வா...
நமக்குள்
சாதி, மத, இன பேதங்களை
வைத்து சண்டை இட்டுக்கொள்வோம்.
அப்போதுதான்
அரசியல்வாதிகள் நிம்மதியாய்
கொள்ளை அடிக்க முடியும்.
****
எங்கள் ஊருக்கு
பேருந்து
மின்சாரம்
சாலை வசதி
மேம்படுத்தப்பட்ட பள்ளி
கழிப்பறை
எதுவும் வரவில்லை...
வந்ததெல்லாம்
வரிசையாய்
அழகழகாய் வாகனங்கள்..
நிறைய மனிதர்கள்...
நிறைய்ய.. பொய்கள்!
****
எவருக்கு
எப்போது
எந்த இடத்தில்
என்ன தோற்றத்தில்
சிலை வைக்கலாம்..
கலந்து பேசி
முடிவு பண்ணலாம்..
அதுவரை
வறண்ட நிலம்
காயும் வயிறு
இருண்ட வீடு
அப்படியே இருக்கட்டும்.
*******