லக.. லக… ஜோக்ஸ் (64)

நண்பர் – 1: உங்க மகன் சிகரெட் பிடிக்கிறான். உங்களுக்கு தெரியுமா?

நண்பர் – 2: எனக்கு சிகரெட் பிடிக்கத் தெரியாதுங்க.

*****


நபர் – 1
: நான் உனக்கு கொடுத்த கடன் என்னாச்சு? வர வர எனக்கு ஞாபக மறதி அதிகமாயிட்டே வருது.

நபர் – 2: கொஞ்ச நாள் பொறுத்துக்குங்க சார்!

நபர் – 1: எவ்வளவு நாள்?

நபர் – 2: உங்களுக்கு முழுசா மறதி ஏற்படுற வரைக்கும்.

*****


பெண் – 1:
இலவசம்னா என் கணவர் எதையும் விடமாட்டார்.

பெண் – 2:
அப்படியா?

பெண் – 1:
பின்னே பாரேன், இப்போ இலவசத் திருமணம் செஞ்சுக்கிட்டு வந்திருக்கார்.

*****

வக்கீல்: ஏன் கபாலி உன் மனைவியை விஷம் வச்சி கொல்லப் பார்த்தே?

கபாலி:
அவ என்னை ரசம் வச்சி கொல்லப்பாத்தா எசமான்!

*****

நண்பன் – 1: ஏன் தினமும் கோயில்ல உங்க மனைவிக்கு அர்ச்சனை பண்றீங்க?

நண்பன் – 2: வீட்டுல அவ தினமும் எனக்கு அர்ச்சனை பண்றாளே. அதான் திருப்பி நான் கோயில்ல பண்றேன்.

*****

About The Author

2 Comments

  1. வெற்றியரசன்

    நல்ல ஞாபகமறதி இப்படியும் மனித ஜென்மம் உண்மையிலே வாழ்கிறது

  2. vettriyarasan

    இது. கடன் வாங்கியவனை விட கொடுத்தவன் சீக்கிரம் போய் சேர வேண்டியது தான் .நகைச்சுவையாக உலக நடப்பை விளித்தவிதம் நல்ல கருத்து

Comments are closed.