Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map
contest | egreetings | Downloads | Business directory | games | free ads | events | work smart | Picture Gallery
magazine,news Pictures Tamil magazine

Updated Every Monday

 
Subscribe for weekly newsletter
India news India cinema Recipes & Health Tamilnadu tamil poems & stories Tamil movie

தமிழ்ச் சுவை

கதை
கவிதை
தொடர்
உள்முகம்
கைமணம்
கைமருந்து
சுவடுகள்
ஸ்பெஷல்ஸ்
பூஞ்சிட்டு
மாணவர் சோலை
தமிழாய்வு
நேர்காணல்
தமிழ் வளர்க்கும் அறிஞர்கள்
ஆன்மீகம்
சாதனையாளர்கள்
கடவுள் எழுதிய கதைககள்

Help

news படைப்புகளை அனுப்ப
news Tamil Font
news Like to contribute?
news Volunteer
news Nilacharal as your homepage

முன்னெச்சரிக்கை முகுந்தன்
வை.கோபாலகிருஷ்ண‎ன்

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

சாரல் 294

08 ஜனவரி 2007

Astrology paid service
BHARATANATYAM YOGA DEVOTIONAL TELEFILMS

 

'ஐம்பது வயதைத் தாண்டிய முகுந்தனுக்குச் சற்றுபெருத்த சரீரம். நடந்தாலே பெருமூச்சு வாங்கும். சுகர், பிரஷருடன் சமீபகாலமாகச் சற்று ஞாபகமறதியும் சேர்ந்து கொண்டுள்ளது. எப்போதுமே எதிலும் ஒரு விதப்படபடப்பு. எதையாவது மறந்து விட்டு விடுவோமோ என்று முன்னெச்சரிக்கையாகவே இருப்பார்.

ஆபீஸ¤க்குப் புறப்படும் முன் தனது அலுவலகஅடையாள அட்டை, வீட்டு விலாசம், தொலைபேசிஎண்களுடன் கூடிய விசிடிங் கார்டு, பஸ் சார்ஜுக்குவேண்டிய சில்லறைகளுடன் கூடிய மணிப்பர்ஸ், அதில் ஒரு தனி அறையில் ரிஸர்வ் கேஷாக ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு, மூக்குக் கண்ணாடி, அதற்கான கூடு, மூன்று வேளைக்கான மருந்து, மாத்திரைகள், டிபன் பாக்ஸ், வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, பல் குத்த குச்சி, காது குடையும் பஞ்சுக்குச்சி, கைக்கடிகாரம், பேனா, ஆபீஸ் •பைல்கள், செல்போன், ஆபீஸ் டிராயர் சாவி, குடை, பஸ்ஸில் படித்துக் கொண்டே போக ஏதாவது வாரஇதழ்கள், செய்தித்தாள், பேண்ட், பெல்ட்டு, பனியன், ஜட்டி, ஷர்ட், கர்சீப், ஆபீஸ் முடிந்து திரும்புகையில் காய்கறி ஏதாவது கண்ணில் பட்டால் வாங்கிவர ஒரு துணிப்பை, இடுப்பிலிருந்து அடிக்கடி நழுவிப்போகும் அரணாக்கயிறு, வேஷ்டி, துண்டு, செருப்பு என்று சகல சாமான்களையும் லிஸ்டு போட்டு வீட்டினுள் ஒரு பெரிய கரும்பலகையில் எழுதி, கண்ணில் படும்படியாகத் தொங்க விட்டிருப்பார். ஏழு மணிக்குப் பஸ் பிடிக்க ஆறரை மணிக்கே ரெடியாகி லிஸ்டில் உள்ளபடி எல்லாச் சாமான்களையும் ஒரு முறை சரி பார்த்துக் கொள்வார், பேண்ட், ஷர்ட், ஜட்டி, பனியன் அணிந்து கொண்டுள்ளோமா, என்பது உட்பட.ஆபீஸில் அவருக்கு முன்னெச்சரிக்கை முகுந்தன் என்று ஒரு பட்டப் பெயரே கொடுத்திருந்தனர்.

பேண்ட்-ஷர்ட் போட்டு ஆபீஸ் போகும் இவருக்கு,வேஷ்டி-துண்டு எதற்கு என்று நீங்கள் யோசிப்பதும்நியாயமே. அது ஒரு பெரிய கதை. ஓடும் பஸ்ஸில்அவசரமாக ஏறிய அவருக்கு அன்றொரு நாள் போதாத காலம். இவர் போட்டிருந்த டைட் பேண்ட், ஜிப்பு முதல் கணுக்கால் வரை, டாராகக் கிழிந்து (தையல் பிரிந்து)தொடை தெரிய பயணித்ததில் மனிதன் கூசிக் குறுகிப் போய் விட்டார். அன்று முதல் இன்று வரை, வேஷ்டியும் துண்டும் இவர் போகுமிடமெல்லாம் தொற்றிக்கொண்டன.

திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே தான் அவர்வசிக்கும் அடுக்குமாடி வீடு.அன்று சனிக்கிழமை அரை நாள் மட்டுமே ஆபீஸ¤க்குத் தலையைக் காட்டிவிட்டுச் சீக்கரமாகவே வீடு திரும்பி விட்டார் முகுந்தன். மறுநாள் காலை ஆறரை மணிக்கு திருச்சி ஜங்ஷனில் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலைப்பிடித்து சென்னை செல்லவேண்டிய நிர்பந்தம்அவருக்கு. ஞாயிறு மாலை அவர் பிள்ளைக்கு மேற்கு மாம்பலத்தில் பெண் பார்த்துவிட்டு வர ஏற்பாடு. அவர் மனைவியும், மகனும் ஏற்கனவே சென்னை பெரம்பூரில் உள்ள இவரின் மைத்துனர் வீட்டுக்குப்போய் இரண்டு நாட்கள் ஆகிவிட்டன.

முகுந்தனுக்கு வேண்டியதுணிமணிகள், மருந்து மாத்திரைகள், முன் பதிவு செய்த ரயில் டிக்கட் முதலிய அனைத்தும், அவர் மனைவிஏற்கனவே ஒரு பெட்டியில் ரெடி செய்துவைத்திருந்தாள். அவற்றை செக் லிஸ்ட் போட்டு ஒரு முறை சரி பார்த்து விட்டு, ஹோட்டலில் இருந்து வரவழைத்த ஸ்பெஷல் சாப்பாட்டை ஒரு வெட்டு வெட்டிவிட்டு படுத்தவர், நன்றாக குறட்டை விட்டுத்தூங்கிப் போனார். ஜன்னல் வழியே மழைச்சாரல் பட்டு திடீரென்று கண் விழித்த முகுந்தனுக்கு ஒரே அதிர்ச்சி.

மணி 5.45 ஆகி விட்டது. வெளியே மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. மேக மூட்டமாக எங்கும் ஒரே இருட்டு. மின்னலுடன் கூடிய பலத்த இடி வேறு பயமுறுத்துகிறது. மின் வெட்டு கூட ஏற்படக்கூடிய சூழ்நிலை.அவசர அவசரமாக பாத் ரூம் போய்விட்டு, பல் தேய்த்து, முகம் கழுவி, துண்டு ஒன்றால் துடைத்துக்கொண்டு, மெயின் ஸ்விட்சை ஆ•ப் செய்து விட்டு,வீட்டைப் பூட்டிக்கொண்டு, பூட்டை இழுத்துப் பார்த்து விட்டு, காலில் செருப்பு, ஒரு கையில் பெட்டி, மறுகையில் குடையுடன் லி•ப்ட் வேலை செய்யாத எரிச்சலில் படியிறங்கி ரோட்டுக்கு வந்தார்.

"சரியான மழை - இன்னும் 48 மணி நேரம்தொடருமாம்" யாரோ இருவர் குடைபிடித்த வண்ணம் பேசிச் சென்றது இவர் காதிலும் விழுந்தது.கனத்த மழையினால் சாலை முழுவதும் சாக்கடைகலந்து ஓடிக் கொண்டிருந்ததால் சேரும் சகதியுமாககாலை வைக்கவே மிகவும் அருவருப்பாக இருந்தது. அதிகமாக ஜன நடமாட்டமோ, வாகனங்கள்தொல்லையோ இல்லை. ஏற்கனவே ஒரு முறை இதே போன்ற நல்லமழையில், நடு ரோட்டில் தேங்கியிருந்த மழை நீருக்கு அடியில் இருந்த மாட்டுச் சாணத்தில் காலை வைத்து வழுக்கி விட்டு, சறுக்கி விழுந்ததில் உடம்பெல்லாம் சேறும் சகதியுமாகி வலது தோள்பட்டை எலும்பு நழுவி பல நாட்கள் அவஸ்தைப்பட்ட அனுபவத்தில், தற்போது மெதுவாக ஊன்றி அடிமேல் அடி வைத்து, நடக்கும் போது,இவர் அருகில் ஒரு ஆட்டோ வந்து நிற்க அதில் ஏறிக் கொண்டார்.

