பாபா பதில்கள்

கிரகங்கள் எல்லாம் சில சமயம் சில பேருக்கு மோசமாக இருக்கிறது என்றும், அதற்கு ஜோசியம் எல்லாம் சொல்கிறார்கள். அது எல்லாம் கரெக்டா?

அது எல்லாம் கரெக்ட் தான். நம்ம உடம்பிலே 9 ஓட்டை இருக்கிறது. இரண்டு கண், இரண்டு காது, இரண்டு மூக்கு, வாய் என்கிற மாதிரி, We have nine துவாரங்கள். நாம் குழந்தையாக இந்த உலகத்திலே பிறக்கும் போதே, இந்த ஒன்பது துவாரங்கள் வழியாக ஒன்பது கிரகங்களுடன் ஒரு contact வந்து விடுகிறது. It is like connecting. So ஒன்பது ஓட்டையையும் ஒன்பது wire வைத்து connect பண்ணிவிட்டால் எப்படி இருக்கும்? அந்த மாதிரி தான் அது. There are nine planets. They operate you through the nine connections in your physical system.. அதற்கு ஏற்ற மாதிரி நம்முடைய thinking philosophyல, நம்முடைய வாழ்க்கையிலே நடக்கக் கூடிய விஷயங்கள் அமைந்து கொண்டே இருக்கும். ஒரு computerலே program என்கிற மாதிரி, ஒவ்வொரு spirit க்கும் ஒவ்வொரு programme இருக்கிறது. And those programmes are decided by the planets. அதனாலேதான் உலகத்திலே எல்லோருடைய வாழ்க்கையும் ஒரே மாதிரி இருக்காது.

Saturn phase நடக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் . அப்போது உடம்பு சரி இல்லாமல் இருக்கும். பாத்ரூமிலே வழுக்கி விழுந்து விடுவார்கள். இந்த மாதிரி எல்லாம் ஆகும். Planets co-operate பண்ணாது. அது எல்லாம் தான் காரணங்கள். The child may be a very good student. Why even bright students suffer? அந்த time. சில நேரங்களில் ரொம்ப நன்றாக shine பண்ணுவார்கள். சில நேரத்திலே, அதே ஆள் தான், அதே மூளை தான். ஆனால் shine பண்ண முடியாது. This is because of the planets. சில பேருக்கு accident ஆகும். சில பேருக்கு surgery ஆகும். சில பேருக்கு கோர்ட், கேஸ் என்று வரும். சில பேருக்கு வயிற்று வலி வரும். சில பேருக்கு கண் வியாதி வரும். ஒவ்வொன்றுக்கும் காரணம் இருக்கிறது. அந்த ஒன்பது கிரகங்களுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குணம் இருக்கிறது.

கேது என்று ஒரு கிரகம் இருக்கிறது அதன் influence இருந்தால், அவர்களுக்கு உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரும். கண், வயிறு, court, case, litigation என்று எல்லாம் வரும்.

இராகு என்று வைத்துக் கொள். கணவன் மனைவி எவ்வளவு தான் நல்லவர்களாக இருந்தாலும் அவர்கள் அடித்துக் கொள்வார்கள். அவர்கள் நல்லவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அதை மீறி அவர்களுக்குள்ளே ஏதாவது மனஸ்தாபம் இருந்து கொண்டே இருக்கும். அது இராகுவினுடைய குணம். அந்த மாதிரி நிறைய பணம் வந்தா மாதிரி இருக்கும். ஆனால் திடீர் என்று எல்லாம் போய் விடும். Court, case, litigation என்று எல்லாம் வரும். இப்படி இருந்தால், இராகுவினுடைய phase நடக்கிறது என்று அர்த்தம்.

சில பேருக்கு கல்யாணம் ஆகாமல் இருக்கும். அதற்கு ஒரு காரணம் செவ்வாய். அது சரியாக இருக்காது. செவ்வாய் 7வது இடத்திலே இருந்தால், கல்யாணம் லேட்டாக ஆகும். இல்லை, ஆகாமலும் போகலாம். 7லே கேது இருந்தால், கல்யாணம் ஆனாலும் டைவர்ஸ் ஆகிவிடும்.

So planets decide. முந்தா நாள் கூட என்னுடைய speechலே சொன்னேன். காஞ்சி பரமாச்சாரியார், அந்த மாதிரி மகான்களுக்கு கூட planets வேலை செய்கிறது. அவருடைய ஜீவன ஸ்தானமான 10வது வீட்டிலே சூரியன், புதன், குரு என்று மூன்று planets இருந்தன. யார் ஜாதகத்திலே சூரியனும் புதனும் ஒன்றாக ஜீவன ஸ்தானத்திலே இருக்கிறதோ, அவர்கள் ஒரு powerful person ஆக இருப்பார்கள். May be, some CEO type of a post or IAS என்று அந்த மாதிரி இருப்பார்கள். ஒரு bureaucratic top postலே இருப்பார்கள். அப்போது அவருக்கு என்ன post கிடைத்தது He headed a big Institution என்றால் மடாதிபதி. This is because Guru is also present in that house.. பத்தாவது வீட்டிலேயே குருவும் சூரியன் புதனுடன் இருக்கிறார். அதனாலே மடாதிபதியாக இருந்தாலும் கூட தர்ம காரியங்கள் செய்வதற்கான யோக்கியதைகள் கிடைக்கிறது. This is because Guru is also present in that house. அவருடைய வாக்கு ஸ்தானத்திலே Saturn and Ketu இருக்கின்றன. இரண்டுமே ஞானத்திற்கான கிரகங்கள். அதனாலே அவருக்கு நல்ல ஞானம். நாலாவது இடத்திலே பூர்வ புண்ணியாதிபதியாக சந்திரன் இருக்கிறார்.

