என் இதயத்தில்
உன் முகவரி
எதிர்வீட்டில்
நீ வசிக்கிறாய்!
***
கவிதைக்குக் கரு
எங்கிருந்து கிடைக்கிறது
காதலி கேட்கிறாள்,
ஆயிரமாயிரம்
கருக்களை
விழியால் வீசியபடி!
***
பூமியில் தீயிட்டு
வானத்தில் மழை
வாண வேடிக்கை!
***
நீ
உறவுகளோடு சேர்ந்தாய்
அனாதையாய்
என் கவிதைகள்.
***
மனிதனுக்கும்,
மனிதனுக்கும்
இனக்கலவரம்
சமாதானத்திற்குப் புறா!
***
பூக்கள் மீது மழை
அடியில்
இலைகளுக்கு வியர்வை!
***
அருவி தற்கொலை
நதி ஜனனம்.
***
உன் நிழற்படங்கள்
சுடுகின்றன
குளிர்சாதன அறைக்குள்!
*******