Home  
இதழ் 335

அக்டோபர் 22 2007

www.guruji.com

Search

 

Nilacharal Web

Search in English

Help
 

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
Home >>Story

வசீகரப் பொய்கள் (2)
- எஸ்.ஷங்கரநாராயணன்

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

தொடர்ந்து ஒற்றையடிப் பாதையில் நடப்பதா, தண்ணீர் தேடுவதா என முடிவு செய்ய முடியவில்லை. மனம் பாம்பு நாக்கென ரெண்டாய்ப் பிளவுபட்டு பிரிந்து ஒன்று பாதையிலும், ஒன்று தனிப்பாதை தேடியும் திரிகிறது. உள்யுத்தம் துவங்கி விட்டது.


<<<<சென்ற வாரம

அந்தப் பாதை நோக்கி நான் இதுவரை சரியாகவே நடந்து வந்திருக்கிறேன். அந்தக்காடு எப்படியோ என் சூட்சுமத்துக்குள் சிறு பரிச்சயம் கொண்டதாய் இருக்கிறது. நல்ல விஷயம் அல்லவா இது? என் மூச்சு சீரானது.

ஒற்றையடிப்பாதை. காட்டின் தலைவகிடு. யாரோ இதற்குமுன் இங்கே நடமாடியிருக்கிறார்கள். எவ்வளவு நல்ல ஆறுதலான விஷயம். ஒருவேளை இனி பறவையொலிகள் கூட கேட்க ஆரம்பிக்கலாம். பறவையை, மிருகங்களை விடு. மிருகங்கள் நடமாடிக் காட்டில் தரை தரிசாகி விடுவதில்லை. வகிடு பிரிவது இல்லை. அது மனிதன் நடமாடுகிற பூமியாய்த்தான் இருக்கும். இங்கே மனிதர்கள் நடமாடுகிறார்கள். மிருகங்கள் அற்ற, பறவைகளும் அற்ற, பூச்சிகளும் ஒழிந்த வெளியில் மனித நடமாட்டம் என்பதைப் புரிந்து கொள்ளத்தான் முடியவில்லை.

நான் புரிந்துகொள்ள முயல்வேன். அதை அறிந்து கொள்ளவே இந்தப் பயணம். மனமே பயந்து விடாதே. பயந்து இந்த நிமிடத்தின் மகத்துவத்தை நீ கட்டாயம் இழந்து விடக் கூடாது. மனிதன் எவனுக்கும் இத்தருணங்கள் வாய்ப்பதில்லைதான். உனக்கு வாய்த்த இந்த இரகசியக் கணத்தை, அதன் பவித்ரத்தை நீ கலைக்காமல் எதிர்கொள்.

தொடர்ந்து ஒற்றையடிப் பாதையில் நடப்பதா, தண்ணீர் தேடுவதா என முடிவு செய்ய முடியவில்லை. மனம் பாம்பு நாக்கென ரெண்டாய்ப் பிளவுபட்டு பிரிந்து ஒன்று பாதையிலும், ஒன்று தனிப்பாதை தேடியும் திரிகிறது. உள்யுத்தம் துவங்கி விட்டது.

அப்போது முகம் மாறினாப்போல உட்புகுந்தது வெளிச்சத்தின் சிறுதுளி. கண்களைச் சட்டென்று யாரோ திருப்பித் தந்து விட்டாற்போன்ற பிரமை. வழுக்கை மண்டை போன்ற பொட்டல்வெளியில் திடுமென நின்றுவிட்டது அப்பாதை. அதிர்ச்சியான அடுத்தடுத்த நிகழ்வுகளில் என் உடம்பு நடுங்க ஆரம்பித்தது. தாகத்தைத் தாண்டிய சிறு பசிபோன்றதோர் உள்பிராண்டல் கண்ட கணம். நகத்துடன் யாரோ உள்வயிற்றைச் சுரண்டுகிறார்கள்.

அங்கே, சில எலும்புகள் குவிந்து கிடந்தன. சற்று தூரத்திலேயே அவற்றைக் கண்ட மாத்திரத்தில் அவை ஒரு மகாப்பறவையின் எலும்புகளாய் இருக்கக் கூடும் என நான் அனுமானித்தேன். என் நடைவேகம் அதிகரித்தது. இதயத் துடிப்பைப் போல. இரண்டுக்கும் ஓட்டப் பந்தயத்தில் போட்டி கண்டாற்போல.

நான் பறவையின் தோள் எலும்புகளைத் தேடினேன். விரிந்து கொடுக்கிற அதன் சிறகெலும்புகள் கிடைக்குமா என்று பார்த்தேன். எப்போது அவை சதையுரிபட்டிருக்கும் என்று அறிய முடியுமா என்று பார்த்தேன். காய்ந்திருந்தன எலும்புகள். சதையோ ரத்தமோ அடையாளங்கள் இல்லை. அது பறவையின் எலும்பாய் இராது என்றே பட்டது. அவை மனித எலும்புகளா என்ன? என யோசிக்குமுன்னே எனக்கு சில புதிய ஒலிகள் அறிமுகமாயின.

