விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

(சுவையான மின்னஞ்சல் ஒன்றின் தமிழாக்கம்!)

மைக்ரோசாஃப்ட் சான்ஃபிரான்ஸிஸ்கோ கிளையின் புதிய மேலாளர் பதவிக்கான நேர்முகம். ஏறக்குறைய 10000 பேர் கூடியிருந்தனர். அதில் ஒருத்தர் நம் ரமேஷ் ரங்கசாமி. அனைவரும் பரபரப்பாய் இருக்க, நம்மாளோ ஐஃபோனில் பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பில்கேட்ஸ் அறைக்குள் நுழைய, அனைவரும் வணக்கம் கூறி அமர்கின்றனர்.

பில்: வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. ஜாவா தெரியாதவங்க வெளியே போகலாம்.

2000 பேர் வெளியேறுகின்றனர்.

ரமேஷ் தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறார். "எனக்கு ஜாவா தெரியாது. இருந்தாலும் இங்கு இருப்பதால் எனக்கு ஒன்றும் நட்டமில்லை. என்னதான் நடக்கிறதென்று பார்ப்போம்!"

பில்: 100 பேர் உள்ள நிறுவனத்தை நிர்வாகம் செய்த அனுபவம் இல்லாதவர்கள் வெளியேறலாம்.

2000 பேர் வெளியேற, ரமேஷ் முன்பு போலவே சொல்லி, தன்னைத்தானே தேற்றிக் கொள்கிறார்.

பில்: பொது நிர்வாகத்தில் இளங்கலை பட்டம் பெறாதவர்கள் வெளியேறலாம்.

தற்போதும் 2000 பேர் வெளியேற, ரமேஷ் மீண்டும் தனக்குத்தானே அதே பதிலைச் சொல்லிக் கொள்கிறார்.

இப்படியே எல்லோரும் வெளியேற, கடைசியில் ரமேஷும் இன்னொருவரும் மட்டும் இருக்கிறார்கள்.

பில்: முதன் முதலில் மனிதன் பயன்படுத்திய மொழி தெரியாதவர்கள் வெளியேறலாம்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருக்க, "உங்கள் இருவருக்கும் ஆதி காலத்து மொழி தெரியுமெனில் அதில் எனக்கு உரையாடிக் காட்டுங்கள்" என்றார் பில்.

ரமேஷ்: எந்த ஊரு மாப்ளே?

இன்னொருவர் : திருச்சி பக்கம் மச்சி!

About The Author

14 Comments

  1. P.Balakrishnan

    உண்மையிலேயே தமிழ் ஆதிகாலத்து மொழி தான்.

  2. G.M Raj

    தமிழ் மொழிதான் உண்மையிலேயே ஆதிகாலத்து மொழி.

  3. Rishi

    பில்கேட்ஸ் மைக்ரோசாப்டிற்கு மீண்டும் ஆள் எடுக்கிறாரா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். அடுத்த முறை பாஞ்சுருவோம்ல..!

  4. GIRIDHARAN

    னான் நிஜமின்னு நினைச்சேன்ல்டா! மக்கா!

Comments are closed.