லக… லக… ஜோக்ஸ் (2)

நீதிபதி : உன்னை மாதிரி ஆளுங்களாலே இந்தச் சமுதாயத்திற்கு ஒரு உபயோகமும் இல்லை.
குற்றவாளி : இப்படி சொல்லிட்டீங்களே,ஐயா!! என்னை மாதிரி ஆளுங்களாலேதான் இங்க இருக்கும் ஏட்டய்யா, வக்கீலுங்க, இந்தக் கோர்ட்டில் இருக்கும் எல்லோருக்கும், ஏன் உங்களுக்குக் கூட வேலை கிடைச்சிருக்கு. 

*************

ஆசிரியர் : ‘எண்ணம்’, ‘கற்பனை’ இது ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க பார்க்கலாம்?
மாணவன் : நீங்க நல்லாப் பாடம் நடத்துறீங்க அப்படீங்கிறது உங்க எண்ணம். அதைப் படிச்சு நாங்க எல்லோரும் பாஸாவோம் அப்படீங்கிறது உங்க கற்பனை.

*************
அதிகாரி : நீங்க ஒரு கட்டிடத்தின் 8 – ஆவது மாடியில இருக்கிறதா கற்பனை செய்துக்கோங்க. திடீர்னு அங்கே தீப்பிடிச்சிடுது. நீங்க என்ன செய்வீங்க?

(நேர்காணலுக்காக வந்த) நபர் : ரொம்ப ஸிம்பிள். கற்பனை செய்யறதை நிறுத்திடுவேன்.

*************

காதலன் : நான் உனக்காக முள் மேல் நடப்பேன், தீயில் குளிப்பேன்.
காதலி : நிஜமாவா டார்லிங்? உங்களை பார்க்கணும் போல இருக்கு. இப்போ உடனே வர முடியுமா?
காதலன் : வெயில் கொளுத்துது, இப்போ போய் என்னை வரச் சொல்றியே! உனக்கு அறிவேயில்லை.

*************

About The Author