மணி இப்போதே 6.10 ஆகிவிட்டது. பல்லாண்டுகளாக நடைபெறும் பாலக்கரை ரயில்வே மேம்பாலம் கட்டும் வேலையால், இனி ஊரைச்சுற்றி, திருச்சி ஜங்ஷனுக்குப் போக எப்படியும் அரை மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடும். அதற்குள் வண்டி நிச்சயம் புறப்பட்டு விடக்கூடும். டவுன் ஸ்டேஷனில் இந்த வண்டி நிற்காது. மழை வேறு வலுத்து தொல்லை கொடுத்து வருகிறது. ரிஸ்க் எடுக்க விரும்பாதவராக ஆட்டோவை நேராக ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷனுக்கு விடச்சொன்னார். நேரம் இருப்பதால் பதட்டம் இல்லாமல் 6.45 க்குள் அங்கு போய் செளகர்யமாக வண்டியைப் பிடித்துவிடலாம் என்று நல்லதொரு முடிவெடுத்தார். ஆட்டோ 6.30 க்கே ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தைஅடைந்து விட்டது. முகுந்தனுக்கு ஒரு பெரிய நிம்மதி. சூடான கா•பி ஒன்று வாங்கி மழைக்கு இதமாக அருந்தினார். கொட்டும் மழையினால் 6.45 ஆகியும் இன்னும் இருட்டாகவே சூரிய வெளிச்சம் வராமல் இருந்தது அவருக்கு ஆச்சர்யம் அளித்தது. பலத்தமழை, கருத்த மேகம் அதுவே காரணம் என்று நினைத்துக் கொண்டார். "சென்னை செல்லும் பல்லவன் எத்தனை மணிக்குவரும்? இந்த •ப்ளாட்பார்ம் தானே!" என அங்கிருந்தரயில்வே •போர்ட்டரிடம் வினவினார்..

"என்ன சாமீ! ஊருக்குப் புதுச்சா நீங்க! பட்டணத்துக்குப் போக ராத்திரி பத்தரை மணிக்குத்தான் ராக்•போர்ட் எக்ஸ்பிரஸ் வண்டி இருக்கு. பல்லவனுக்குத்தான் போகணும் என்றால் பேசாமப் போய்ப்படுங்க, நாளைக்கு காலையிலே 6.45 க்குத் தான் அதுவரும்" என்றான்.

அழாக்குறையாக இங்கும் அங்கும் திரும்பிய அவர் கண்களில் பட்டது அந்த ரயில்வே கடிகாரம் 18.50 என்று சிவப்புக்கலர் டிஜிட்டலில் காட்டியவாறே. ராசி பலனில் இன்று சனிக்கிழமை உங்களுக்கு வீண் அலைச்சலும் விரயச் செலவுகளும் என்று போட்டிருந்தது, அவருக்கு ஞாபகம் வந்தது. கொட்டும்மழையால், பகலில் படுத்து தூங்கி எழுந்த அவருக்கு சனிக்கிழமை மாலை நேரம், ஞாயிறு அதிகாலையாகத் தோன்றியதில் வந்த குழப்பமே இவ்வளவுக்கும் காரணம். எதிலும் ஓரளவுக்கு முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டியது தான். ஞாயிறு காலை பிடிக்க வேண்டிய ரிஸர்வேஷன் செய்த வண்டிக்கு சனிக்கிழமை மாலையே புறப்பட்டால் யார்தான் என்ன செய்வது? கொட்டும் மழையிலும் மின்னல் இடியிலும் அவ்வப்போது லேசாகத் தெரியத் தொடங்கிய நிலா இவரைப் பார்த்துகண் சிமிட்டி சிரிப்பது போலத் தோன்றியது.

****

           
New Page 1

 மேலும் பல.....  


YOUR FEEDBACK HERE - உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்

Name *

Country *

Email-Id *

Note: Email-Id will not be published
 

'அம்மா' can be typed as 'ammaa' in english

உங்கள் கருத்துக்களை ஆங்கில வடிவில் தட்டச்சு செய்யுங்கள்
(
Type your feedback in English)


(உதாரணம்: 'அம்மா' என்பதை
'ammaa' என தட்டச்சு செய்யவும்)

நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததை தமிழில் இங்கு காணலாம்
(See your feedback in Tamil
)

Weekly Newsletter

Yes, I would like to receive it.
Maybe later

 

 

Source: suratha.com

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

 top

Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide

We use cookies on this website. By using this site, you agree that we may store and access cookies on your device. Find out more and set your preferences here . X