|
Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
|
|
|
|
சாரல் 292 |
25 டிசம்பர் 2006
|
1.
எப்போதும் மூடப்பட்டே இருக்குது
உன் வீட்டுக்கதவும்
என் வீட்டுக்கதவும்
உன்னைப்போலவும்
என்னைப்போலவும்.
ஒருக்களித்தாவது
திறந்து வைப்போம்
நம் கதவுகளை
உன் முகத்தை நானும்
என் முகத்தை நீயும்
எப்போதாவது
பார்க்கும்பொருட்டு.
2.
அதீதாவைப் பற்றி
எதுவுமே தெரியாதென்கிறாய்
குறைந்தபட்சம்
உன் உயிரின் இருப்பை
உணர்ந்துள்ளாயா நண்பா?
அதீதாவை அறிந்ததினால்
அறிந்துள்ளேன் அப்பனே
என்
உயிரின் பொருளை
மற்றும் அதன் ரகசியத்தை.
3.
அதீதா என்பது
என் அதியற்புதப் பரவசத்தின்
என் அதியுன்னதப் பிரார்த்தனையின்
என் பெரும்பேரானந்தத்தின்
குறியீடு நண்பா!
மேலும்
என் மரத்துப்போன தழும்பொன்றில்
அரூபமாய் ஒழுகும்
மெல்லிய கவிதையாய்
என் மௌன அழுகையின்
துயர இசையாய்
தாங்கவொன்னா வலியொன்றின்
உருமாறிய இன்ப அதிர்வாய்
கொடியதோர் துக்கமொன்றின்
குயில்பாட்டாய்
இன்னும் பிறவுமாய்
இருப்பது அதுவே!
என்னைப் பித்தன் என்று எண்ணிவிடாதே:
நாணயத்தின் ஒருபக்கத்தில் மட்டும்
வாழ்பவன்தான் பித்தன்!
ஒரே க்ஷணத்தில்-
என் ஆனந்தத்தின் துக்கமாய்
என் அன்பின் வெறுப்பாய்
என் நன்மையின் தீமையாய்
ஆவதென் அதீதா.
அது என் பௌர்ணமி
அதேபோலவே
என் வளர்பிறையும் தேய்பிறையும்
அதுவே எனக்கு!
4.
தொண்ணூறு சதவீதம் கண்ணீராலும்
ஐந்து சதவீதம் குழப்பத்தாலும்
சூழப்பட்ட நம் வாழ்வை நினைத்தால்
என் கண்களில்
குருதிவழிகிறது நண்பா!
மீதமுள்ள
ஐந்து சதவீத வாழ்வில்
என்னை நிரப்புபவள் அதீதா
உன்னை நிரப்ப
ஏதாவது வைத்திருக்கிறாயா நீ
துப்பாக்கிகளையும்
இன்னபிற
கொலைக்கருவிகளையும் விடுத்து?
5.
நில் நண்பா! நில்!
எந்திரத்தின் மேலேறி
அதன் போக்கில் போகாதே
எந்திரம்தான்
உன் வழியில் போகணும்!
இன்னும் புரியாவிடில்
மாடசாமியின்
பொன்மொழியைப் படி:
"எந்திரம்
உன்னை ஓட்டுவதை
உணரும் கணத்தில்தான்
எந்திரத்தை
நீ ஓட்ட ஆரம்பிக்கிறாய்!"
6.
உன்னை நான்
எவ்விதம் கூறமுடியும்
மனப்பிறழ்வு கொண்டவன் என
நானும் அவ்விதமாக
இருப்பதை அறிந்தபின்?
அவ்விதம்
அறிந்துகொண்டது வேண்டுமானால்
உன்னையும் என்னையும்
வேறுபடுத்தக்கூடும்
அவ்வளவுதான்!
******* |
|
|
|
|
New Page 1
|
|
மேலும்
பல.....
|
|
|
|
|
Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
|
Best viewed @ 1024x768
resolution |
|
tamil magazines,
Hindu devotional songs,
tamil links,
tamil movies,
tamil songs,
tamil dvd,
tamil news,
tamil,
tamil comedy,
tamil movie,
tamil music DVDs,
bharatanatyam,
Yoga DVDs,
carnatic music,
tamil cinema,
sivaji movie,
cricket world cup,
tamil ebooks,
web design,
web design resources
|
|
Privacy Policy|Terms of use|Disclaimer|
Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide | |
|