்திடுச்சு. So, you will understand நீ எந்த ஒரு ஐஸ்கீரீம் அனுபவத்தை தேடினாயோ அது temporary தான். 10 நிமிஷம்தான். அதற்குப் பிறகு இன்னும் ஜாஸ்தி தாகம் ஆயிடும். ஒரு ஏசி ரூமில் இருக்கே, ஏசி பங்களாவில் இருக்கே, ஏசி காரில் இருக்கே அது temporaryதான். அந்த ஏசியிலிருந்து வெளியே வந்தவுடனே வெயில் சாதாரண மனுஷனை விட உன்னை இன்னும் தகிக்கும். அவங்களுக்கு பழகிடுச்சு. உனக்கு பழகலை. அதனால உனக்கு இன்னும் டபுளா இந்த சூரியனோட தகிப்பிருக்கும். அதனால, யார் ‘எனக்கு இது மாத்திரம்தான் வேணும், அது வேணாம்னு சொல்றாங்களோ, அவங்க இன்னும் பெரிய வம்பிலே போய் மாட்டிக்குவாங்க. So, never choose. One who chooses will always be incomplete, less than the whole. He can never be rid of what he rejects.


Krishna symbolises acceptance of the opposites together.

And he alone can be whole who accepts the contradictions together.

கிருஷ்ணர் அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறார். வெளிச்சத்தையும் இருட்டையும் ஒன்றாக அங்கீகரிக்கணும், நல்லதையும் கெட்டதையும் ஒன்றாக அங்கீகரிக்கணும், சமாதானத்தையும் சச்சரவுகளையும் ஒன்றாக அங்கீகரிக்கணும், சொர்க்கத்தையும் நரகத்தையும் ஒன்றாக அங்கீகரிக்கணும், சந்தோஷத்தையும் துக்கத்தையும் ஒன்றாக அங்கீகரிக்கணும். அப்போதுதான் நீ கிருஷ்ணர்.

பசு மாடு இருக்கு. ‘பசுமாட்டில் எனக்கு பால்தான் வேணும். ஏன்னா, அதிலிருந்து நான் பால், தயிர், வெண்ணெய், நெய் எடுத்துக்கிறேன்’ அப்படின்னு சொன்னா உனக்கு ஒன்றும் புரியலைன்னு அர்த்தம். பசுமாட்டோட கோமியத்தையும் எடுத்துக்க தயாராக இருக்கணும். அதனுடைய சாணத்தையும் எடுத்துக்க தயாரா இருக்கணும். அந்த நேரத்தில உனக்கு பால்தான் நல்ல விஷயமா தோணும். சாணமும், கோமியமும் வேண்டாமென்று தோன்றும். ஆனால் அதுவும் நல்லதுதான். அந்த சாணியில் நீ பிள்ளையார் பிடிச்சு பூஜையில் வைக்கலாம். கோமியத்தை கொண்டு வந்து ஐயரிடம் கொடுத்தால் அவர், உன் வீடெல்லாம் தெளிச்சு, மந்திரம் சொல்லி, உன் வீட்டுக்கு எந்த கிருமியும் வராமல் பண்ணிட்டு போவார். அந்த நேரத்துக்கு உனக்கு பசும்பால் மேலேயிருக்கிற கிக் சாணி மேலேயும், கோமியத்து மேலேயும் இல்லை. கொசுவர்த்தி சுருள் எல்லாம் இதிலதான் பண்றாங்க. இந்த காலத்தில் டெட்டால், வாசனை திரவியங்கள் எல்லாம் போடறீங்க. அந்த காலத்தில் சாணத்தையும், கோமியத்தையும்தான் பயன்படுத்தினாங்க. பசுமாடு புல், அருகம்புல் எல்லாம் சாப்பிட்டு வளருவதால் அதனிடம் அந்த குணம் இருக்கிறது. பூஜைப் பொருட்களில் பஞ்சகவ்யத்தில் கோமியமும் ஒரு பொருள். Everything is good in this world. உங்களுக்கு புரியாததால் நீங்க பாலிருந்தா போதும் எல்லாம் கிடைக்கும் என்று நினைச்சுக்கிட்டு இருக்கீங்க. The other thing is also equally important.

About The Author

1 Comment

Comments are closed.