|
|
நான்
-
ஜெகாப்பிள்ளை
ஒப்பனைகளின் உயிரோட்டத்தில்
உருவம் பெறுகிறேன் நான்!
கவனிப்பும் அலட்சியமும்
அர்த்தம் கொடுக்கின்றன!
மிகைத்தனத்தில் மிளிரும் சந்தோசம்!
அனர்த்தம் உணரும் போது
அமிழ்ந்து போகிறது மொத்தமும்!
ஒப்பனைகள் மறைவதில்லை
மாறி மாறி, மறுபடியும் உருவம் பெறும்
"நான்!"
இயற்கை
பேசினால்
- தென்றல் பெண்
எரிமலையாய் வெடித்தேன்,
கடலாய் பொங்கி எழுந்தேன்,
சூறாவளியாய் சுழற்றி அடித்தேன்,
என்னை நானே வஞ்சித்துக் கொண்டேன்,
பதிவாகும் பாவங்கள் பொறுக்காமல்......
தற்கொலைக்கு முயன்றேன்
கொலையில் முடிந்தது!!!!
சிசுக்கொலையாய் இருப்பினும்,
கருணைக் கொலையே!!!
சுவாசிக்க சிரமப்பட்ட கன்றைக்
கொல்வது போல,
வலியால் வேதனையுற்ற ஆட்டுக்குட்டியை
வதைப்பது போல,
உலக உளைச்சல்களால் உழன்ற
எனது குழந்தைகளுக்கு, விடுதலை தந்தது,
பாவமல்ல, புண்ணியமே!!!!
மௌனத்தின்
ஒலி
- தென்றல் பெண்
இயற்கை அளித்த இன்னல் நாங்கள்,
இறைவன் நடத்திய பரிசோதனையில்
பாதியில் உறங்கிப்போனானோ!
அரைகுறையாய் எங்களை இங்கே
அனுப்பி வைத்தானோ!
கருவறையே, கல்லறையாகிப் போயிருந்தால்...........
இன்று சிலுவைகளை சுமக்க வேண்டியிருக்காது.
கழிவறையின் வாயிலில் கூட,
கலக்கம் தான் மிஞ்சும் எங்களுக்கு..........
ஆயிரமாயிரம் உணர்வுகளில்,
ஏதோ ஓர் உணர்வு, இடம் மாறிப் போனதன்,
விளைச்சல் தான் நாங்கள்.
எங்களை நெற்பயிராய்ப் பார்க்க வேண்டாம்,
வெறும் புற்களாகவாவது நோக்குங்கள்.
படைத்தவனே!
பால் மாற வழியிருந்தால் கூறு,
நாங்கள் பாடைக்குப் போகும் முன்னே!!!! |
|
|
|
|
New Page 1
|
|
மேலும்
பல.....
|
|
|
|