1.
பசும்
புல்தரை! ஈரச்செம்மண்!
மனதைக் குளிர்விக்கும் கடல்காற்று!
உறங்கட்டும் உடலும் மனமும், அலைகளற்று!
2.
கூட்டுக்குடும்பங்கள் ஷேர் ஆட்டோவில்
உதிரிக் குடும்பங்கள் மூடிய கார்களில்!
நான் மட்டும் தனியாய், என் கவிதைகளுக்குத் துணையாய்!
3.
இருள்
படர்ந்தாலென்ன? அஞ்சாதீர் என்று
தலை நிமிர்ந்து ஒளிபரப்பும்
உயர்ந்த(வர்) ஒளி விளக்குகள்!
4.
கண்கள் இனிமை!
இலைகள் பசுமை!
கிளைகள் வலிமை! நிழல்கள் குளுமை!
அழுதது மறைந்துழைக்கும் கருத்த வேர்கள்!
5.
மழை
கொடுத்துக் கரைந்தது மேகம்!
மணம் கொடுத்துக் கரைந்தது தென்றல்!
மனக்காயங்கள் மறையட்டும்! சிறு வடுக்கள் இருக்கட்டும்!
*******