 |
இதழ் 334 |
 |
அக்டோபர் 15 2007
|

|
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
 | Home
>> | poem |
| நட்சத்ரன் கவிதைகள்
- நட்சத்திரன் |
| | உன் வேரைமட்டும் பார்
சிரித்துச்சிரித்து சந்தோஷி!
சிரிப்பூ
என்னைப்பார் சிரி கண்ணைப்பார் சிரி உன்னைப்பார் சிரி உன்னைமட்டும் பார் சிரி உன் வேரைமட்டும் பார் சிரித்துச்சிரித்து சந்தோஷி! பின் கண்டின்புறு உன்னுள் நீ பூவாய் விரிந்து பூத்திருப்பதை!
அதுவும் இதுவும்
அது என்னவென்று இதைக் கேட்கிறேன் இது என்னவென்று அதைக் கேட்கிறேன் அதை அதனிடமும் இதை இதனிடமும் கேட்டறியும் துப்பு வாய்க்கவில்லை இன்னும் ஆயினும் அது இதுவாகவும் இது அதுவாகவும் ஆகிடும் தருணம் இருக்கவும்கூடும் எது எதுவாயினும் அதுவே அது! இதுவே இது!
ஆழத்தில்…
வாழ்க்கை மேலோட்டமானது: மனிதர்களின் ஆடையைபோல மண்ணில் படிந்திருக்கும் மேகநிழல்போல ரயில் பயணிகள் ஒதுங்கி நடக்கையில் ஒருவர்மீதொருவர் வீசும் பார்வையைப்போல
ஆருக்கும் புலனாவதில்லை ஆடைகளின்/நிழல்களின்/பார்வைகளின் அடியாழத்தில் மறைந்திருக்கும் இதயமெனும் அதிரகஸ்யப் பொற்புதையல்.
மேலும் பல.....
|
|
|
|
|
Source: suratha.com
|
|