பாரபட்சம்
வைரத்தை வைரம்
அறுத்துக் கொண்டிருந்தது
அரம் இரும்பைத்
தேய்த்துக் கொண்டிருந்தது
மாமியார்கள் மருமகள்களை
வதைத்துக் கொண்டிருந்தனர்
கோடரிக் காம்பு புலம்பியது
குலத்தைக் கெடுப்பதாக
எனக்கு மட்டுமேன் அவப்பெயரென்று
*****
பங்கு
ஈசல் பூச்சிகள்
மொய்த்துக் கொண்டிருந்த
குழல்விளக்கை அணைத்தேன்
பல்லிக்கு அவை இரையாவதோ
பசியில் அதைவிட்டுப்
பறந்து போவதோ
எனக்குத் தெரியாமலேயே
நடக்கட்டும்.
*******