பாபா பதில்கள்

Q. ஆழ்வார்களும் நாயன்மார்களும் கடவுளைத் தேடி கர்மயோகத்தில் ஈடுபட்டு கடவுளை அடைந்தார்கள். ஆனால் நம்மைப் பொறுத்த வரை கடவுள் பக்தர்களை தேடிக் கொண்டிருக்கிறார். இதுவரை பக்தனே கிடைக்கவில்லை என்று கூறுகிறார். அவர் எதிர்பார்ப்பது கர்ம யோகமா அல்லது வேறு என்ன யோகம் எதிர்பார்க்கிறார்.

உங்களில் பத்து சதவிகித மக்கள் ஏற்கனவே கர்மயோகத்தில் தான் இருக்கிறீர்கள். கடவுளுக்கான கைங்கர்யத்தில் ஏதோ ஒரு விதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். கோயில் பெருக்குவது, அப்பர் செய்த உழவாரப்பணியைப் போன்று சில பேர் @தாட்ட வேலையில் இருக்கிறீர்கள்; சில பேர் பள்ளியில் வேலை செய்கிறீர்கள். சில பேர் ப்ரவீணா மருத்துமனையில் வேலை செய்கிறீர்கள்; கொஞ்சம் பேர் காலை கோயில் சுத்தம் செய்கிறீர்கள்; யாகம் வளர்க்கிறீர்கள்; கொஞ்சம் பேர் கோயில் பூஜை செய்கிறீர்கள். இது எல்லாமே பந்ததிதான். ஏற்கனவே நம்முடைய ஆழ்வார்களும், நாயன்மார்களும் செய்த வேலைகளின் தொடர்தான் இவையெல்லாம். ஞானசம்பந்தர் என்ன செய்தார்? பாடினார் அப்படி நம் கோயிலிலும் பாடுகிறார்கள். அப்படி இவையெல்லாம் தான் – அது ஒரே வழிதான் உங்கள் கர்மாவை போக்கிக்கொள்வதற்கான வழி. அந்த வார்த்தையே மிக அற்புதமான வார்த்தை.

கர்மயோகம் என்றால் கர்மாவை கழிப்பதற்காக செய்த யோகம் என்று வைத்துக் கொள்ளலாம். பெருமாளுக்கு செய்வதாக நீங்கள் நினைக்கவே வேண்டாம். உங்கள் கர்மா கழிப்பதற்காக நீங்கள் செய்கிற யோகம். யோகம் என்றால் தவம். அதிலும் நீங்கள் தான் பலனடைகிறீர்கள். கடவுளுக்கு என்ன இருக்கிறது? உலகம் பூராவும் அவருடையதுதான். நான்கு செங்கல் சுண்ணாம்பு வைத்து கட்டினால் தான் அவருக்கா என்ன? உலகத்தில் உள்ள எல்லா செடி, கொடி, பூ எல்லாமே கடவுளுடையது தான். கடவுள், நாம் அவரை போற்ற வேண்டும், அவரை மகிழ்விக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கவில்லை. நாம் இதெல்லாம் செய்கிற போது ஆத்ம சக்தி கிடைக்கிறது; சரீர சுத்தி கிடைக்கிறது. சும்மா ஏதோபொழுதைப் போக்காமல் நன்றாக வேலை செய்து விட்டு போய் தூங்கிடலாம். இல்லைன்னா படுத்துக் கொண்டு தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்கவேண்டியதுதான். ஏதோ ஒரு வகையில் உங்கள் சரீரத்தை நீங்கள் களைப்பாக ஆக்க வேண்டும். அது உங்களுக்கே நல்லது.

Mind is always tensed to think in a particular way. டி.வி பார்த்துக் கொண்டிருந்தால் அதையே வைத்து செக்கு மாடு மாதிரி மனது ஓடிக் கொண்டிருக்கும். அதற்குப்பதில் கோயிலுக்கு வந்து நான்கு பாட்டு கேட்டு அமைதியான இடத்தில் உட்கார்ந்திருந்தால் கடவுளின் ஒரு சிந்தனைக்கு தானாக வந்துவிடும். கர்மயோகம் எல்லாம் சரிதான். அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் நீங்கள் செய்கிறீர்கள்.

About The Author