|
Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
|
|
|
பிரதிநிதி
- லோ. கார்த்திகேசன்
இருக்கை இருந்தும் அமரத் தடை
அந்த ஒற்றைப் பொருளின் இருப்பு
அத்தனை பேரையும் முடக்கிப் போடுகிறது
எட்டிப் பார்த்து ஏமாந்தோர் முகத்தில்
அலுப்பும் கோபமும் குடிகொள்கிறது
அத்தனை கூட்ட நெருக்கத்திலும்
அந்த இருக்கைக்கு மட்டும் தனி மதிப்பு
பாதி சிகரெட்டை மனமின்றி மிதித்து
நகரும் பேருந்தில் ஏறிப் புகுந்து
அந்த இருக்கையில் வந்து அமர்ந்து
தன்னை அள்ளிக் கசக்கி பாக்கெட்டில் திணிக்கும்வரை
கைக்குட்டை அறிவதில்லை
தன்னை கிடத்தியவனின் பிரதிநிதி
தான் தான் என்பதை.
என்
பேனாமுனை
- சிவா ரமணி
சின்ன மலர்களின் மகரந்த தம்ப முனைகளில்
சிறகடிக்கும் பட்டாம்பூச்சிச் சிறுகொம்புகளில்
சிந்திடும் வானத்து இரத்தினத்துளிகளில்,
சில்லிட உரசிடும் தென்றலின் கீதத்தில்,
சில் வண்டின் ரீங்கார சிணுங்கலில்,
கன்னக் குழி மழலையின் சிரிப்பில்,
காற்றிலாடும் தீபத்து நுனியில்,
சேற்றில் சிக்கித் தவித்திடும் தாமரை இதழில்,
செப்பமாய்ச் செதுக்கிட்ட
என் பேனா முனை
நசுக்கிட நசுங்கிடுமா?
அன்புப் பட்டின் நுண் இழையில்,
அசைந்திடும் அன்னத்து மென்சிறகில்,
ஆதவன் அதிசயக் கதிரில்,
ஆற்றிலோடும் அனாதை மலரில்,
நைந்து விட்டதோர் உள்ளத்து
உணர்வுப் பாகில் உருப் பெற்று,
நாளும் வெண்மேடைத் தாளில்,
உணர்வுத் தில்லானா ஆடும்
நள்ளிரவிலும் தினகரனுக்குத்
தாலாட்டுப் பாடும் நானிலத்தில்
முகவரியற்ற என் பேனா முனை
நசுக்கிட நசுங்கிடுமா?
|
|
|
|
|
New Page 1
|
|
மேலும்
பல.....
|
|
|
|
|
Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
|
Best viewed @ 1024x768
resolution |
|
tamil magazines,
Hindu devotional songs,
tamil links,
tamil movies,
tamil songs,
tamil dvd,
tamil news,
tamil,
tamil comedy,
tamil movie,
tamil music DVDs,
bharatanatyam,
Yoga DVDs,
carnatic music,
tamil cinema,
sivaji movie,
cricket world cup,
tamil ebooks,
web design,
web design resources
|
|
Privacy Policy|Terms of use|Disclaimer|
Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide | |
|