 |
இதழ் 335 |
 |
அக்டோபர் 22 2007
|

|
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
 | Home
>> | poem |
| கற்றதனால் ஆய பயன்
- ஜெகாப்பிள்ளை |
| | மணக்கின்ற மொழியெல்லாம் கவிதையில் மிளிரும்
நினைக்கின்ற வழிநடக்க கட்டுரைகள் உதவும்
களைப்பென்று சிறிதிளைப்பா றிக்கதைகள் தோன்ற
இனிப்பென்று அறிந்துகொள் படிப்பு!
ஏடெடுத்து நூல்பிரித்துப் படிப்பதிலே என்னசுகம்? தாலடுத்து தானிமிர்ந்து நடப்பதிலே என்னலயம்? தோள்குலுக்கி யார்கேட்கும் கேள்விக்கும் விடைகூறும் நாளொதுக்கி நீகற்கும் கல்வி!
சுமக்கின்ற சுமையும் சுகமெனத் தோணும்! நினைக்கின்ற வாழ்வும் நிழலீன்ற தருவாம், மணக்கின்ற கனவும் ஒருநாள் நடக்கப் படிக்கின்ற வயதிலே பயில்!
மணக்கின்ற மொழியெல்லாம் கவிதையில் மிளிரும் நினைக்கின்ற வழிநடக்க கட்டுரைகள் உதவும் களைப்பென்று சிறிதிளைப்பா றிக்கதைகள் தோன்ற இனிப்பென்று அறிந்துகொள் படிப்பு!
சேதாரம் இல்லாமல் அழகுநகை செய்வதுண்டா? ஆதாரம் இல்லாமல் கட்டிடம்தான் எழுவதுண்டா? தோராயப் பொருளிருந்தும் நற்கல்வி இல்லையெனில் கூறாமல் குறையுணர்த்தும் ஊர்!
எத்தனைதான் லாபநட்டம்? பட்டியலிட் டாலாநீளும்? அத்தனையும் பட்டபின்பா அடையாளம் காணல்தகும்? சிந்தனையின் வயப்பட்டே சிலவிஷயம் உறுதி பெற மந்திரம்போல் மனதிலூறும் அறிவு!
நினைப்பதெல்லாம் சொல்லுதற்கும் சொன்னதெல்லாம் செய்வதற்கும் இணைக்கின்ற உறவுண்டா? எதற்கெனினும் வழிநடத்தும் வினைப்பயனென் பதேநன்றா? களைபோன்ற பதர்களைய அணையாஅ றிவேதுணிவெ னஉணர்!
கற்றதெல்லாம் காசுசெய்(ய)வா? பாவமென்று பிறகுணர்ந்து பெற்றதெல்லாம் ஞானமென்(ப)தா? தவறென்று நாளுணர்ந்து மற்றவர்க்கு உதவிசெய்யும் மாண்புபெறல் மாநிலத்தில் கற்றவர்க்(கு)அ ணியென்றுகூவிச் சொல்!
சிரம்குனிந்து வயிறுவளர்ப் பதாவாழ்வு? மெலிந்தோரை மனம்குமைந்து வைதுதீர்ப் பதாஉயர்வு? வலிந்தோர்க்கு இதழ்குவித்து இசைபாடு வதா சிறப்பு? உண்மையறிவு உள்ளொன்று வைத்துபுறம் பேசா!
அழைக்கின்ற அபிநயங்கள் முகப்பட்டை காட்டும் பிழைக்கின்ற வழியுரைத்து விளம்பரமும் தீட்டும் பழிக்கின்ற பளபளப்பில் வீழாமல் சமுதாயம் சிறக்கின்ற வாழ்வைசிந் தைசெய்!
மேலும் பல..... |
|
|
|
|
Source: suratha.com
|
|