So, ஒரு பாரம்பரியமான குடும்பத்திலே வந்து, ஒரு தெய்வீகமான வாழ்க்கை. அவருக்கு ஏழாவது வீட்டிலே செவ்வாய். அதனாலே கல்யாணம் ஆகவில்லை. அதாவது எல்லாம் கரெக்ட் என்பதற்காக சொல்கிறேன். எல்லோருடைய planetary positionக்கும் ஒரு காரிய காரணங்கள் இருக்கும்.

இப்போது நான் நன்றாக இருக்கிறேன் என்று சொன்னால், அதற்கு என்னுடைய கிரகங்கள் தான் காரணம். எனக்கு பத்தாவது இடத்திலே குரு, சுக்கிரன். என்னுடைய ஜீவன ஸ்தானத்திலே இரண்டு குருவும் உட்கார்ந்து இருக்கிறதினாலே, நான் எப்போதுமே நல்லது தான் செய்வேன். My whole life will be for performing certain Philanthropic activities and Spiritual activities. ஒருவர் தேவ குரு. இன்னொருவர் அசுர குரு. அதனாலே என்னிடம் நல்லவர்களும் வருவார்கள். கெட்டவர்களும் வருவார்கள். அதனாலே தான் எல்லோரும் வருகிறார்கள். My whole life will be dedicated for God’s work. எனக்கு என்று ஒரு personal life இருக்காது. ஏன் என்றால், இரண்டு குருவும் போட்டி போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். because they know I have come to perform.

என்னைப் பற்றி ஓலையிலே வரும் போது, "தர்ம காரியத்திற்கான லோக ப்ரவேசம். ஜென்ம ஜென்ம சந்நியாசி சமான யோகம்" என்று வரும். இந்த உலகத்திலே நான் பிறந்ததே தர்மத்தை நிலைநாட்டுவதற்காகத் தான், தர்ம காரியங்களை செய்வதற்காகத் தான் என்று வரும். எத்தனையோ ஜென்மங்களாக நீ சந்நியாசி. அதே மாதிரி இந்த ஜென்மத்திலேயும் ஒரு சந்நியாச வாழ்க்கை. அதனாலே தான் எனக்கு குடும்பம் எல்லாம் இருக்காது. சந்நியாசிகளை போன்ற ஒரு வாழ்க்கை என்னுடையது. எனக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்திலே சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் என்று நாலு கிரகங்கள் இருக்கும். அப்போது Rulers of Sunday, Monday, Tuesday and Wednesday என்று வரிசையாக வருகிறது பாரு. அதற்கு கீழே Rulers of Thursday and Friday. இந்த மாதிரி ஒரு ஜாதகம் அமைவது ரொம்ப கஷ்டம். அதாவது இரண்டே வீட்டிலே எல்லா நல்ல கிரகங்களும் அப்படியே பூமாலை கட்டிய மாதிரி வந்து விடும். ரொம்ப rare ஆன ஜாதகம். எனக்கு 6வது வீட்டிலே Saturn. அதனாலே எவ்வளவு எதிரிகள் இருந்தாலும் அழிந்து விடுவார்கள். வாலி எதிரிலே யாராவது வந்தால், அவர்களுடைய சக்தியிலே பாதி வாலிக்கு போய் விடும் என்று சொல்வார்கள். என்னை யார் எதிர்த்தாலும் அவர்கள் அழிந்து விடுவார்கள். அவர்கள் எனக்கு கெட்டது செய்தால், அதிலே எனக்கு நல்லது நடந்து விடும். அது ஒரு ஜாதகம்.

ஆதி சங்கராச்சாரியாருக்கு அந்த மாதிரி இருந்தது. 6வது வீட்டிலே powerful Saturn. அப்போது யாராலேயும் நம்மை ஒன்றும் பண்ண முடியாது. ஒரு மூலையிலே கொசு மாதிரி எதிரிகள் இருந்து கொண்டே இருப்பார்கள். நிறைய பேர் நமக்கு தொந்திரவு கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.

ஆனால் அவர்களாலே நம்மை ஒன்றும் பண்ண முடியாது. அவன் எனக்கு கெட்டது பண்ணினாலும், அது எனக்கு நல்லது ஆகி விடும். அந்த மாதிரி இருக்கும். எனக்கு மேஷத்திலே இராகு. மேஷத்திலே இராகு இருந்தால், நான் என்ன சொன்னாலும் பலிக்கும்.

நாம் சும்மா சாதாரணமாக சொன்னால் கூட, அது பலிக்கும். So, Planets எல்லாம் கரெக்ட் தான்.

About The Author