|
Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
|
|
|
|
சாரல் 331 |
24 செப்டம்பர் 2007
|
பேருந்தின் நடு
இருக்கையில்
உறங்கிக் கொண்டிருக்கும்
பெண்மணி
தன் ஸ்டாப்பில்
மறக்காமல் இறங்கிப் போவாரா?
அதற்கு முந்திய ஸ்டாப்பில்
இறங்கும்போது
என் மனசு தவிக்கிறது.
எப்போதும்
ஏதேனும் ஒரு குழந்தை
தன் சிரிப்பால், சைகையால்,
மழலையால்
மனசைத் தொட்டு விடுகிறது.
பயணம் என்னையும்
குழந்தையாக்கி விடுகிறது.
ஏறிய நிமிடம் முதல்
கைபேசியில் கேட்டுக் கொண்டிருக்கும்
இளைஞியுடன்
எதிர் முனையில் பேசுபவர் யார்?
கை தவறிப்போன இளமை...
காதல் வாய்க்காத மனசு...
தப்பாகவே போடும் கணக்கு!
எழுந்து நின்று இடம்
கொடுக்க மனசு தூண்டும்.
நிற்கும் பாட்டியை விடத்
தளர்ந்து போன உடம்பு தடுக்கும்
எழ விடாமல்.
ஒவ்வொரு பயணமும்
ஏதோ ஒரு வகையில்
மனதில் பதிந்து போகிறது
எத்தனை முறை அழித்தாலும்
அழியாத நினைவுச் சித்திரங்களாய்!
******* |
|
|
|
|
New Page 1
|
|
மேலும்
பல.....
|
|
|
|
|
Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
|
Best viewed @ 1024x768
resolution |
|
tamil magazines,
Hindu devotional songs,
tamil links,
tamil movies,
tamil songs,
tamil dvd,
tamil news,
tamil,
tamil comedy,
tamil movie,
tamil music DVDs,
bharatanatyam,
Yoga DVDs,
carnatic music,
tamil cinema,
sivaji movie,
cricket world cup,
tamil ebooks,
web design,
web design resources
|
|
Privacy Policy|Terms of use|Disclaimer|
Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide | |
|