லக… லக… ஜோக்ஸ் (50)

நபர் – 1: இந்த டாக்டர் சரியான சினிமா பைத்தியம் போலிருக்கு.

நபர் – 2: ஏன்?

நபர் – 1: ஆப்ரேஷன் தியேட்டருக்கெல்லாம் ‘ஸ்கிரீன் 1’, ‘ஸ்கிரீன் 2’ன்னு பேர் வச்சிருக்காரே.

                                                                             *****

வார்டு பாய்: என்ன அங்கே ஒரே சத்தமா இருக்கு?

நர்ஸ்: போஸ்ட்மேன் பொண்டாட்டிக்கு டெலிவரி ஆகியிருக்கு. குழந்தையோட வெயிட்டுக்கு ஏத்த மாதிரிதான் பணம் கட்டுவேன்னு போஸ்ட்மேன் அடம்பிடிக்கிறாராம்.

                                                                           *****

நர்ஸ் – 1: ஆனாலும் அந்த டாக்டர் செய்யறது ரொம்ப அநியாயம்!

நர்ஸ் – 2: அப்படி என்ன செஞ்சாரு?

நர்ஸ் – 1: ’30 நாளில் ஆப்ரேஷன் செய்யக் கற்றுத் தரப்படும்’னு விளம்பரம் கொடுத்திருக்காரு.

                                                                           *****

நோயாளி: என்ன நர்ஸம்மா, இது ஸ்பெஷல் வார்டுன்னு சொன்னாங்க… ஆனா, கொசுவெல்லாம் வருது.

நர்ஸ்: சாதா வார்டுல பல்லி, தேளெல்லாம் வருமே!

                                                                          *****

நோயாளி: டாக்டர்! போன தடவை வந்தப்போ 200 ரூபாதானே கன்சல்டிங் ஃபீஸ் வாங்கினீங்க. இந்தத் தடவை 400 ரூபா தர சொல்றீங்க!

டாக்டர்: என்னைப் பத்தி வெளியில போய்த் தப்பு தப்பாப் பேசினதுக்கான இன்ஸல்டிங் பீஸ் 200 ரூபா.

                                                                        *****

About The Author