பாபா பதில்கள்

தவறுகள்….. Our mistakes become our crucial parts, sometimes our best parts, of the lives we have made.

திரு. சிவ சங்கர் பாபா அவர்களின் உரையிலிருந்து,

 
 
 

தவறுகள் என்று எதுவும் இல்லை. எல்லாம் அனுபவங்கள்தான். இந்த உலகத்தில் தவறு செய்யாதவன் என்று யாருமே இருக்க முடியாது. எல்லாரும் ஏதோ ஒரு வகையில் விழுந்து புரண்டு எழுந்துதான் வந்திருப்பார்கள். நான் அடிக்கடி சொல்கிற உதாரணம்தான்.

ஒருதாய் ஒரு குழந்தையிடம் விளக்கில் கை வைக்காதேன்னு சொல்றாள். இன்னும் சொல்லப் போனால் அந்த விளக்கிருக்கிற இடத்திலிருந்து, அந்த நெருப்பிருக்கிற இடத்திலிருந்து அடி கொடுத்து இழுத்துக்கிட்டு போறாள். ஆனாலும், அந்த குழந்தை என்றைக்காவது விளக்கிலோ, நெருப்பிலோ கை சுட்டுக்கிட்டு, அந்த அனுபவம் அடைந்த பிறகு கையை நெருப்பில் வைக்காது. நீங்க எல்லாரும் கூட ஏதோ ஒரு நேரத்தில் அம்மா பேச்சு கேட்காமல் கையை சுட்டுக்கிட்டீங்க. அதனால் இப்போ யாராவது இழுத்துக்கிட்டுப் போய் உங்க கையை நெருப்பில் வைச்சால் ஐயோ வேண்டாம்னு ஓடிடுவீங்க. ஏன்னா, உங்களுக்கு கையைச் சுட்டுக்கிட்ட அனுபவம் இருக்கு. அனுபவங்கள்தான் ஒரு மனிதனை வாழ்க்கையில் செம்மையாக்கும். அனுபவம் புத்தகத்திலிருந்து வராது. யார் சொல்லியும் வராது. அனுபவித்து வரும். You will undergo the same experience. That is called gnanam. பட்டறிவு – பட்டு அறிகிற அறிவு எதுவோ, அதுதான் பட்டறிவு. அதுதான் experience. It is never taught. And anything taught is never followed by anyone.

About The Author