லக… லக… ஜோக்ஸ் (60)

பெண் – 1: என்னது, உன்னை பொண்ணு பார்க்க வந்தவரோட 40 பேர் வந்தாங்களா? மாப்பிள்ளை பேர் என்ன?

பெண் – 2: அலிபாபா.

*****

பெண் – 1: என்னடி இது அநியாயம்! உன் வீட்டு வேலைக்காரி லீவு போடற அன்னிக்கெல்லாம் உன் வீட்டுக்காரரும் லீவு போடறாராமே, ஏன்?

பெண் – 2: பின்ன, அவ செய்ய வேண்டிய வேலையெல்லாம் வேற யார் செய்யறதாம்?

*****

நபர் – 1: தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?

நபர் – 2: அதை தோய்க்கிறாங்களே அதனால்தான்.

*****

நண்பன் – 1: கல்யாணமான புதுத் தம்பதிகள் என்னென்ன கத்துக்குறாங்க?

நண்பன் – 2: புருஷன் சமையல் செய்யக் கத்துக்கிறான், மனைவி சண்டை போடக் கத்துக்கிறா.

*****

நண்பர் – 1: வீடு நல்லா இருக்கே! எல்லாம் சேர்த்து எவ்வளவு ஆச்சு?

நண்பர் – 2: நிலம் எங்க மாமனார் வாங்கித் தந்தார். வீடு கட்டுற செலவை என் மனைவி ஆபீஸ் லோன் மூலமாப் பார்த்துக்கிட்டா. வீட்டுக்கு தேவையான பொருட்களை எல்லாம் மச்சான் பாரீன்ல இருந்து அனுப்பி வைச்சார். என் வீடு ரொம்ப நல்லா வந்திருக்கு இல்லை?

நண்பர் – 1: உங்க வீடு…?

*****

About The Author