|
Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
|
|
|
|
இனிய
மகனே
எனக்காக எழுதுகிறேன்
இருந்தும்
இது உனக்காகவும்.
உபதேசமென்று
நினைத்து
ஒதுக்க வேண்டாம்!
தோழமை நிறைந்த
நண்பனைப்போல
சில விஷயங்களை
தோள்தொட்டுப் பேசுவோம்!
இரண்டுவகை
மனிதர்களை
எனக்கும்
உனக்கும்
எல்லோருக்கும் தெரியும்!
முக்கியமான
மூன்றாம் ரகம்
ஒன்றுள்ளது.
நல்லவர்கள் போல்
உள்ளவர்கள்
இவர்கள்
விருந்து கொடுத்து
உன்னை
விமர்சிப்பவர்கள்!
பூவுக்குள்
விஷமுள்ளை வைத்து
பூமாரி பொழிபவர்கள்!
இவர்களுக்குத்தான்
சிரிக்க வைத்துக்
கொல்லும்
சினேகம் தெரியும்!
எப்போதும்
வாழ்த்தி வாழ்த்தியே
வீழ்த்துபவர்கள்!
மது மாதிரி இவர்கள்
எப்போதும்
போதை தர வல்லவர்கள்
எப்போதுமே
மருந்தாகமாட்டார்கள்!
இவர்கள்
ஏறுவதற்கு
ஏணியாகவும்,
தங்களின்
சுயம் மறைக்க
கோணியாகவும்,
தங்களின்
குற்றம் சுமந்து செல்லும்
தோணியாகவும்,
உன்னை
துணைக்கழைப்பார்கள்!
உன் மீது
அவர்களை
விளம்பரம் செய்துகொள்வார்கள்!
தீயவர்களைத்
தெரிந்துகொள்ள-உனக்கு
திறனிருக்கிறது.
இந்த
பகட்டான பாவிகளுக்கு
தனியாக முகமில்லை
அதனால்
இவர்களை
ரகம் தெரிந்து கொள்!
இவர்களோடு
எப்போதும்
ஒதுங்கியே நில்!
சரி
எதை நோக்கி
இப்போது
பயணம்
செய்துகொண்டிருக்கிறாய்?
இலக்கைத் தீர்மானித்து
முயற்சித்தால்
இலக்கு உனக்கு
இலகுவாகும்.
எதார்த்தம்
உன்னை
கிடத்தியிருந்தாலும்,
கனவுகள்
பறந்துகொண்டேயிருக்கட்டும்!
உன் சப்தங்களையெல்லாம்
மௌனத்திற்குள்
போட்டுப் புதை
செயல் விருட்சமாக
வெளிவரட்டும்!
புடம்
போடப்படும் மனிதன்
காரியதரிசியாகிறான்
புலம்புகின்றவன்
எப்போதும்
பாதைசாரியாகிறான்.
காற்றை
பகுக்கத்தெரிந்த
நமக்கு
கனவுகளை
பிடிப்பதொன்றும்
கனவில்லை!
காயத்தின்
அடுத்த பக்கத்தில்
விளம்பரமெழுத
மனித விரல்கள்
விரைகின்றன.
உனது
லட்சியமென்ன?
சுடும்
சூரியக் கதிர்களுக்கு
சுகம் சொல்லிக் கொடுப்பதா?
வளபேதமில்லாத
பூமியை
வரவழைப்பதா?
கண்ணீரில்லாத
காதலைக்
கண்டுபிடிப்பதா?
இளமையை
நிரந்தரம் செய்யும்
ஏற்பாடா?
மனிதனிடம்
மனிதத்தை
விதைப்பதா?
உனது
ஆழ்ந்த சிந்தனை
எதுவாக
வேண்டுமானாலும்
இருக்கட்டும்!
காயம்,
பூமி
என்பதுகூட
மனித வரையறைதான்
அதற்கு மேலும்....
என்னைக்
கேட்கிறாயா மகனே
உன்னை
லட்சியவானாக்குவதே
எனது லட்சியம்
சிறு முயற்சிதான்
இருந்தும்
செய்துகொண்டிருக்கிறேன்
உன்
தங்கைக்கும் சேர்த்து!
|
|
|
|
|
New Page 1
|
|
மேலும்
பல.....
|
|
|
|
|
Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
|
Best viewed @ 1024x768
resolution |
|
tamil magazines,
Hindu devotional songs,
tamil links,
tamil movies,
tamil songs,
tamil dvd,
tamil news,
tamil,
tamil comedy,
tamil movie,
tamil music DVDs,
bharatanatyam,
Yoga DVDs,
carnatic music,
tamil cinema,
sivaji movie,
cricket world cup,
tamil ebooks,
web design,
web design resources
|
|
Privacy Policy|Terms of use|Disclaimer|
Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide | |
|