நகைச்சுவை பிட்ஸ் (59)

ஹி..ஹி…!!

”என் பொண்டாட்டி நில்லுனா நிப்பா; உட்காருன்னா உட்காருவா.. தெரியுமா!”

”என் பொண்டாட்டியும்தான் மச்சி. நேத்து நைட்டு கூட எனக்கு முன்னாடி கையைக் கீழே ஊன்றி
முழங்காலை மண்டி போட்டு உட்கார்ந்தா.. தெரியுமா!”

”ஓவ்… வெரி குட்! அப்புறம் என்ன சொன்னாங்க..?”

”டேபிளுக்கு அடியில ஒளியாம.. ஆம்பள மாதிரி வெளியே வந்து திருடன் கூட சண்டை போடுய்யா..
அப்படினு சொன்னா!!”

*****

ஆவ்வ்வ்…!

“ஆபரேஷன் தியேட்டர் கதவுல டாக்டர் ஏதோ போர்டு மாட்டிட்டுப் போறாரே? அதுல என்ன எழுதியிருக்கு?”

“‘இன்றே இப்படம் கடைசி’ன்னு இருக்கு!”

*****

முடிவே பண்ணியாச்சா?!

“டாக்டர், ஆபரேஷன்ல ஒருவேளை நான் செத்துட்டா என் இதயத்தை தானமா கொடுத்துடுங்க”

“கவலைப்படாதீங்க.. வேறொரு இதய நோயாளியை ஏற்கெனவே கூட்டிட்டு வந்துட்டோம்!”

*****

ம்ம்.. பொருத்தமான பேர்தான்!

“ஏன் யாருமே அந்த டாக்டர்கிட்ட ஆபரேஷன் பண்ணிக்க மாட்றாங்க..?”

“டாக்டர் ‘எம்.தர்மர்’ங்கிற தன்னோட பேரை நியூமராலஜிப் படி, ‘எம.தர்மர்’ அப்படினு மாத்தி வச்சிக்கிட்டார்.

*****

‘தொடநாடு’ எஸ்டேட்டுல ரூம் போட்டு.. யோசிப்பாய்ங்களோ!

டிவியில் செய்தி : தேர்தலில் ஆங்காங்கே முறைகேடு நடந்தது.

எதிர்க்கட்சித் தலைவர் : இதற்குத்தான் சொன்னோம், வோட்டிங் மெஷினையும், வாக்குச் சீட்டு முறையையும் ஒழிக்க வேண்டுமென்று! ஒவ்வொரு ஏரியாவிலேயும் நேரடியாக மக்களை அணுகி, அவர்களது ஓட்டு யாருக்கென்று கையைத் தூக்கச் சொல்லி, அதை எண்ணுவதுதான் சிறந்த முறை என்பதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்.

*****

About The Author

8 Comments

  1. SANTHOSHI

    மற்றவர்களை சிரிக்க வைக்க நீங்கள் சிரமப்படுவது தெரிகிறது. அது சரி நகைச்சுவை பிட்ஸ் எங்கே?

  2. Rishi

    எல்லோரும் இப்படியே சொன்னா…. எப்புடிப்பா?!
    கேலிதானே?!

  3. அந்தோனிராஜ்,கடையம்

    வாக்கு அளிக்கும் புதுமையான திட்டம் பயன்படுத்தினால் அரசியல்நிலமைஎமரும்

  4. SANTHOSHI

    ரிஷி! எப்பொழுதும் சிரித்துக் கொண்டிருந்தால் போதும். மற்றவர்களை சிரிக்க வைக்க இப்படி மெனக்கெட வேண்டாம். மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குதுப்பா.

Comments are closed.