எழுதப்படாத விதிகள்

(Based on Facts under lined)

» எல்லாருக்கும் எப்படி பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற திட்டம் தெரிகிறது, ஆனால் அதன்படி சம்பாதிக்க முடிவதில்லை என்பதுதான் உண்மை.

» உங்கள் முயற்சியில் உங்களுக்குத் தோல்வியா? நீங்கள் முயற்சி செய்ததற்கான எல்லா அடையாளங்களையும் அழித்துவிடுங்கள்.

» உங்களுக்கு எப்போதுமே ரொட்டிக்கு எந்தப்பக்கத்தில் வெண்ணை தடவுவது என்பதில் சந்தேகம்தான். ஆனால் நீங்கள் வெண்ணை தடவிய பக்கம்தான் கீழேவிழும் என்பது மட்டும் நிச்சயம்.

» எந்தப்பொருளைக் கீழே தவறிப்போட்டுவிட்டலும் சரி, அது நம்மால் எடுக்கமுடியாத ஏதோ ஒரு மூலையில்தான் ஒளிந்துகொள்ளும்.

» ஒரு புள்ளிவிவரப்படி 42.7 சதவிகித புள்ளிவிவரங்கள் அந்தந்த நேரத்திலேயே தயாரிக்கப்படுகின்றன.

» பேப்பர் கிடைக்கும்போது பேனா கிடைப்பதில்லை, பேனா கிடைக்கும்போது பேப்பரைக் காணோம். பேனா பேப்பர் இரண்டும் இருக்கும்போது யாரும் போன் செய்யமாட்டேன் என்கிறார்கள்.

» நீங்கள் வகுப்புக்குச் செல்லாமல் கட் அடிக்கும் நாட்களில்தான் ஆசிரியர் அட்டென்டன்ஸ் எடுக்கிறார்.

» நீங்கள் உங்கள் செல்போனில் ரோமிங்கில் இருக்கும்போதுதான் உங்களுக்கு அதிகபட்சமான ராங் கால்கள் வரும்.

» ஒரு பஸ்சுக்காக ரொம்பநேரம் தவமிருந்தாலும் நாம் விரும்பும் பஸ் வராது. வரும்போது இரண்டு பஸ்கள் ஒன்றாக வரும். அதில் நிச்சயம் சோதனையாக நாம் ஏறும் பஸ்ஸில்தான் கூட்ட நெரிசலில் நாம் மாட்டிக்கொள்ள வேண்டியிருக்கும்.

» கடைசியாக வேலையைவிட்டு நீக்கப்பட்ட அல்லது வெளியேறியவர் தான் அதுவரை நடந்த எல்லாத் தவறுகளுக்கும் பொறுப்பு, அடுத்து யாராவது நீக்கப்படும் வரையோ அல்லது வேலையைவிட்டுப் போகும்வரையோ!

» காற்று எந்தப்பக்கம் வீசினாலும் சிகரட் புகை என்னவோ சிகரட் பிடிக்காதவர் இருக்கும் பக்கம்தான் போகும்.

About The Author

1 Comment

  1. தமிழ் செல்வம்

    உங்களுக்கு எப்போதுமே ரொட்டிக்கு எந்தப்பக்கத்தில் வெண்ணை தடவுவது என்பதில் சந்தேகம்தான். ஆனால் நீங்கள் வெண்ணை தடவிய பக்கம்தான் கீழேவிழும் என்பது மட்டும் நிச்சயம். – ரொம்ப சூப்பர்

Comments are closed.