யாரோ என்னைப் பார்க்கிறாற் போல ஒரு விநோதத் திகிலுணர்வில் கிட்டத்தட்ட நான் துள்ளிவிட்டேன். உடல் சில்லிட்டுவிட்டது. எனக்கு ஏதோ பத்து. ஒருவேளை! என மேலே யூகிக்குமுன் நான் அந்த மனிதனைப் பார்த்தேன். அவன் என்னைப் பார்த்தான். சற்றுத் தள்ளி, சற்று நிழலான இடத்தில் அவன் நின்றிருந்தான். அவனை.... அவனை நான் எங்கோ பார்த்திருக்கிறேன் என்கிற முதல் உணர்வு.

அவனுக்கும் அப்படியோர் தாக்கம் ஏற்பட்டதா தெரியாது. ஆனால் அவனது அந்தப் பார்வையில், என்னை அங்கே பார்த்ததின் ஆச்சரியம்.

இல்லை.

ரொம்பப் பழகியவன் போல நான் அவனிடம் கேட்டேன். "இங்கே பறவைகளே இல்லையே?" அவன் சொன்னான். "நானும் ஒரு பறவையைத் தேடி வந்தவன்" அவனை ஏனோ நம்பலாம் என்று தோன்றியது எனக்கு. "எனக்குத் தாகமாய் இருக்கிறது" என்றேன் நான். "பசிக்கிறது எனக்கு" என்றேன்.

"வா" என்றான் அவன்.

அவன் போய்க் கொண்டேயிருந்தான். அவனை எங்கே பார்த்திருக்கிறேன் என யூகிக்க முயன்றேன் நான். எதுவும் பேசாமல் அவன் போய்க் கொண்டிருந்தான். அது ஏனோ எனக்கு பயமாய் இல்லை. அவன் என் தாகத்துக்கும், பசிக்கும் வழி செய்து விடுவான் என்றுதான் பட்டது.

சட்டென அந்தக் காற்றில் சிறு குளுமை வந்தது. ஆகா அருகே எங்கோ தண்ணீர்! தண்ணீர் கிடக்கிறது. நாங்கள் நடந்து ஒரு சிற்றோடையை எட்டியிருந்தோம் என்றாலும் அவன் தொடர்ந்து மேலே போய்க் கொண்டிருந்தான். தண்ணீரின் சலசலப்புக் கேட்டது. நான் அவனைத் தொடர்ந்து போவதா? தண்ணீர்ச் சத்தத்தை அனுசரித்து வழிபிரிவதா? தெரியவில்லை. என்னால் தீர்மானிக்க முடியவில்லை. "நில்" என்றேன் நான்.

"வா" என்றான் அவன் திரும்பிப் பார்க்காமல். எனக்கு ஆத்திரமாய் வந்தது. அவன் வழி திரும்பவும் நான் அந்த ஓடையைக் கண்டேன். என் தாகம் அதைப் பார்த்ததும் அதிகரித்தாற் போலிருந்தது. "நில்" என்றேன் நான் அதிகாரமாய்.

அவன் நின்று என்னைத் திரும்பிப் பார்த்தான். ஆச்சரியமாய் இருந்தது எனக்கு.

அந்த முகம்! அவன்! அவனை எனக்குத் தெரியும். அவன்... அது என் முகம்தான்.

நான் சட்டென்று தண்ணீரில் எட்டிக் குனிந்து என் முகத்தைப் பார்த்தேன். என் தோளில் சிறகுகள் எப்படி வந்தன. நான் ஒரு ராஜாளிப் பறவையாய் மாறியிருந்தேன். அவனைப் பார்த்து நான் பறந்துபோனேன்.

"வராதே! நில்! வராதே வராதே..." என்று அலறி ஓடலானான் அவன். நான் துரத்திப்போக வாட்டமாய் வழி வாய் பிரிந்து விரிந்தவாறிருந்தது.

நான் அவன்மீது பாய்ந்து இரத்தங்குடிக்க ஆரம்பித்தேன். நல்ல வெளிச்சமாய் இருந்தது அந்த இடம். வழுக்கை மண்டைபோல.

மேலும் பல.....


YOUR FEEDBACK HERE - உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்

Name *

Country *

Email-Id *

Note: Email-Id will not be published
 

'அம்மா' can be typed as 'ammaa' in english

உங்கள் கருத்துக்களை ஆங்கில வடிவில் தட்டச்சு செய்யுங்கள்
(
Type your feedback in English)


(உதாரணம்: 'அம்மா' என்பதை
'ammaa' என தட்டச்சு செய்யவும்)

நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததை தமிழில் இங்கு காணலாம்
(See your feedback in Tamil
)

Weekly Newsletter

Yes, I would like to receive it.
Maybe later

 

 

Source: suratha.com

Gurukula
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide