லக… லக… ஜோக்ஸ் (82)

நபர்-1: யாரது, டெய்லி ராத்திரி 2 மணிக்கு வந்து உங்களை கூட்டிட்டுப் போறாரு?

நபர்-2: என் ஃப்ரெண்டுதான். அவனுக்கும் தூக்கத்துல நடக்கிற வியாதி; எனக்கும் அதே வியாதி. அதான், ரெண்டு பேரும் சேர்ந்தே நடக்கலாமேன்னு…

==========

மனைவி: ஏங்க, நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டேபோகுது. அவளுக்கு சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா?

கணவன்: அழகா லட்சணமா ஒரு மாப்பிள்ளை கிடைக்கிற வரை காத்திருக்கத்தானே வேணும்?

மனைவி: எங்கப்பா அப்படியா காத்திருந்தார்?

=========

நபர்-1: ஓட்டல் ஓனர் வீட்டுல பொண்ணு பார்க்கப் போனது தப்பாப் போச்சு.

நபர்-2: ஏன்?

நபர்-1: பொண்ணு பிடிக்கலைன்னு சொன்னதும் சாப்பிட்ட பஜ்ஜி, சொஜ்ஜி காப்பிக்கெல்லாம் காசு வாங்கிட்டாரு.

=========

நண்பன்-1: எனக்கு டென்னிஸ் பத்தி எல்லா விஷயமும் தெரியும்.

நண்பன்-2: நெஜமாவா?

நண்பன்-1: நீ வேணும்னா ஏதாவது கேட்டுப் பாரு!

நண்பன்-2: டென்னிஸ் நெட்ல எத்தன ஓட்ட இருக்கும் சொல்லு?

=========

ஆசிரியர்: கும்பகர்ணன் மாதக் கணக்கில் தூங்கினான். இது என்ன காலம்?

மாணவி: கொசுவே இல்லாத காலம் சார்!

==========

About The Author