பாபா பதில்கள்

பயம்…………Confront your fears, list them, get to know them and only then will you be able to put them aside and move ahead

திரு. சிவ சங்கர் பாபா அவர்களின் உரையிலிருந்து,

 
 
 

 
அதாவது நம்முடைய மனதின் அடித்தளத்தில் புதைந்திருக்கக்கூடிய அச்ச உணர்வுகள்தான் நம்மை செயலாற்ற விடாமல் தடுக்கிறது. The insecure feelings come out of fear and the reason for insecure feeling is fear and it is the greatest impediment for performance.

அஞ்சி அஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே. எல்லாவற்றையும் பார்த்துப் பயப்படறாங்க. இவங்க எதைப் பார்த்துத்தான் பயப்படலை. இன்னொரு இடத்தில் திருவள்ளுவர் சொல்கிறார். அஞ்சுவ தஞ்சாமை பேதமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். பாரதி சொல்கிறார். அச்சம் தவிர் ஆண்மை தவறேல். பாரதியார் என்ன சொன்னார். உச்சிமீது வானிடிந்து வீழ்கினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே என்று. ஆகாசத்திலிருந்து இடி விழுந்தால் கூட எதைப் பார்த்தும் பயப்படக்கூடாது என்று சொல்கிறார். பாரதி அழகாக சொன்ன மணிவாசகங்கள் இன்னும் நான்கு இருக்கின்றன- எதற்கும் அஞ்சேன், யார்க்கும் அஞ்சேன், எங்கும் அஞ்சேன், எப்போதும் அஞ்சேன். Nothing I fear, neither with anyone not at any place, not at anytime. இந்த நான்கையும் நாம் மணிவாசங்களாக கொள்ள வேண்டும். அச்சம்தான் மனிதனுடைய செயலாற்றமின்மைக்கு அடித்தளம். ஒவ்வொன்றையும் அதுதான் உண்டாக்குகிறது. அச்சத்தினால்தான் inferiority complex வரும். அதனால், get rid of the insecure feeling which is the greatest impediment for performance.”

About The Author