|
அமாவாசை
-
மங்கை
இத்தனை
நாள்
வெள்ளைதான் அழகென்று
நினைத்த நீ கூட
இன்றென்னாட்டு பெண்கள்
கண்மணி நிறம் பார்த்து
கருத்தம்மா ஆனாய்
நிலவே!
***
தொலைந்து போன சுயம்
- அறிவு
அன்பு
மகளாய்
தோள் சாய தோழியாய்
கனவுகள் பூக்கும் காதலியாய்
பாசமிகு மனைவியாய்
பொருப்பான தாயாய்
என அனைத்துமாய் நான்
இதில் நான் நானாய் எங்கே?
***
அம்மா
- புவனேஸ்வரி
அன்று
நிலவைக் காட்டி சோறு ஊட்டினாள்
இன்று என்
ஞாபகங்களிள் நிலவாய்
***
ஏனோ
தெரியவில்லை...!
-
சிலம்பூர் யுகா
எல்லோரையும்
வெறுக்கும்
அந்த
விலக்குநாட்களில் கூட
இதயம்
உன்னை
எதிர்பார்க்கும்
கண்கள்
கலங்கியபடி....
***
|